Thursday 17 September 2015


நாட்டுபுற கலைகள் ‍- ‍ புதிய  பாதை


நம்ம நாட்டுபுற கலைகள் பத்தி யோசிக்கும் போது நம்ம சரியா வெளி உலகுக்கு மார்க்கெட்டிங் பண்ணலையோன்னு ஒரு  வருத்தம் இருந்து கிட்டே இருந்துச்சு

நான் கொரியாவில் இருந்த போது நம் மதுரை மண்ணை சார்ந்த பானுமதி .எப்.எஸ் அக்கா அவர்கள் இந்திய தூதரகத்தின் கலாச்சார மையத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தார்

ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் இருந்து கலைக் குழுவினை கொரிய தூதகரம் மூலம் அழைத்து கொரியர்களுக்கும், கொரிய வாழ் இந்தியர்களுக்கும் அறிமுகப்படுத்தி கொண்டு இருந்தார்கள்

ஒரு முறை அவர்களிடம் பேசும் போது ஏன் நம் தமிழ் பாரம்பரிய கலைஞர்களான பறை, நாதஸ்வரம், தவில், கரகாட்டம் என அறிமுகப் படுத்தக் கூடது என கேட்டபோது, இந்திய வெளியுறவுத் துறையின் விதிமுறைகளை பொறுமையாக சொன்னார்கள்அதில் நாம் எந்த அளவிற்கு பின் தங்கி உள்ளோம் என்பதையும் சுட்டி காட்டினார்கள்.

அதாவது தமிழகத்தினை ஒப்பிடும் போது வட இந்திய கலைஞர்கள் தங்களுக்கென்று பிரத்யோக இணைய வலைதளம், மற்றும் இந்திய கலாச்சார மையத்தில் பதிவு செய்வது என எல்லாவற்றையும் முறையாக செய்து வைத்துள்ளார்கள். மேலும் எப்படி வெளி நாட்டில் உள்ள தூதரகத்தினை தொடர்பு கொள்வது என பல விசயங்களில் முன்னேறி உள்ளார்கள்

நம் ஊரில் கலைகளுக்கா பஞ்சம். ஆனால் அவர்களை அடுத்த நிலைக்கு அரசும் சரி, நம்ம மக்களும் சரி அடுத்த நிலைக்கு அவர்களை எடுத்து செல்ல வில்லை

தயவு செய்து உங்கள் பகுதியில் உள்ள கலைஞர்களையும் அவர்களது குழுவினரையும் ஊக்குவியுங்கள். அவர்களுக்கென்று பிரத்யோக மின்னஞ்சல், இணைய தளம் என வழி காட்டுங்கள். இதற்கொன்றூம் பெரிய செலவுத் தொகை ஆகப் போவது இல்லை. நிச்சயம் இது அவர்கள் வாழ்வில் புதிய வழியினை நிச்சயம் ஏற்படுத்தும்.

தற்போது ஜப்பானில் உள்ள ஒரு அமைப்பு திண்டுக்கல் சக்தி பறை குழுவினரை ஜப்பானிற்கு அழைத்து இங்குள்ள ஜப்பானியர்களுக்கு பறை இசையினை அறிமுகப் படுத்த இருக்கிறார்கள்இது தமிழர்களாகிய நமக்கு பெருமை தரும் செய்தி.




திண்டுக்கல் சக்தி பறை இசைக் குழுவின் சலாவரிசை, ஜப்பான்.


இது போல  கரகாட்டம், ஒயிலாட்டம், கூத்து, பொம்மலாட்டம், சிலம்பு என எண்ணற்ற தமிழ் கலைகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வர முயற்சி  செய்யுங்கள்இதன் மூலம் இவற்றையும் நாம் வெளி நாட்டவர்களுக்கு அறிமுகம் செய்வதன் மூலம் நம் கலைகளை உலகெங்கும் வார்த்தெடுப்போம்.

திருவிழாக்கள் மட்டுமல்ல, அரசு விழா உள்ளிட்ட நம் வீட்டு விழாக்களிலும்  இவர்களை முன்னிறுத்துவோம்

அழியும் நிலையில் உள்ள நம் தமிழ் கலைகளை காப்பாற்றுவது நம் கடமை.


2 comments:

  1. தமிழ்நாட்டில் உள்ள எந்த பத்திரிக்கையும் இது போன்ற விழிப்புணர்வு விசயங்களைப் பற்றி பேசுகின்றனவா? இப்போது தமிழ் ஹிந்து கொஞ்சம் பரவாயில்லை

    ReplyDelete
  2. //அழியும் நிலையில் உள்ள நம் தமிழ் கலைகளை காப்பாற்றுவது நம் கடமை.//

    இப்போதெல்லாம் கல்யாண மண்டபங்களின் வாயிலில் கேரளா கலைக்குழுவினரை அதிகம் காண முடிகிறது. அதை ஒரு பெருமையாக பேசுவதையும் கண்டேன்.

    நமது கலைகளுக்கும் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதே உங்களை போன்றே எனது விருப்பமும்...

    ReplyDelete