Monday 5 December 2016

ஒரு பேரியியக்கத்தின் அஸ்தமனம்


திராவிட இயக்கங்கள் எத்தனையோ தலைவர்களை கண்டுள்ளது. அதில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் முதல்வர் செல்வி. ஜெயலலிதா.

விருப்புகளும், வெறுப்புகளும் தன்னை சூழ்ந்திருந்தாலும் தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு (69%) தொடங்கி, மருத்துவ படிப்பில் மாநில அரசின் உரிமையினை நிலை நாட்டுவது வரை மத்திய நடுவன் அரசின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தின் வாயிலாக சட்டப் போராட்டத்தை நிகழ்த்தியவர்

தமிழகத்தின் மாட்சிமை மிகு முதல்வர் அதிகாரப் பதவிக்கு பெண்கள் வர முடியும் என நிரூபித்தவர்.

மருத்துவ சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இரண்டு மாதத்திற்கும் மேலாக அனுமதிக்கப்பட்டு வந்த சூழலில் இன்று தன்னுடைய 68வது (1948-2016) வயதில் இம்மண்ணுலக வாழ்வை நீத்தார்.

முதல்வரின் இந்த இழப்பினால் தவிப்புறும் அதிமுக கழக தொண்டர்களுக்கும், அவர் மீது எல்லையற்ற அன்பை வைத்திருக்கும் வெகுசன மக்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்கள்.

ஜெ.வின் மறைவு ஒரு பேரியியக்கத்தின் அஸ்தமனம்.


One of the notable leaders in south India, and chief minister of Tamilnadu honorable J.Jeyalalitha passed away. Heartfelt condolences and pray for her soul rest in peace.


Tamilnadu Cheif Minister Hon. J. Jayalalitha (1948-2016)

No comments:

Post a Comment