தமிழக வீடுகளின் மின் இணைப்பு வசதி - திராவிடத்தால் வாழ்ந்தோம்
இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் மின் இணைப்பு வசதியை பெற்றுத் தர "சௌபாக்யா யோஜனா" என்ற திட்டத்தை இன்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
நிற்க!
தமிழகத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு கிராமப்புறகளில் மின் வசதியினை இணைக்கும் பணி தொடங்கப்பட்டது. தொடர்ச்சியாக திராவிட ஆட்சிகளில் முன்னெடுக்கப்பட்ட மின் கட்டமைப்பு மேம்பாட்டு வசதிகளால் தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கான மின் இணைப்பு விகிதம் புள்ளிவிபரப்படி
2001 ஆம் ஆண்டு - 78.2%
2007 ஆம் ஆண்டு - 93.4%
2017 ஆம் ஆண்டு - 98.3%
2007 ஆம் ஆண்டு - 93.4%
2017 ஆம் ஆண்டு - 98.3%
இவை எல்லாம் இந்தியே தெரியாத தமிழக ஆட்சியாளர்களால்தான் சாத்தியமானது என யோசிக்கும் போது மொழியின் பெயரால் சல்லியடிக்கும் பொய்யர்களின் முகத்திரை தற்போது கிழிந்துள்ளது.
பெரியார், அண்ணா பெயரால் சமூக திட்டங்கள் தமிழகத்தில் வரும் போதெல்லாம் இலவசத்தால் தமிழகம் சீரழிகிறது என ஒப்பாரி வைக்கும் கூட்டத்திற்கு இப்போது மோடியின் யோஜனா அறிவிப்புகள் மயிர் கூச்செறிய வைக்கிறது.
இந்தியை தாய்மொழியாக அல்லது அலுவல் மொழியாக கொண்ட மாநிலங்களில் வீடுகளுக்கு தரப்பட்டுள்ள மின் இணைப்பு வசதியின் விகிதம் 2017 ஆம் ஆண்டு புள்ளி விபரப்படி,
பீகார் 58.6%
உத்திர பிரதேசம் 70.9%
மத்திய பிரதேசம் 89.9%
அரியனா 91.7%
ஜார்கண்ட் 80.1%
மகாராஸ்ட்ரா 92.5%
ராஜஸ்தான் 91%
உத்திரகான்ட் 97.5%
உத்திர பிரதேசம் 70.9%
மத்திய பிரதேசம் 89.9%
அரியனா 91.7%
ஜார்கண்ட் 80.1%
மகாராஸ்ட்ரா 92.5%
ராஜஸ்தான் 91%
உத்திரகான்ட் 97.5%
2017 ஆம் ஆண்டில் மோடி சொல்வதை 35 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் தொடங்கியதன் விளைவு இன்று 98.3% மின் இணைப்பு வசதியினை தமிழகம் பெற்றுள்ளது.
இந்தியை தாய்மொழியாக, அலுவல் மொழியாக கொண்ட மாநிலங்களை விடவும் இந்தி மொழியே தெரியாத தமிழகத்தின் வீடுகள் மின் இணைப்பினைப் பொறுத்த வரை அதிக தன்னிறைவை அடைந்துள்ளது. ஆகையால் இந்தி படித்தால் வடக்கே வேலை கிடைக்கும் என்ற பொய்யுரைகளை வழி மொழியும் கூட்டத்திடம் இருந்து விலகி நில்லுங்கள்.
இந்தியாவின் "செளபாக்யா யோஜனா" போன்ற தன்னிறைவு தேடும் திட்டங்களுக்கு நிரூபணம் செய்யப்பட்ட தமிழகம் எப்போதுமே முன் மாதிரிதான். அந்த வகையில் தமிழர்கள் உங்கள் முதுகில் நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள்.
தமிழ் ஒன் இந்தியா இணைய இதழில் பிரசுரிக்கப்பட்ட இக்கட்டுரையின் சுட்டி
No comments:
Post a Comment