Saturday 13 March 2021

மகளிர் நலனில் திமுக தேர்தல் அறிக்கை

அரசுப் பணிகளுக்குச் செல்லும் பெண்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் 9 மாத பேறுகால விடுமுறையை 12 மாதங்களாக உயத்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். - திமுக, 16 வது சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை இத்திட்டம் எதிர்வரும் கழக ஆட்சியில் அமலுக்கு வந்தால் உலகிலேயே முழு ஊதியத்துடன் (100%) கூடிய‌ நீண்ட மகப்பேறு விடுமுறை (48 வாரங்கள்) தரும் நாடுகளுடன் ஒப்பிடத்தக்க பட்டியலில் தமிழகம் இடம் பிடிக்கும். ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF)அறிக்கையின் படி தற்போது உலகின் அதிகமான மகப்பேறு கால விடுமுறை ஊதியத்துடன் வழங்கும் நாடுகளின் முதன்மையானது ஐரோப்பாவில் உள்ள எஸ்தோனியா (Estonia) நாடு. ஏறத்தாழ, 72 வாரங்கள் மகப்பேறு விடுமுறை அளிக்கிறது. ஆனால் முழு ஊதியத்தோடு விடுமுறை வழங்குவதில் பல வரையறைகள் உள்ளன. இதற்கு அடுத்ததாக ஹங்கேரி (Hungary) நாட்டை சொல்லலாம். ஆனால், ஹங்கேரி மகப்பேறு காலத்தின் முதல் ஆறு மாத காலம் முழு ஊதியமும் பிறகு வரும் மாதங்களுக்கு பகுதி ஊதியம் அல்லது குழந்தை பரமாரிப்பிற்கான உதவியை செய்கிறது. இந்த வரிசையில் பல்கேரியா (Bulgaria), ஸ்வீடன் (Swedan), நோர்வே (Norway), லித்துவேனியா (Lithuania) போன்ற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடலாம். இவை அனைத்தும் ஒரு வருடம் அல்லது அதற்கு மேலாக பேறு கால விடுமுறை அளிக்கிறது. மேலே சொன்னது போல் மகப்பேறு காலத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு முழு ஊதியமும், எஞ்சிய கால கட்டத்திற்கு பகுதி ஊதியமும் வழங்கப்படுகிறது. தற்போதைய சூழலில் ஒரு வருட காலத்திற்கு முழு ஊதியத்தோடு கூடிய மகப்பேறு விடுமுறை அளிக்கும் நாடுகளோடு ஒப்பிடும் போது எதிர்வரும் கழக அரசு மூலம் தமிழகம், குரோசியா (Croatia), செரிபியா (Serbia) நாடுகளுக்கு இணையான‌ இடத்தைப் பிடிக்கும். ஏனெனில் ஒரு வருடம் முழு ஊதியத்தோடு கூடிய மகப்பேறு விடுமுறை அளிப்பதில் இவ்விரு நாடுகளும் தனித்த இடத்தை பிடித்துள்ளது. ஆனால் நிலப்பரப்பு மற்றும் மக்கள் தொகையினை ஒப்பிடும் போது, கொரொசியா நாட்டின் மக்கள் தொகை 40 லட்சம், செரிபியா நாட்டின் மக்கள் தொகை 70 லட்சம். தமிழகத்தின் மக்கள் தொகை தோராயமாக 6.8 கோடி அதாவது குரோசியாவை ஒப்பிடும் போது 17 மடங்கும், செரிபியாவை ஒப்பிடும் போது 10 மடங்கும் அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு மாநில அரசு இப்பணியை செய்வது என்பது மகத்தானது. குறிப்பாக ஒன்றிய அரசின் உதவியின்றி மாநில வருவாய் ஆதாரங்களைக் கொண்டு இத்திட்டம் நிறைவேற்றப்படுவது எளிதான காரியம் அல்ல. இந்த வகையில் பார்த்தால் குரோசியா, செரிபியா நாடுகளை விடவும் நாம் சமூகநீதிக்கான பணியில் முன்னோடியாகும் வாய்ப்பினைப் பெறப் போகிறோம். சுவாரசியாமன தகவல்கள்: - ஜப்பான், ஸ்வீடன் உள்ளிட்ட சில நாடுகளில் தந்தையரும் மகப்பேறு விடுமுறையில் பங்கு பெற முடியும். - உலகின் பலம் பொருந்திய நாடுகளில் முதன்மையான அமெரிக்காவில் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை இல்லை. - பிரித்தானியா மகப்பேறு விடுமுறை நலத்திட்டங்கள் தரும் நாடுகளில் 34 வது இடத்தில் உள்ளது. முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை என்பது பெண்களுக்கு 100% பணிப் பாதுகாப்பை வழங்குவதோடு, ஆரோக்கியமான சமூகத்தை (healthy community) கட்டமைக்கவும் உதவுகிறது. இந்த வகையில் திமுகவின் தேர்தல் அறிக்கை எதிர் வரும் தேர்தலில் கதாநாயகன் என சொல்லலாம். ஐக்கிய நாடுகளின் வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்கள் (UN’s Sustainable Development Goals- SDG) என வரையறுக்கப்பட்ட 17 நிலையான வளர்ச்சி குறிக்கோள்களில் திமுக அறிவித்துள்ள‌ இத்திட்டம் ஐந்து முக்கிய குறிக்கோள்களை பூர்த்தி செய்யவல்லது. - குறிக்கோள் எண் 1 (ஏழ்மை இன்மை), - குறிக்கோள் 3 (நல்ல ஆரோக்கியம்), - குறிக்கோள் 5 (பாலின சமத்துவம்), - குறிக்கோள் 8 (நல்ல பணிகள்), - குறிக்கோள் 10 (சமமின்மையை குறைத்தல்). திமுக தேர்தல் அறிக்கை வளர்ந்த நாடுகளுக்கும் முன்னோடியாக இருக்கப் போகிறது என்று சொன்னால் மிகையில்லை. டாக்டர் சுதாகர் பிச்சைமுத்து M.Sc., M.Phil., Ph.D, FRSC பிரித்தானியா

No comments:

Post a Comment