Monday 16 March 2015

 சப்பானில் எங்கு பார்த்தாலும் புத்தகங்கள்... 



அவந்தியை முடித்திருத்தத்திற்கு அழைத்து சென்று இருந்தேன். எங்கு பார்த்தாலும் புத்தகங்கள் நிரம்பி வழிந்தன. எனக்கு ஒரு வேளை நூலகத்திற்கு வந்து விட்டோமோ என சந்தேகம் வந்து விட்டது.



சப்பானியர்கள் கார்ட்டூன் புத்தகங்களை பெரிதும் விரும்பி படிக்கிறார்கள். கடையெங்கும் நாவல்கள், சிறுகதைகள் என எல்லாமே கார்ட்டூன் புத்தகங்களாக இருந்தன. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒரு நிமிடம் கூட சும்மா இருப்பதில்லை. வந்தவுடன் புத்தகத்தினை எடுத்து வாசிக்க துவங்கி விடுகிறார்கள். இதில் ஆச்சரியமான விடயம் புத்தகம் வாசித்துக் கொண்டே முடி வெட்டிக் கொள்ளலாம்.

நமது ஊரில் புத்தகங்களின் மீதான புனித தன்மையினை நீக்கி விட்டு எல்லா இடங்களிலும் வாசிக்கும் வகையில் அடுத்த தலைமுறையினை முன்னெடுக்க வேண்டும். வெகு சன மக்கள் கூடும் இடங்களில் புத்தகங்களை வைத்து படிக்கும் பழக்கத்தினை தூண்ட வேண்டும்

No comments:

Post a Comment