சோலார் சுவரொட்டிகள் (Solar Wall Papers)
சோலார் பேனல்கள் என்றாலே மிகப் பெரிய பலகை அளவிற்கு இருக்கும் மேலும் கண்ணாடி சட்டத்தால் தண்ணீர் புகாமல் இருக மூடப்பட்டிருக்கும் (tight sealing) என நாம் எல்லோரும் அறிந்ததே. இவை சிலிக்கான் என்னும் குறை கடத்தி (semiconductor) தனிமத்தால் செய்யப்படுபவை. மிக அதிகமான ஆற்றல் திறன் (photoconversion efficiency) உடையது, எனினும் இதனை சூரிய ஒளியில் நேரடியாக படும்படி குறிப்பிட்ட கோணத்தில் (tilting angle) வைக்க வேண்டும் அப்பொழுதுதான் அதிகமான மின் திறனை பெற முடியும். ஆகையால் இவ்வகையான முதல் தலைமுறை சூரிய மின்கலங்களை (First generation Solar Cells) இயக்குவதில் சிறு தயக்கங்கள் உள்ளது.
ஆனால் இவற்றிற்கு மாற்றாக மிகவும் எடை குறைந்த நெகிழும் (flexible)
தன்மையுடைய மென் ஏடுகளாக (thin films) தயாரிக்கப்படும் சோலார் பேனல்கள்
வீட்டிற்குள்ளும் பொருத்திக் கொள்ளலாம். இவை இரண்டாம் தலைமுறை சோலார்
மின்கலங்கள் (second generation solar cells) ஆகும். இத்தையக பிரிவில் கரிம
மற்றும் கனிம வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சமீபத்தில் பின்லாந்தினை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் (VTT Research Center, Finland) வீட்டு சுவர்களில் சுவரொட்டிகளாக ஒட்டிக் கொள்ளும் வகையில் கரிம பொருட்களால் ஆன நெகிழி சூரிய மின்கலங்களை ( Flexible Solar Cells) தயாரித்துள்ளனர்.
இந்த புதிய வகை சோலார் சுவரொட்டிகள் மூலம் இனி வரும் காலங்களில் நமது இல்ல வரவேற்பறை மற்றும் வீட்டின் முற்றத்தில் உள்ள சுவர்களில் இதனை அலங்கார சுவரொட்டிகளாக புதுப்பித்துக் கொள்ளலாம். குறைந்தபட்சம் இதில் இருந்து பெறப்படும் மின்சக்தியினை கொண்டு நமது வீட்டின் உட்பகுதியில் எல் ஈ டி (LED) விளக்குகளை எரிக்க நிச்சயம் உதவும். இதன் விலையினை மேலும் குறைக்க தற்போது சோலார்மின்கல ஆராய்ச்சியில் அதிக கவனத்தினை பெற்றுள்ள ப்பெரோவ்ஸ்கைட்டு கள் (perovskite) எனப்படும் தனிமத்தில் செய்யப்பட்டால் இதன் தயாரிப்பு செலவு மூன்றில் ஒரு பங்கே பிடிக்கும்.
ஒரு வேளை நம்ம ஊரு அரசியல்கட்சிகளின் வண்ண சுவரொட்டிகளுக்கு பதிலாக சோலார் சுவரொட்டிகளாக இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்க்கவே சுவாரசியமாக உள்ளது.
பி.சுதாகர்
தோக்கியோ அறிவியல் பல்கலைக்கழகம், சப்பான்

No comments:
Post a Comment