Wednesday, 18 March 2015

கிரனாடா... ஸ்பெயின் தேசத்தின் உணர்ச்சியெழச் செய்யும் காதல் நகரம் (Granada the romantic city of Spain)

  கிரனாடா (Granada), ஸ்பெயின் தேசத்தின் உணர்ச்சியெழச் (romantic city) செய்யும் காதல் நகரம் என்று நண்பர்கள் சொன்னபோது நம்ப முடியவில்லை.. எங்கு பார்த்தாலும் அரண்மனைகள், வானாலாவிய தேவாலயங்கள்,, கோடையிலும் ரம்யமான வெப்ப நிலை.. நிச்சயம் இது காதலர்களுக்கான தேசம் என்பதில் ஜயமில்லை.. இந்நகருக்கு ஸ்பெயின் நாட்டின் வரலாற்று ரீதியாக பல பெருமை உண்டு.முதன் முதலில் ஸ்பெயி னில் அமைக்கப்பட்ட மாதிரி நகரம் இதுவே. இஸ்லாமியர்கள் ஸ்பெயின் தேசத்தில் கடைசியாக ஆண்ட பகுதியும் இதுவே.. மிக முக்கியமானது இன்றளவும், இஸ்லாமியர்கள், யூதர்கள், கிருத்தவர்கள் ஆகிய மூன்று பிரிவினரும் இப்பகுதியில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்போடு வாழ்ந்து வருகின்றனர். இதற்கு காரணம் என்ன என்று தேடினால் நமக்கு கிடைக்கும் ஒரே பதில்... அல்கம்ப்ரா அரண்மனை (Alhambra Palace).












 “அல்கம்ப்ரா” (Alhambra) அரண்மனையினை கல்லில் செதுக்கப்பட்ட சொர்க்கம் என்றுதான் சொல்ல வேண்டும் . தற்போதைய யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் உள்ள இந்த அரண்மனைக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு.. கி.பி 889 ல் தொடங்கி, 20 ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு அரசாட்சிகளை கண்ட இவ்வரண்மனை ஒவ்வொரு கால கட்டத்திலும் பல மாற்றங்களை கொண்டு இருக்கிறது.. பாரசீகம், கிரேக்கம், ஆங்கிலேய கலை, மற்றும் மேற்கத்திய கட்டிடகலை ஆகியவற்றை கொண்ட ஒரே அரண்மனை இது ஒன்றே.. யூசுப் சுல்தான் 1 ல் தொடங்கி, சார்லஸ் V வரை பல்வேறு இனத்தினை சேர்ந்த அரசர்கள் ஆண்டாலும் இந்த இவ்வரண்மனை சிதிலமாக்கப்படாமல் மேலும் மேலும் மெருகூட்டப்பட்ட்டு இன்றளவும் வனப்பின் சாட்சியாக நின்று கொண்டு இருக்கிறது..(நடுவில் வந்த நெப்போலியன் இந்த அரண்மனையில் பெரும்பாலான தங்கத்தினையும், வைர வைடூரியங்களையும் ஆட்டய போட்டு சென்றதால் ஸ்பெயின் மக்கள் இன்றும் அவனுக்கு அர்ச்சனை செய்து கொண்டு இருக்கிறார்கள்).. இந்த அரண்மனையில் நம் எண்ணத்தினை கவர்வது நீரேற்றும் தொழில் நுட்பம் (hydrolyic technology)..ஏறத்தாழ 8 கிமீ தொலைவில் இருந்து மலையில் பெறப்படும் நீரை தரைத்தளத்தில் ஒரு குளத்தில் சேகரித்து நீரேற்ற முறையில் அதனை தோட்டத்திற்கும் மற்ற அலங்கார நீர் தொட்டிகளுக்கும் பயன்படுத்தி உள்ளார்கள்.. அதற்கு சாட்சியாக இன்றும் காணப்படும் கோர்ட் ஆப் லயன்ஸ் (court of lions) எனப்படும் சிங்கத்தின் வாயில் வரும் நீர் ஊற்று... மற்றொன்று சுல்தான் தன் நான்கு மனைவிகளுக்கு என்று கட்டி வைத்திருக்கும் அரண்மையின் அந்தப்புரப் பகுதி (மனுசன் என்னமா வாழ்ந்து இருக்கான்).. அல்கம்ப்ரா (Alhambra) ...வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டிய காதல் தேசம்..

No comments:

Post a Comment