Tuesday, 31 March 2015

பிளமிங்கோ பாடல்

ஸ்பானிஸ் மொழியில் கிடைக்கும் பிளமிங்கோ பாடல்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம்..

பிரிவின் வலியினைச் சொல்லும் நாடோடிகள் வகையினை சார்ந்த பிளமிங்கோ பாடல் ..
https://www.youtube.com/watch?v=Scus9teTdjo

முதலில் ஒரு நிமிடத்திற்கு வரும் கிடார் இசையை கேட்டு பாருங்கள்..

2 comments:

  1. அண்ணா..
    இப்பாடல் லாட்சோ ட்ரோம்- பாதுகாப்பான பயணம் (LATHCHO DROM -SAFE JOURNEY) என்ற பாடத்தில் வரும் ஒரு பாடலாகும் (பாடியவர் லா காய்டா La Caita). இப்படம் ஜிப்சி என்று சொல்லகூடிய நாடோடி மக்களது புலம்பெயர்வை வெவ்வேறான நாடுகளுக்கேற்ற இசை நடனத்துடன் வெறும் காட்சித்தொகுப்பாக விளக்குவதாயும் அதேசமயத்தில் அவர்களது அன்றாட வயிற்றுபாட்டையும், அவர்களின் மீதான மற்ற குமுக மக்களின் இழிந்த பார்வையயும், அவர்களது நெருக்குதலையும் காட்சிப்படுத்துகிறது.
    வட இந்தியாவில் துவங்கி இறுதியில் அய்ரோப்பா வரையிலான ஜிப்சி மக்களது கலைவடிவம் ஒரு பலவாறான பிரதேசங்களின், நாகரீகங்களின் கலைகள் கலக்கும் ஒரு melting pot ஆக (இதற்கு சரியான தமிழ் பதம் தெரியவில்லை மன்னிக்கவும்) இருப்பது மிக வியக்கத்தக்க விடயமாகும். சார்லஸ் டார்வின் பிராணிகளிடத்தில் பரிணாம ஆய்வு செய்தது போல் யாரேனும் ஜிப்சிகளின் கலைவடிவம் கொண்டு ஆய்வு செய்தால் நாகரீகங்களின் தொன்மை தொடர்புகள் விரிவாக அறியவருமென்பது என் எளிய கருத்து. இரண்டாம் உலகப்போரில் யூதர்களைவிட அதிகமான ஜிப்சிகள் படுகொலை செய்யப்பட்டனர் ஆனால் யாரும் அது கருத்தில் கொள்ளவும் இல்லை அவர்களுக்கு நிவாரணம் பெற்றுத்தரவுமில்லை. அதுசரி நான் கூறவந்த கதையைவிட்டு வேறேதோ உளறிக்கொண்டு இருக்கிறேன்.
    இந்த ஆவணப்படத்தை தாங்கள் பின்னொரு ஓய்வான சமயம் முழுதாய் கண்டுற்றபின் விரிவான ஒரு விமர்சனம் தரவும். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
    Latcho Drom- படத்திற்கான இணைப்பு.
    ஒரு வழிப்போக்கன்.

    ReplyDelete
  2. https://www.youtube.com/watch?v=RbWNJVVbGTI

    ReplyDelete