அடுத்த ஆப்பு உனக்குத்தான்! (மேடை நாடகம்)
நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும்
தஞ்சை மண்ணை சூறையாட காத்திருக்கும்
மீத்தேன் திட்டத்தை எதிர்த்து
களமாடிக் கொண்டிருக்கும்
போராளிகளுக்குச் சமர்ப்பணம்!
சமீப வருடங்களில் தமிழகத்தின் விவசாய விளை நிலங்களை சீர் குலைக்கும்
விதத்தில் விஞ்ஞானத்தின் பெயரால் பல்வேறு திட்டங்கள் முடுக்கி
விடப்பட்டுள்ளன (கெய்ல் எண்ணெய் குழாய் பதிப்பு திட்டம்; தஞ்சை
மாவட்டத்தில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம்; தேனியில் நீயுட்ரினோ
ஆய்வகம்). இவையனைத்தும் தமிழகத்தினை வறண்ட பாலைவனமாக்கும் என்பதில்
ஐயமில்லை. ஆனால் ஒன்று கூடி போராடிய வேண்டிய நாம் பல்வேறு கூறுகளாக
பிரிந்து கிடக்கிறோம். தனக்கு வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என
ஒவ்வொரும் ஒதுங்கிப் போய் கடைசியில் உங்களுக்கே அது எமனாகி வந்து நிற்கும்.
இதனை வலியுறுத்தும் விதமாக எமது நண்பர்கள் அடுத்த “ஆப்பு உனக்குத்தான்” என்ற மேடை நாடகத்தினை ஜப்பானில் நடைபெற்ற முழுமதி அறக்கட்டளையின் பொங்கல் திருவிழாவில் அரங்கேற்றினோம்.
நகைச்சுவையுடன் மக்களை சிந்திக்க வைக்கும் இந்த மேடை நாடகத்தினை தயவு செய்து நேரம் ஒதுக்கி பார்க்கவும் (Pls Click HD button for HD Quality). மேலும் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
கதையும் வசனமுமே இந்நாடகத்தின் கதாநாயகன். இதனை அருமையாக எழுதி இயக்கிய செந்தில்குமார் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள். இதனை மிகச் சீரிய முறையில் மறு ஒளிப்பதிவு செய்து தந்த ரகுபதி சகோவிற்கும் மிக்க நன்றி.
பி.சுதாகர்
தோக்கியோ அறிவியல் பல்கலைக்கழகம், சப்பான்

No comments:
Post a Comment