Saturday 19 December 2015


ஜப்பான் ஏன் முன்னேறிய நாடாக உள்ளது- 6


போன வாரம் எங்கள் நோதா நகர‌ பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையத்திற்கு சென்று இங்கிலாந்துக்கு ஐந்து பெட்டிகளில் பொருட்களை அனுப்ப சென்றிருந்தேன். 

அங்கிருந்த தபால் நிலைய அதிகாரி, நீங்கள் ஏன் பெட்டியினை கடினப் பட்டு சுமந்து வருகிறீர்கள். தொலைபேசியில் அழைத்து முகவரியினை சொன்னால் நாங்களே நேரில் வந்து எடுத்து கொள்கிறோம் என்று சொன்னார். 

இன்று தொலைபேசியில் அவர்களை அழைத்து நேரில் வந்து பார்சலை எடுத்து கொள்ள முடியுமா என கேட்டேன். எந்த நேரத்தில் வர வேண்டும் என்ற நேரத்தினை பதிவு செய்து கொண்டு, தற்போது நேரில் வந்து பதிமூன்று பெட்டிகளையும் எடுத்துக் கொண்டார்கள். 

 சுமார் ஐம்பது வயதை ஒத்த பெண்மணி ஒருவர் மட்டுமே தபால் நிலைய வண்டியினை ஓட்டி வந்திருந்தார். பொறுமையாக எல்லா பெட்டிகளையும் எடை போட்டு தேவையான எல்லா வேலைகளையும் அவரே செய்தார். அத்தனை பெட்டிகளையும் அவரே வண்டியில் தூக்கி வைத்தார். உதவிக்கு சென்ற என்னையும் தடுத்து விட்டார். இறுதியில் மொத்த கட்டணத்தில் பத்து சதவிகிதம் தள்ளுபடியும் வழங்கினார். மிக ஆச்சரியமாக இருந்தது.

இந்தியாவில் உள்ள தபால் நிலையங்களில் இது போன்று வசதிகளை கொண்டு வந்தால் நேரில் சென்று பொருட்களை எடுத்து கொள்ளும் வசதி இருந்தால் தனியார் தபால் சேவை நிறுவனங்களை காட்டிலும் அதிக லாபத்தினை ஈட்ட முடியும். மேலும் நிறைய பொருட்களை அனுப்புபவர்களுக்கு அவர்கள் இடத்தில் இருந்தே வேலையினை முடிக்க ஏதுவாக இருக்கும்.   
Postal parcel service, Japan Post (JP), spot pick up from my research centre. 

Postal parcel service, Japan Post (JP), spot pick up from my research centre. 


1 comment:

  1. இங்குள்ள ஒரே பிரச்சனை என்ன தெரியுமா? எதையும் உங்களுக்கு முழுமையாக தந்து விடக்கூடாது. அப்படி தந்து விட்டால் என் அதிகாரம் பறிபோய் விடும். பிரச்சனை இருந்தால் தானே கேள்வி கேட்க மாட்டாய். ஓட்டுப் போட மட்டும் போதும் இது அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பது. பொருட்கள் மட்டும் வாங்க நீ என்று பெரிய நிறுவனங்கள் எதிர்பார்ப்பதும் இதற்காகத்தான் தான்.

    ReplyDelete