Saturday, 28 March 2015

இங்கிலாந்து பயணம் -1


இங்கிலாந்தின் கார்ன்வெல் (cornwell) பகுதியின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள நகரம் பால்மவுத் (Falmoutth). இந்நகரத்தின் உயரமான குன்றின் மேல் எக்சிடர் பல்கலைக்கழகத்தின் (Exeter University) சூழல் மற்றும் நீடிப்புத்திறன் நிறுவனம் (Environment and Sustainability Institute) அமைந்துள்ளது. மற்ற துறைகள் இங்கிருந்து 200 கிமீ தொலைவில் எக்சிடர் நகரத்தில் அமைந்துள்ளது.

Main Entrance, University of Exeter, Cornwell Campuses, UK
இங்கிலாந்தில் சமீபத்தில் புதிதாய் உருவாக்கப்பட்ட நவீனமயமான இத்துறையில்தான் நம் சிவகங்கை சீமையை சார்ந்த எனது பாசமிகு அண்ணன் பேராசிரியர் செந்தில் அரசு பணி புரிகிறார். நானோ நுட்பத்தின் (Nanotechnology) மூலம் நவீன மயமான சோலார் கலன்கள் மூலம் எவ்வாறு அதிக மின்சக்தியினை பெற முடியும் என தற்போது ஆராய்ச்சி செய்து கொண்டு உள்ளார். மேலும் இங்கிலாந்த்தில் உள்ள முன்னோடி சோலார் நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் உள்ளார்.

Dr. Senthilarasu Sundaram, Lecturer in Environment and Sustainability Institute and Faculty in Renewable Energy Institute, University of Exeter, Cornwell Campuses, UK (http://www.exeter.ac.uk/esi/people/sundaram/)
எங்களது சமீபத்திய கூட்டு ஆராய்சி மற்று செயல்பாடுகள் பற்றி விவாதிக்க அவரது பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்.
வழக்கமான சோலார் மின்கல ஆராய்ச்சி கூடங்கள் சிறிய வடிவிலான மின்கலங்களை மட்டுமே செயற்கை சூரிய வெளிச்சத்தில் ஆய்வு செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் எக்சிடர் பல்கலைக்கழகத்தின் நவீன நுட்பங்கள் என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது. வழமையான சிறிய ரக சோலார் மின்கலங்களுக்கு பதில் தொழிற்சாலை அளவிலான பெரிய சோலார் பேனல்களை இங்கு வடிவமைத்து அவற்றினை இயற்கையான சூரிய வெளிச்சத்தில் (climatic condition) சோலார் டிராக்கர்கள் (solar trackers) மூலம் தானியங்கியுடன் இணைத்து அதன் ஆற்றல் அளவுறுக்களை கணக்கிடுகிறார்கள். மேலும் இதனை ஆய்வக அளவில் உள்ள செயற்கை சூரிய வெளிச்சத்தில் (solar simulator) கணக்கிட்டு அதன் குறைகளை கண்டுபிடித்து பெரிய நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்கள்.
CIGS solar panel (at Prof. Sundaram Senthilarasu and Prof. Tapas Mallick Lab)
CdTe solar panel (at Prof. Sundaram Senthilarasu and Prof. Tapas Mallick Lab)

Single Crystalline Silicon Solar Panel (at Prof. Sundaram Senthilarasu and Prof. Tapas Mallick Lab)

Real time solar cell measurement at climatic condition (at Prof. Sundaram Senthilarasu and Prof. Tapas Mallick Lab, Exeter University, UK)
இது தவிர சோலார் ஒளி குவிப்பு முறையில் (concentrated photovoltaics) சோலார் பேனல்களின் இயங்கு திறனை அதிகரிக்கும் ஆராய்ச்சியில் இங்கிலாந்திலேயே இத்துறையில் பணிபுரியும் இந்திய பேராசிரியர் தபாஸ் மாலிக் (Prof. Tapas Mallick) அவர்கள்தான் முன்னோடி என்பது பெருமையான விடயம். சோலார் ஒளி குவிப்பு தத்துவம் புரிய வேண்டுமென்றால் இயற்கையில் இருக்கும் பட்டாம் பூச்சிகள் நல்ல எடுத்துக்காட்டு. இதன் இறக்கையின் மேல் பரப்பில் உள்ள நானோ அளவிலான ஒளி எதிரொலிப்பு ஏடுகள் (light reflectors) அதன் உடல் சூட்டிற்கு தேவையான வெப்பத்தினை வழங்குகிறது. இதனைப் போலவே வண்ணமயமான நெகிழி சன்னல்கள் மீது நானோ மூலக்கூறு அளவிலான அரிய மண் உலோக (rare earth metal) பூச்சுகள் பூசப்படுகிறது. இவை பட்டாம் பூச்ச்சியின் இறகைப்போல் தன் மீது விழும் ஒளியினை ஒரு மையத்தில் குவித்து அதன் ஒளிர்திறனை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இந்த நானோ பூச்சுகள் சூரிய ஒளியில் உள்ள அகச்சிவப்பு கதிர்களை up conversion நுட்பம் மூலம் கண்ணுக்கு புலப்படும் ஒளியாக மாற்றி சன்னல்களின் விளிம்பிற்கு அனுப்புகிறது. சன்னலின் விளிம்பில் பொருத்தப்பட்டுள்ள சோலார் மென் ஏடு பட்டிகள் (thin films solar cells) அவற்றில் இருந்து மின்சக்தியினை தயாரித்து வீட்டில் உள்ள விளக்குகளை எரிய வைக்கிறது. தற்போது இத்தயக சூரியமின் சக்தி சன்னல்கள் (solar powered window) இங்கிலாந்தின் பெருநிறுவனங்களில் பொருத்தப்பட்டு வருகிறது. வருடம் முழுவதும் நல்ல வெயில் அடிக்கும் நம்ம ஊருக்கு இந்த நுட்பம் சாலப் பொருந்தும். இத்துறையின் மூலம் பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட இராட்சத வடிவிலான சோலார் டிராக்கர் கருவியினை அருகில் இருந்து பார்த்தபோது தலை சுற்றியது.

Solar Concentrator Window with up conversion material coatings- (at Prof. Sundaram Senthilarasu and Prof. Tapas Mallick's Lab)


Solar tracker, Environment and Sustainable Institute (ESI), University of Exeter, Cornwell Campuses, UK
எல்லாவற்றிற்கும் உச்சமாக மரபுசார் ஆற்றல் உற்பத்தியின் முன்னோடி திட்டமாக இவர்களது துறையின் மேல் கூறையில் building associated photovoltaics (BAPV) முறையில் 25 கிலோவாட் சோலார் பேனல்களை நிறுவி உள்ளனர். இதன் மூலம் இத்துறைக்கு தேவையன மொத்த மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கினை சூரிய மின்சக்தியின் மூலம் பெறுகிறார்கள். 


Roof top solar power plant - Environment and Sustainable Institute (ESI) University of Exeter, Cornwell Campuses, UK
மேலும் சிறிய அளவிலான பணிகளுக்கு முற்றிலும் கார்பன் டை ஆக்சைடு நச்சு புகை இல்லாமல் பேட்டரி மூலம் இயங்கும் வண்டிகளை பயன்படுத்துகிறார்கள். இது போன்று இந்தியாவில் உள்ள எல்லா பல்கலைக்கழகம், கல்லூரிகளில் சோலார் பேனல்களை நிறுவி விட்டால் வகுப்பறை, தேர்வு அறைகள், முக்கியமான உயிரி ஆய்வகங்கள் போன்றவற்றிற்கு தடையில்லா மின்சாரம் வழங்க முடியும். மேலும் குறைந்த செலவில் தானியங்கி மூலம் இயங்கும் சோலார் தெருவிளக்குகளையும் அமைக்கலாம்.
Electric powered vehicle which avoid 100% CO2 emission.
மாணவர்களின் விவாதிக்கும் திறனையும் அறிவினை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள ஏதுவான சூழலை பல்கலைக் கழகம் அமைத்துக் கொடுத்துள்ளது. கல்லூரியின் வராந்தாவில் ஒளிரும் எழுத்து பலகைகளும், அழகிய மெத்தையில் அமைக்கப்பட்ட நாற்காலிகளும் மாணவர்கள் குழுவாக விவாதிக்க தொடுதிரை வசதியும் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் காப்பி கோப்பையினை வைத்துக் கொண்டு அழகாக விவாதிக்கிறார்கள். நமது ஊரிலும் மாணவர்களுக்கு இது போன்று வசதிகள் செய்து கொடுத்தால் அவர்களது தலைமைப் பண்பு வளர ஏதுவாக இருக்கும்.



Student discussion point,  Environment and Sustainable Institute (ESI) University of Exeter, Cornwell Campuses, UK

இத்துறையினை சுற்றிப் பார்க்கும் போது முனைவர் பட்டம் பயிலும் தம்பி பிரபாகர் என் உடன் வந்து தேவையான உதவிகளை செய்து தந்தார்.
இத்துறையின் மாடியில் இருந்து பார்க்கும் போது அடிவாரத்தில் உள்ள பென்ரின் பகுதியில் உள்ள கடற்கரை கண்களுக்கு விருந்தாய் இருந்தது.
ஆராய்ச்சி விவாதங்களை முடித்து விட்டு மெல்ல சூரியன் மறையும் நேரத்தில் அங்கிருந்து பால்மவுத் (Falmouthh) நகரத்தின் பிரதான கடற்கரைக்கு அண்ணன் பேராசிரியர் செந்தில் அரசு என்னை அழைத்து சென்றார்.
பயணங்கள் தொடரும்…

No comments:

Post a Comment