Sunday, 6 October 2019

ஆடிசம் குறைபாடுள்ள குழந்தைகளை புரிந்து கொள்ளும் புத்தகங்கள்


அவந்தியின் வகுப்பில் காயா என்னும் சிறுமி படிக்கிறார்.

காயாவிற்கு 4 வயது இருக்கும் போதுதான் அவருக்கு ஆட்டிசம் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குழந்தைகளின் புத்தக உலகம் கற்பனைகள் நிறைந்த கதாநாயக வழிபாட்டையே முன் வைக்கிறது. அதில் வரும் கதாநாயகர் அல்லது கதாநாயகி பாத்திரங்கள் புத்திக் கூர்மையுள்ளவர்களாகவும், சாகசக்காரர்களாக மட்டுமே காட்டப்படுகிறார்கள்.
பெரும்பாலும் குழந்தைகளுக்கான புத்தக உலகில் ஆடிசம் குறைபாடுள்ள கதாபாத்திரங்கள் கதாநாயகர்களாக காட்டப்படுவதில்லை. அவ்வாறு வெளி வந்த புத்தகங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

இதனை முன் வைத்து காயாவின் தந்தை ஜான் ராபர்ட் தன் மகளுடனான அனுபவத்தை ஒரு புத்தகமாக எழுதினார் (Through The Eyes of Me). ஜான் ராபர்ட் ஒரு வெப் டெவலப்பர்.  எழுத்தாளராக எந்த ஒரு அனுபவமும் இல்லாத ஒருவரை எழுத்தாளராகி இருக்கும் அதிசயத்தை காயா ஏற்படுத்தி இருக்கிறார்.




கடந்த ஆகஸ்ட் மாதம் ஆடிசம் குறைபாடு உள்ள தனது நண்பரின் மகளை முன் வைத்து ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.  இது அவரது இரண்டாவது புத்தகம்.

எதார்த்தத்தில், காயா போன்ற ஆடிசம் குறைபாடு உள்ள குழந்தைகளை அக்குறைபாட்டில் இருந்து மீட்க பள்ளியின் ஒத்துழைப்பு மிக அவசியம். குறிப்பாக இத்தையக குறைபாடுள்ள‌ குழந்தைகளுடன் உடன் பயிலும் குழந்தைகளுக்கு இது குறித்த புரிதல் வேண்டும். ஆனால், துரதிஸ்டவசமாக ஆடிசம் குறித்த புரிதலை   ஐயங்களை போக்கும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

இந்தப் பார்வையில், தனது  Through The Eyes of Me புத்தகத்தை காயாவின்  பள்ளியில் வாசிக்கத் தந்தார். அக்கட்டுரையினை பள்ளி அசெம்ப்ளி நேரத்தில் அவரது ஆசிரியை ஒருவர் வாசித்தார். அப்புத்தகம் மிக எமோசனலாக இருப்பதோடு அனைவருக்கும் இது பிடித்து விட, இதனை வேல்ஸ் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் சேர்க்கலாம் என‌ உற்சாகப்படுத்தினர்.

காயாவின் தந்தை தற்போது ஆடிசம் குறைபாடு குறித்த குழந்தைகளின் கேள்விகளை முன்வைத்து தற்போது ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறார். விரைவில் அது புத்தகமாக வரும்.

நிச்சயம் இப்புத்தகம் காயா போன்ற பல குழந்தைகளுக்கு அவர்களை அரவணைத்துச் செல்லும் பள்ளித் தோழர், தோழிகளை உருவாக்கும் என நம்புகிறேன்.

வாழ்வியல் அனுபவங்கள் சில நேரங்களில் இலக்கியமாவது உண்டு. அது தரும் செய்தி, உலக இலக்கியம் என்று சொல்லப்படுபவைகளைக் காட்டிலும் மிகச் சிறந்த அனுபவத்தை தரக் கூடியது.

காயாவின் தந்தை ஜான் ராபர்ட் குறித்த பிபிசி இணையதளத்தில் வந்துள்ள செய்தி

https://www.bbc.co.uk/news/uk-wales-49908048

ஜான் ராபர்ட் எழுதிய முதல் புத்தகம் குறித்த யுடியூப் காணொளி
https://www.youtube.com/watch?v=8wNRIUr45f4