Friday 13 March 2015

சப்பானில் தற்போது குளிர் காலம்.

சப்பானில் தற்போது குளிர் காலம். எல்லா ரயில் நிலையங்களிலும் நடைமேடையில் காத்திருப்போர் அறை இருக்கும். இந்த அறையினை வெப்பமூட்டும் வகையில் அமைத்து இருப்பார்கள். பெரும்பாலான குளிர் நாடுகளில் நடைமுறையில் உள்ளதுதான். ஆனால் இன்று மினாமி நகரியாமா (Minami Nagariyama) என்ற ரயில் நிலையத்தில் இருக்கும் நடைமேடையில் காத்திருப்போர் அறைக்கு வெளியில் போடப்பட்டிருந்த பயணிகள் நாற்காலிகளில் பயணிக்களுக்கு மிதமான சூடு இருக்கும் வகையில் மிருதுவான மெத்தைகளை போட்டு வைத்திருந்தார்கள். வெளியில்தானே கிடக்கிறது என யாரும் அதை எடுக்கவோ அல்லது அதனை சேதப்படுத்துவதோ இல்லாமல் அழகாக பராமரிக்கிறார்கள்.


எங்கள் கரூர் நகரில் சர்ச் கார்னர் என்ற பகுதி பிரசித்தமானது. அங்குள்ள பயணிகள் நிழற்குடையில் உள்ள இரும்பு நாற்காலிகளை நம்மவர்கள் இரவோடு இரவாக அறுத்து எடுத்து சென்று விடுகிறார்கள் (இத்தனைக்கு அந்த நாற்காலி மண்ணோடு இருக்கமாக பொருத்தப்பட்டுள்ளது). ஒவ்வொரு முறையும் நாற்காலி காணாமல் போன பின்பு நகராட்சி நிர்வாகம் புது நாற்காலிகளை போடும். இப்படி ஒரு மாத காலத்தில் பல நாற்காலிகள் போடுவதும் திருடுவதுமாக இருந்தது..

பொது சனங்களே, இத எடுத்து போய் என்னதான்யா பண்ணுவீங்க.வயதான முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் எல்லாம் எப்படி உட்கார்வார்கள் என ஒரு நிமிடம் சிந்திக்க மாட்டீர்களா?
நம்மா தியேட்டர்காரங்க ஏன் குடிக்கிற தண்ணீர் டம்ளர சங்கிலில கட்டி தொங்க விட்டு இருக்காங்கன்னு இப்பதான் புரியுது

No comments:

Post a Comment