Tuesday 31 March 2015

ஜப்பான் ஏன் முன்னேறிய நாடாக உள்ளது?

சென்ற வாரம் என் ஜப்பானிய பல்கலைக் கழக தலைவருடன் ( President, Tokyo University of Science) ஒரு முக்கியமான சந்திப்பு இருந்தது. அவர் எனக்கு கொடுத்திருந்த நேரத்திற்கு நான் அவரது அறை முன் காத்திருந்தேன். அவரது அறை திறந்துதான் இருந்தது. ஆனால் அறையில் அவரை காணவில்லை. காரியதரிசகளிடம் கேட்டால் தெரியவில்லை என்று சொல்லி விட்டார்கள். பொதுவாக ஜப்பானியர்கள் கால தாமதமாக வர மாட்டார்கள் மேலும் நேரத்தினை பொன் போல கருதுபவர்கள். சரி என்று ஜந்து நிமிடம் காத்திருந்தேன்..

திடீரென கையில் இரண்டு உணவுப் பொட்டல்ங்களுடன் அவரது அறையினை நோக்கி வந்து கொண்டிருந்தார். அருகில் உள்ள சிற்றுண்டி கடைக்கு அவரே நேரில் சென்று தனக்கு மதிய உணவு வாங்க சென்றிருப்பார் போல. நான் நமது ஊர் நாகரிகப்படி, ஜயன்மீர் தாங்கள் மதிய உணவு அருந்தி முடியுங்கள் நான் 15 நிமிடம் கழித்து வருகிறேன் என்றேன். சட்டென அவர் கோபப்பட்டு அடுத்த 15 நிமிடத்தில் நான் இங்கிருந்து கிளம்பி அடுத்த சந்திப்பிற்கு செல்ல வேண்டும். ஆகையால் எனது உணவு இடைவேளையின் போதே தங்களுக்கு நான் சொல்ல வேண்டிய விடயங்களை சொல்லி விடுகின்றேன். குறித்து கொள்ளுங்கள் என்றார். மிக முக்கியமான ஆராய்ச்சி குறிப்புகளை கொடுத்து விட்டு அவரது அறையினை பூட்டி விட்டு அருகில் உள்ள மெட்ரோ இரயில் நிலையத்திற்கு நடந்து சென்று விட்டார். இத்தனைக்கும் அவருக்கு எங்கள் பல்கலை கழகத்தில் உயர் ரக மகிழ்வுந்து ஒன்று கொடுத்துள்ளார்கள். ஏன் நீங்கள் மகிழ்வுந்தில் செல்லலாமே என்று கேட்டேன். அதற்கு அவர் வாகன நெரிசலில் எமது பகுதியிலிருந்து டோக்கிய நகரின் மைய பகுதிக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாது, மேலும் தனக்கான உடற்பயிற்சியும் செய்தது போல் ஆகிவிடும் என்றார். எங்கள் பல்கலைக் கழகத்திற்கு 5 வளாகங்களும் (campus), அவற்றில் ஏறக்குறைய 40000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கிறார்கள்.

இப்பொழுதுதான் தெரிகிறது ஏன் ஜப்பான் இன்று உலக அளவில் முன்னேறிய நாடாக விளங்குகிறது என்று.

இன்று மதுரை காமராசர் பல்கலைக் கழக துணைவேந்தர் திருமதி கல்யாணி அவர்களுக்கு கொடுத்த தேவையற்ற விளம்பரத்தினை பார்த்தால் நம் தேசம் உருப்பட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது

சமீபகாலமாக தமிழகத்தின் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் என்றே தெரியவில்லை. இவர்களுக்கு எத்தையக தொலைநோக்கு பார்வை இருக்கும் என்று தெரியவில்லை.

நம் தமிழக பல்கலைக் கழகங்களின் எதிர்காலத்தினை நினைத்தாலே வேதனையாக உள்ளது..

No comments:

Post a Comment