Tuesday 31 March 2015

அம்மா நேர்மைன்னா என்னம்மா?
நேர்மையாகத்தான் வாழ முடியவில்லை. அட நேர்மையோடாவாவது ஒரு நாள் இருப்போமே என எண்ணியிருந்தோம்.அதற்கும் தமிழக அரசு ஆப்பு வைத்து விட்டது. 

கடந்த வாரம் தோக்கியோவில் நடைபெற்ற முழுமதி அறக்கட்டளையின் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள மதிப்பிற்குரிய சகாயம் அய்யா அவர்களை அழைத்திருந்தோம். ஆனால் செத்த பாம்பையே ரூம் போட்டு அடிக்கும் தற்போதைய தமிழக அரசு இந்த நல்லவரையா பேச வெளியே அனுப்பும். அதையும் இதையும் சொல்லி பயணத்திற்கான தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து விட்டது.

ஆனாம் நம் சப்பானிய தமிழ் உறவுகள் சோர்ந்து விடக்கூடாது என்பதற்காக விழாவின் முதல் நாள் இரவு பன்னிரண்டு மணிக்கு தமிழகத்தில் உள்ள முழுமதி நண்பர்களை அழைத்து மிக நெடிய செவ்வி ஒன்றினை சகாயம் ஐயா வழங்கி இருக்கிறார்கள். எமது எல்லா கேள்விகளுக்கும் மிகப் பொறுமையாகவும் தெள்ளத் தெளிவாகவும் பதிலுரைத்தார். எமது அடுத்த பதிவில் இதனை பகிர்கின்றேன்.

மேலும் விழா நிகழ்வன்று அவரது அலைபேசியிலிருந்து நேரடியாகவும் எங்களோடு உரையாடினார்.

திரு. சகாயம் ஐயா அவர்கள் அலைபேசி வழியாக வழங்கிய செவ்வி

https://www.youtube.com/watch?v=bYbGmGDndkw

உங்களின் உரையினை கேட்டபோது எனக்கு இக்குறள் தான் நினைவுக்கு வந்தது.

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

இன்று நம் வானில் கரும் மேகங்கள் சூழ்ந்துள்ளது. நாளைய விடியலில் அவை தூசு போல பறந்தோடும். நீங்கள் இதே சப்பானிய மண்ணில் பெரும் எழுச்சியுரை நிகழ்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் திண்ணம்.

நன்றியும், வணக்கமும்,
பி.சுதாகர்

No comments:

Post a Comment