Tuesday 31 March 2015

காலத்தை கடந்து செல்லும் ப்ளமென்கோ நடனம் (Flamenco Dance)

துள்ளல் நடனமும், அடிக்குரலில் மனதை மயக்கும் பாடல்களும் ஸ்பெயின் தேசத்தில் எங்கும் விரவிக் கிடக்கிறது. குறிப்பாக சொல்லப் போனால் ப்ளமென்கோ நடனம் (Flamenco Dance ) மிகமுக்கியமான, ரசிக்க வேண்டிய ஆர்ப்பாட்டமான நாட்டுப்புற நடனம். மகிழ்ச்சி, துக்கம், கோபம் என கலவையான எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தும் இந்த நாட்டுபுற பாடல் வடிவம் (folklore) ஜரோப்பாவின் மத்திய கால (Medieval period) கட்டத்தில் ஸ்பெயினுக்கு வந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ப்ளமென்கோ நடனத்தின் சிறப்பே கால்களால் ஓசை எழுப்பியும், அதற்கு இணையாக உடன் பாடுவோர் கைஒலி எழுப்பியும் பார்பவர்களை பரவசப்படுத்துவதே.. நவீன ப்ளமென்கோ நடனத்தில் கிட்டார் சேர்ந்துள்ளது... வரலாற்றின் அடிப்படையில் இந்த நாட்டுபுற நடனம் இந்திய நாடோடிகளிலிடமிருந்து வந்திருக்கலாம் என்று கருதுகிறார்கள். மேலும், இது அராபியர்கள், யூதர்கள் மூலமும் ஸ்பெயினுக்கு வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.. தற்சமயம் நான்கு வகையாக நடனம் காணப்பெறுகிறது (அதன் மூலத்தினை சார்ந்து)..

கிரானாடாவில் (Granada, Spain) உள்ள ஜார்டினெஸ் தே ஜோராயா (Jardines de Zoraya) என்ற இரவு உணவு விடுதியில் ப்ளமென்கோ நடனத்தினை காணும் வாய்ப்பு கிட்டியது.. கேட்க ஆரம்பித்தவுடன் நிறைய தமிழ் பாட்டு மெட்டுகள் . நினைவில் வந்து போயின (ஏய் ஸப்பா, ஏய் ஸப்பா நினைச்ச கனவு பலிக்காதா.)..நடனம் முடிந்ததும் நடன குழுவினருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்..நான் இந்தியாவிலிருந்து வந்திருக்கின்றேன் என்று தெரிந்ததும் அவர்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.. ஒரு இந்தியா நாடோடியின் சமூகத்தின் நாட்டுப் புற பாடல்கள் இன்றும் ஸ்பெயினில் காலத்தினை கடந்து நவீனத்துவத்தோடு மிளிர்கின்றது...

ஏராளமான அடவுகளையும், கட்டியங்களையும் உள்ளடக்கிய நம்மின் பல நாட்டுபுற நடனங்கள் (பறையாட்டம், ஜமாப்பு, கரகாட்டம், புலியாட்டம், தேவராட்டம், பொய்கால் குதிரை, கூத்து) இன்று சாதிய அடையாளங்களோடு கலந்து போய் நலிவுற்று அழிந்து கொண்டிருக்கின்றன.. கார்பரேட் பெரு வெள்ளத்தில் காணாமல் போய் கொண்டிருக்கும் நம் வெகு சன மக்களையும், கலையினை தெய்வமாய் கருதி இன்றும் வருமையில் உளன்று கொண்டிருக்கும் நம் நாட்டுப்புற கலைஞர்களை காப்பாற்ற வேண்டியது நம் சமூக கடமை மட்டுமல்ல, உடனடி தேவையும் கூட...

http://www.youtube.com/watch?v=DuJWMxRyV8c&feature=em-upload_owner

http://www.youtube.com/watch?v=GBR7Efr5Tvo&feature=youtu.be

http://www.youtube.com/watch?v=pDe0rugfeXI&feature=youtu.be

No comments:

Post a Comment