அறிவியல் தமிழ் உலகிற்கு அளப்பரிய பணியாற்றிய முது பெரும் தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா ஐயா இன்று (பிப்ரவர் 6, 2017) காலமாகி விட்டார் என்ற செய்தி அதிர்ச்சியினை தருகிறது.
மணவை முஸ்தபா ஐயா அவர்கள், அறிவியல் தமிழ் வளர்ச்சி தொடர்பான பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தவர். இதுவரை அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி துறைச் சார்ந்த 8 கலைச் சொல் அகராதிகளை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து பல துறைகளில் கலைச் சொல் அகராதிகளை வெளியிட திட்டமிட்டு பணியாற்றியவர். யுனெஸ்கோ கூரியரின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக அது நிறுத்தப்படும் வரை பணியாற்றினார். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் நிறுவனத்தையும் இவர் நிறுவி உள்ளார்.
தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா |
40 க்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள், அறிவியல் கலைக் களஞ்சிய தொகுப்புகள், மொழி பெயர்ப்பு நூல்கள் என பல தளங்களில் தமிழுக்கு தொண்டாற்றியவர். குறிப்பாக, தமிழ் மொழி செம்மொழியாவதற்கு அரும்பாடு பட்டவர்.
எண்ணற்ற அரசு விருதுகளையும், சர்வதேச அளவிலான அங்கீகாரங்களையும் பெற்ற தமிழ்ச் சுடர் ஒளி மணவை முஸ்தபா ஐயா அவர்களின் மறைவு தமிழ் உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
ஐயாவின் மறைவினால் துயர் கொள்ளும் உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களுக்கும், எங்கள் அன்பிற்கினிய நண்பர் மருத்துவர் செம்மல் Semmal Manavai Mustafa அவர்களின் குடும்பத்தினருக்கும் எமது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் அறிவியல் உலகில் என்றும் அவர் புகழ் நிலைத்திருக்கும்.
மணவை முஸ்தபா ஐயா அவர்களை பற்றி விரிவாக அறிய கீழ்கண்ட விக்கிபீடியா சுட்டியில் பார்க்கவும்.
No comments:
Post a Comment