வண்ணமயமான சோலார் மேற்கூரைகள் - Solar Roof Top Systems
தற்போதைய சூழலில் நம்மில் பெரும்பாலனவர்களுக்கு சோலார் மின் சக்தி என்றாலே மிகவும் விலை அதிகமானது என தயங்குகிறார்கள்.
நாம் அன்றாட செலவுகளிலிருந்து ஒரு ஒப்பீடு சொல்கிறேன்.
நீங்கள் வாங்கும் தொலைக்காட்சி பெட்டியின் விலைக்கு இணையான சோலார் மின் சக்தி கூரைகளை தேவைக்கு தக்கவாறு அமைப்பதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு அதன் பயனை அனுபவிக்க முடியும். ஆனால் அதே விலைக்கு வாங்கிய தொலைக்காட்சி பெட்டி 20 வருடங்களுக்கு வருமா என ஆராய்ந்து பார்த்தால் குறைந்தது மூன்று தொலைக்காட்சி பெட்டிகளாவது மாற்றி இருப்போம்.
சரி, எப்படி குறைந்த செலவில் தொலைக்காட்சி வாங்கும் பணத்திற்கு இணையான வண்ணமயமாக சோலார் மேற்கூரைகளை அமைக்கலாம்?
வழமையாக சோலார் பேனல்களை நிறுவுவதற்கு பதில், சோலார் சட்டங்களாக (solar blocks) செய்து மேற்கூரைகளை வீட்டு மாடிகளில் அமைக்கலாம்.அதற்கு கீழ் நீங்கள் தோட்டம் அல்லது அறைகளாக தடுத்தும் பயன்படுத்தலாம்.
இவ்வடிவமைப்பின் மூலம் நாம் விரும்பும் வண்ணம் பிரத்யோகமாக சோலார் ஓடுகளினால் ஆன மேற்கூரைகளை அமைக்கலாம். அழகிய வண்ண சட்டங்களுடன் கூடிய சோலார் ஓடுகளின் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என வீட்டிற்கு தேவையான விளக்குகளை எரித்துக் கொள்ளலாம். பேட்டரி, இன்வெர்ட்டர் இல்லாமல் டிசி ஈடி (DC LED) விளக்குகளை எட்டு ஆண்டுகளுக்கு எரிக்க முடியும் என்னும் போது எட்டு ஆண்டுகளுக்கு தேவையான மின் சக்தியும் (domestic lighting power), விளக்கு (Bulb) மாற்றும் செலவும் மிச்சம். அடுத்து வரும் 14 ஆண்டுகளுக்கு விளக்குகளை இரண்டு முறை மாற்றினால் போதும். தற்போது சந்தையில் 700 ரூபாய்க்கு DC LED lights கிடைக்கின்றன.
புதிய முயற்சிகளுக்கு கைகொடுப்பதன் மூலம் சந்தையில் சோலார் பேனல்களின் விலை மிகவும் குறைய வாய்ப்பிருக்கிறது.
Solarix Energy Systems
Please visit : www.solarixes.com
No comments:
Post a Comment