நவீன பள்ளிக்கூடம் - ஜப்பான்
குழந்தைகள் ஏன் பள்ளிகளை வெறுக்கின்றார்கள்
என்ற கேள்வியே இன்றைய சூழலில் நாம்
எதிர் நோக்கியிருக்கும் பெரிய சவால். தொடர்ச்சியான
அலுப்பூட்டும் பாட திட்டங்கள், வீட்டு
பாடம், ஓயாத மனப்பாடங்கள் என
பெற்றோர்களும், பள்ளிகளும் தொடர்ந்து திணிக்கும் சாகசங்கள் குழந்தைகளை பூதங்களாக பயமுறுத்துகின்றன. நமது ஊரில் ஒவ்வொரு
பள்ளியும் குழந்தைகளை அடைத்து வைக்கும் மிகப்
பெரிய சர்க்கஸ் கூண்டுகளாகவே காட்சியளிக்கிறது.
வழமையான இந்த பொது
புத்தியிலிருந்து விலகி ஜப்பானில்
உள்ள தோக்கியோ நகரில் ப்பியூஜி மழலையர்
பள்ளி (Fuji Kinder
Garden) என்ற புது மாதிரி பள்ளியினைவடிவமைத்துள்ளார்கள்.
சப்பானில் பெரிதும் அறியப்பட்ட கட்டிட வடிவமைப்பாளர் தகாகாரு தெசுகா (Takaharu Tezuka ) அவர்களால் வடிவமைக்க்கப்பட்ட
இப்பள்ளி குழுந்தைகளுக்கான நவீன உலகம் என்றே
சொல்லலாம்.
Fuji Kinder Garden, Tokyo
தெசுகா, சப்பானின் புகழ்
பெற்ற நவீன கட்டிடக்கலை நிபுணர்.
இவரது புதிய சிந்தைனையான
வானத்தை தொடுதல் (catch the sky) என்ற வடிவத்தில் கட்டப்பட்ட
நவீன வீடுகள், அலுவலகங்கள் ஆகியவை
சப்பானில் மிகப் பிரசித்தி பெற்றது.
இவரது மனைவியும் ஒரு சிறந்த கட்டிட
நிபுணர் ஆவார்
எந்த வரையறையும் இல்லாமல் எல்லைகளற்ற வெளியில் குழந்தைகள் ஓடியாடும் வகையில், வட்ட வடிவமாக மரப்பலகைகள் வேயப்பட்ட
கூரை யாக இயற்கையோடு கூடிய
முன் மாதிரி பள்ளியினை வடிவமைத்துள்ளார்.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் ஒவ்வொரு வகுப்பறைக்குள்ளும் வானம்
பார்த்த மரங்கள் மேற்கூரையின் வெளியே
தெரியும் படி உள்ளது. மேலும்
குழந்தைகள் இந்த மரத்தின் மேல்
ஏறி விளையாடும் வகையில் மேல் தளத்தில்
கயிற்று வலை அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மேல் தளத்தில் இயற்கை
வெளியில் ஓடி ஆடலாம். இந்த
குதூகலமான சூழலக்காகவே குழந்தைகள் ஆர்வமாக பள்ளிக்கு வருகிறார்கள்.
இந்த புதிய பள்ளியின்
மேல் தளத்தில் நாள்
ஒன்றொக்கு சராசரியாக மாணவர்கள் மேல் தளத்தில் 6 கிமீ
அவர்களையும் அறியாமல் ஓடி ஆடி விளையாடுகிறார்கள்.
வித்தியாசமாக அமைக்கப்பட்ட மரக்கூண்டுகள் மற்றும் சுழல் படிக்கட்டுகள்
வழியே ஓடி பிடித்து விளையாடுவது,
ஒளிந்து விளையாடுவது என குழந்தைகள் குதூகலிக்கிறார்கள்.
குழந்தைகளை
அளவுக்கு அதிகமாக பாதுகாப்பு என்னும்
பெயரில் விளையாட்டு கூட விடாமல் வகுப்பறையில்
அடைக்காதீர்கள் என தெசுகா அறிவுறுத்துகிறார்.
இப்பள்ளியின் வடிவமைப்பினைப் பற்றி தெசுகா அவர்கள்
TED க்கு அளித்த உரையினை கீழ்காணும்
காணொளியில் கண்டு களிக்கலாம்
https://www.youtube.com/watch?v=QvSZ1MtaXME
இத்தயக சூழலை ஒப்பிடும் போது, நமது அரசு பள்ளிகளுக்கு
நாம் என்ன மாதிரியான அக்கறையினை
செலுத்துகிறோம் என எண்ணிப் பார்க்கையில்
வேதனையாக உள்ளது. கடந்த
ஆண்டில் மத்திய அரசு பள்ளிகள்
உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு கொடுக்கப்பட்ட
நிதியினை பயன்படுத்தாத நம் தமிழக அரசு
இனியேனும் விழித்து கொண்டு இது போன்ற
மாதிரி பள்ளிகளை அமைத்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள்
சேர்க்கை கண்டிப்பாக அதிகரிக்குமே..
செய்வீர்களா, செய்வீர்களா?
No comments:
Post a Comment