Friday, 3 April 2015

சப்பானின் வசந்த காலம் - கனாமி (花見)


தற்போது மார்ச் மாத இறுதியில் துவங்கி ஏப்ரல் மாதம் முழுவதும் சப்பானில் வசந்தகாலம். ஏறத்தாழ ஐந்து மாத பனிகாலத்திற்கு பிறகு சூரிய வெளிச்சமும் நீல நிற வானமும் மக்களை குளிரிலிருந்து அடுத்த பருவகால நிலைக்கு தயார் செய்கிறது. 


வசந்தத்தினை வரவேற்கும் விதமாக சப்பானியர்கள் ஹனாமி (花見) என்னும் விழாவினை கொண்டாடுகிறார்கள். ஹனா என்றால் பூக்கள் என்று பொருள். ஹனாமி என்றால் பூக்களை பார்த்தல் அல்லது அவைகளோடு உறவாடுதல் எனப் பொருள்.  பனிகாலம் முடிந்த உடன் வெற்று உடம்பாய நிற்கும் செர்ரி மரங்களின் கிளைகளில் மார்ச் மாத துவக்கத்தில் அரும்புகள் துளிர்க்கின்றன. மெதுவாய் காம்புகள் பிடித்து வெண்மையும், இளஞ்சிவப்பு நிறத்திலும் பூக்கள் இதழ் விரிக்கின்றன. பெரும்பாலும் மார்ச் மாத இறுதியில் பூக்கும் செர்ரி பூக்கள் சகுரா என்றழைக்கப்படும் (桜  அல்லது  櫻; さくら)


 Cherry blossom, March 1-4, 2015

  Cherry blossom, March 1-4, 2015
 Cherry blossom, March 1-4, 2015
  Cherry blossom, March 1-4, 2015
  Cherry blossom, March 1-4, 2015, Tokyo University of Science
  Cherry blossom, March 1-4, 2015, Tokyo University of Science
  Cherry blossom, March 1-4, 2015, Unga village River
   Cherry blossom, March 1-4, 2015, Library, Tokyo University of Science
Cherry blossom, March 1-4, 2015, Library, Tokyo University of Science

வசந்த காலத்தில் எங்கு நோக்கினும் பஞ்சுமிட்டாய் வண்ணத்தில் சாலைகளின் இருமங்கிலும் சகுராக்கள் சிரிப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். சப்பானியர்கள் சகுரா மலர்களை வசந்தத்தின் குறியீடாகவே பார்க்கிறார்கள்.  குடும்பமாகவோ அல்லது நண்பர்கள் புடைசூழ சகுரா மரத்தின் அடியில் அமர்ந்து உணவருந்துவது ஹனாமி விழாவின் சிறப்பம்சம். கையடக்கமான மண் குடுவைகளில் சாக்கே எனப்படும் சப்பானியரின் உற்சாக பானத்தினை அருந்துவது இன்னும் கூடுதல் சிறப்பு. சகுரா மலர்கள் பூத்திருக்கும் இந்த செர்ரி மரங்கள் வயதான பெரியவர்களுக்கு சமம். தங்கள் இன்ப துன்பங்களை சகுரா மரங்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். நன்கு வயது முதிர்ந்த செர்ரி மரங்கள் ஒரு கைதேர்ந்த பூக்காரியைப்போல் இடைவெளியின்றி நெருக்கமாய் பூக்களை பூக்கும். இளம் வயதுடைய மரங்களோ இடைவெளிகளோடு பூக்களை நெய்யும். மே மாத வாக்கில் இந்த பூக்களே இலைகளாக மாறிவிடும். குறுகிய காலத்தில் மட்டுமே காணப் பெறும் இந்த சகுரா மலர்களை  இங்குள்ள மக்கள் தங்கள்  அபிலாசைகளை இயற்கையிடம் எடுத்துச்  செல்லும் இயற்கையின் தூதுவர்களாக பார்க்கிறார்கள்

பல நூற்றாண்டுகளாய் சகுரா மலர்கள் சப்பானிய ஹைக்கூ கவிதைகளில் பாடு பொருளாக உள்ளது. சகுரா வெறும் மலர் மட்டுமல்ல அது ஒவ்வொரு சப்பானியனின் வாழ்வியல் குறியீடு..


Ukiyo-e painting from Tale of Genji, ch. 20 - 花宴 Hana no En, "Under the Cherry Blossoms", by artist Kunisada(1852). Courtesy Wikipedia.

Ladies in the Edo palace enjoying cherry blossoms. Courtesy Wikipedia.


さすが花ちるにみれんはなかりけり
எந்த கவலையுமின்றி
சகுரா பூக்கள்
வீழ்கிறது...
- ஹைக்கூ (கோபாயாசி இசா)தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகம்
நோதா வளாகம், சப்பான்

No comments:

Post a Comment