மாடித்தோட்டங்கள் (Roof top Garden)
ஜப்பானியர் கணக்குப்படி, மாடித்தோட்டம் அமைப்பதன் மூலம் நகரத்தில் உள்ள 50 சதவீதம் கட்டிடங்களை பசுமையாக்கினால் தட்பவெப்ப நிலை 0.1-0.8 செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள் ளதாக கூறுகின்றனர். 1. இடம் மிக குறைவாக உள்ள நகரவாசிகள் செங்குத்தான தோட்டம் அமைத்தும் பயன்பெறலாம். அதா வது படர்ந்து செல்லக்கூடிய காய்கறி செடிகளையோ அல்லது பூச்செடிகளையோ வளர்க்கலாம். 2. மாடித் தோட்டங்களில் தக்காளி, வெண்டை, கத்தரி, பாகற்காய், பீன்ஸ், கொத்தமல்லி, புதினா, வெங்காயம், கீரை வகைகள் போன்ற பல காய்கறிகளை வளர்க்கலாம். 3. பூச்செடிகளான ரோஜா, மல்லிகை, செண்டுமல்லி, சாமந்தி, சம்பங்கி மற்றும் அழகு செடிகளையும் வளர்க்கலாம். 4. இவைகள் தவிர வாழை, பப்பாளி போன்ற பழ மரங்கள், துளசி, வல்லாரை, கரிசலாங்கண்ணி போன்ற மூலிகை பயிர்களையும் கூடுதலாக மலர் பயிர்களையும் வளர்க்கலாம். - வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும், திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மாடித்தோட்டம் அமைப்பதற்கான பயிற்சியை அளித்து வருகிறது -
---
Thanks Tamilmurasu
http://tamilmurasu.org/ |
முடிவுறாத பயணங்களில் இருந்து என் தேடல்கள் தொடங்குகிறது, அதுவே என்னை உயிர்ப்புடன் இருக்கச் செய்கிறது
Tuesday, 31 March 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment