Monday 16 March 2015

பெயரில் என்ன இருக்கிறது?



இக்கட்டுரையினை கரூர் மண்மங்கலம் தாலுகா அலுவலக வாசலில் இருந்து எழுதியது..ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க மிகப் பெரிய வரிசைக் கிரமத்தில் வெகுசன மக்களோடு உரையாடிக் கொண்டிருந்த போது நிறைய சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன...

அங்கு வந்த மத்திய வயதுடைய நபர் தனக்கு ஆதார் அட்டைக்கான பெயர் பதிவிடலில் தன் பெயரை வேண்டுமென்றே விட்டு விட்டதாக கூறினார்...நான் அவர் பெயர் என்ன என்று கேட்டபோது கருணாநிதி என கூறினார்...சிரிப்பதா, அழுவதா எனத் தெரியவில்லை...

பின்னர் அவரிடம் உங்கள் பெயரை நரேந்திர மோதி என மாற்றம் செய்து கொள்ள அறிவுறுத்தினேன்...அவர் சிரித்துக் கொண்டே போய் விட்டார்..
சென்ற வார தினகரனில் ஆன்மிக மலர் இணைப்பில் ஒரு கேள்வி பதில்.. அதில் கனகராஜ் என்ற வாசகர் தன் வாழ்வின் துன்பங்கள் தீர என்ன வழி என்று கேட்டிருந்தார்..அதன் பதிலைப் படித்தால் பிரிட்டிஸ்காரன் தெறிச்சு ஓடிருப்பான்...அந்த வாசகருக்கான பதிலில் "நீங்கள் இனிமேல் என ஆங்கிலத்தில் கையொப்பம் இட்டால் விரைவில் உங்கள் துன்பங்கள் நீங்கி பெரிய பணக்காரர் ஆகி விடுவீர்கள் என பதில் சொல்லி இருந்தார் ஒரு மடாதிபதி..தக்காளி, இதெல்லாம் என்ன டிசைன்னு தெரியல..

சுமார் மூனு வருசத்துக்கு முன்னர், கரூரில் நண்பர் ஒருவரின் நிதியகத்தில் பதின்ம வயதுடைய ஒரு மாணவனை சந்தித்தேன்...சோகமாக தலை குனிந்தவாறு உட்கார்ந்து இருந்தான்..அவனது தந்தை எனது நண்பரிடம்  பேச அவனை அழைத்து வந்திருபார் போல.. நண்பர் அவனுக்கு தேநீர் குடிக்கச் சொல்ல என்னிடம் அவனது தந்தை மெதுவாக பேச்சு கொடுத்தார்..அவரிடம் ஏன் பையன் சோகமாக இருக்கிறான் எனக் கேட்டபோது..அவனக்கு குப்பன் எனப் பெயரிட்டுள்ளதாகவும் அவனுடன் பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் அவனது பெயரை பகடி செய்வதால் இனி பள்ளிக்கு செல்லமாட்டேன் என பிடிவாதமாக இருப்பதை சொல்லி வருத்தப்பட்டார்..பின்னர் அந்த பையனிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்து என் தந்தையின் பெயர் பிச்சைமுத்து என்றும் என்னை எல்லோரும் பிச்சைக்காரன் மகன் என எங்கள் கிராமத்தில் நக்கலாக கூப்பிடுவார்கள் எனச் சொன்னேன்..அவன் என்னிடம் உங்களுக்கு ஒருபோதும் கோபம் வரவில்லையா எனக் கேட்டான். இன்று ஒரு மகன் வெளிநாட்டிலும், மற்ற ஒரு மகன் கல்லுரியில் முதல்வராகவும் உள்ளதால் என் தந்தையினை கேள்வி கேட்டவர்கள் வாயினைப் பொத்திக் கொண்டார்கள்...என் தந்தை பெயருக்கு முத்து போன்ற பிள்ளைகளை பிச்சையாக பெற்றவர் என அவரிடம்சொல்லி உள்ளதால் அவரை கிண்டல் செய்பவர்கள் தற்சமயம் மரியாதையோடு ஒதுங்கி கொள்கிறார்கள் என அவனிடம் சொன்ன போது அவன் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது. கெசட்டில் தன் பெயரினை மாற்றும் தன் எண்ணத்தினை மாற்றிக் கொண்டதாக அந்த பையன் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது..மேலும் கெசட்டில் தன் பெயரினை மாற்றம் செய்யும் அவனது திட்டத்தினை விட்டு விட்டதாகவும் கூறினான்.

நம் ஊரில்தான் மனிதரின் பெயர்கள் அவர்கள் வாழ்வில் விரும்பிய அல்லது விரும்பாத எல்லாவற்றையும் கொண்டு வந்து சேர்க்கிறது.. இத்தனைக்கும் அவனது பெயரை பெற்றோர் மூலமே ஆதியிலிருந்து சுமக்க வேண்டி உள்ளது. ஒருவனுக்கு வர்க்க அடையாளமாக உள்ள பெயரே மற்ற ஒருவனுக்கு அவமானமாக உள்ளது.. கொரியா அல்லது சப்பானில் பண்பாட்டுக் கூறுகளோடு பெயரிடும் முறையால் அவர்களுக்கு இது போன்ற உளவியல் சிக்கல்கள் எல்லை என எண்ணுகிறேன்..

காலத்தின் கொடுமை வாயில் நுழையாத ஆரிய பெயர்களை கொண்ட குழந்தைகள் நவீன வடிவங்களாகவும், தமிழ் மண்ணின் அடையாளங்களை தாங்கி பெயர் சூட்டப்படும் குழந்தைகள் மற்றவர்களால் பகடி செய்யப்படும் கீழமையான சூழல் தற்போது உள்ளது....ஆகவே நம் குழந்தைகளுக்கு சாதனையாளர்களின் வரலாற்றினையும், தமிழ் பண்பாட்டு அடையாளங்களை விளக்கமாக சொல்லியாக வேண்டிய சுழலில் உள்ளோம்..

இக்கட்டுரை நீயுமரலாஜி என்னும் பெயரில் குழந்தைக்களை வதைக்கும் முற்போக்குவாதிகளுக்கு பொருந்தாது...

No comments:

Post a Comment