Monday, 16 March 2015

சர்வதேச செயற்கை ஒளிச்சேர்க்கை கருத்தரங்கின் ( International Conference on Artificial Photosynthesis 2014

 
கருத்தரங்கின் ஒரு பகுதியாக விருந்து நிகழ்ச்சியின் (banquet) பொழுது சப்பானிய பாரம்பரிய நடனம் நடைபெற்றது, அதில் கலந்து கொண்டு சிறப்பாக நடனம் ஆடுபவர்களுக்கு உள்ளூர் மாஸ்டர் விசிறி பரிசாக தருவதாக அறிவித்தார்.

நம்மூர் குத்து நடனத்தினை அரங்கேற்றும் பொருட்டு சவாலை ஏற்று ஆடி விசிறியினை பரிசாக பெற்றது மிக்க மகிழ்ச்சி அளித்தது.. இந்நிகழ்ச்சியில், நோபல் பரிசாளர் பேராசிரியர் ஈச்சி-நெகிசி (Prof. Ei-ichi Negishi, Nobel Prize winner in Chemistry 2010) அவர்களோடு ஒரே மேடையில் நடனம் ஆடியது என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று..(கோட்டு சூட்டு போட்டதால நம்ம ஸ்டைல காட்ட முடியல...ம்ம்ம்ம்)









எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பறையடிக்கும் இசைக்கு நடனம் ஆடும் அந்த அழகிய தருணங்கள் என்னை எப்போது உயிர்போடு வைத்திருக்கும்..ஆடி முடிந்ததும் நடனம் ஆடியவர்கள் நீங்கள் நன்றாக ஆடினீர்கள் என்றார்கள்..எங்க ஊருக்கு வாருங்கள் இதை விட ஊடு கட்டுவோம் என சொல்லி நம் நம் ஊர் நடனத்தினை விளக்கி சொன்னேன்..

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூத் தட்டு நிகழ்ச்சிக்கு நடனம் ஆடுவது எங்க ஊர் மக்களுக்கு ஆஸ்கார் விருதுக்கு சமம்..
அடுத்த வருசம் ஊர்த் திருவிழாவிற்காவது செல்ல வேண்டும்..மகமாயிதான் கண்ண தொறக்கனும்..

No comments:

Post a Comment