தேங்காய்
நாரும் ஆயில் கழிவுகளும்
இப்படி ஒரு பதிவு முகநூலில் ஆயிரக் கணக்கில் ஏன், எப்படி? என புரிந்துக் கொள்ளப்படாமலே பகிரப்பட்டுள்ளது.
உண்மையில் இதனை கொண்டு சென்னையில் ஏற்பட்டு இருக்கு ஆயில் கழிவு விபத்தில் எப்படி பயன்படுத்த முடியாது என கீழ் கண்ட பதிவில் விளக்கியுள்ளேன்.
//நார்கழிவுகளை ஹெலிகாப்டர்கள் மூலம் கடல்மேல்பரப்பில் தூவுவதன்மூலம் எண்ணைப்படலங்கள் தேங்காய்நார்கழிவுடன் சேர்ந்து அலைகளால் கடற்கரைக்கு அடித்துவரப்படும் சுத்திகரிப்பது எளிதானது//.
நீங்கள்
எதுவுமே செய்யாவிட்டாலும் ஆயில் கழிவுகள் காற்றின் திசைக்கு ஏற்ப அலைகளால் அடித்து
வரப்பட்டு கரையில் ஒதுங்கும். அப்படித்தான் இப்போது கரையில் இந்த ஆயில் கழிவுகள் ஒதுங்கி
உள்ளது.
இப்பொழுது
பிரச்சினையே கரையில் ஒதுங்கியுள்ள ஆயில் கழிவினை எப்படி கடல் நீரில் இருந்து நீக்குவது
என்பதுதான் பிரச்சினையே.
வீடுகள்,
தொழிற்சாலைகளில் தரையில் சிந்தும் ஆயிலை தேங்காய் நாரை கொண்டு துடைக்கிறார்களே, அப்படியானால்
ஏன் கடலில் இருக்கும் ஆயிலை தேங்காய் நாரைக் கொண்டு நீக்க முடியாதா?. இந்த பார்வையில்தான்
மேற்கண்ட பதிவு பத்தாயிரம் பேருக்கு மேல் பகிரப்படுகிறது என நினைக்கிறேன்.
உண்மையிலேயே
தேங்காய் நாரைக் கொண்டு நீரில் மிதக்கும் ஆயிலை பிரித்து எடுக்க முடியுமா? எளிய சோதனை
மூலம் நீங்களே இதன் பின் உள்ள லாஜிக்கை புரிந்து கொள்ள முடியும்.
ஒரு
கண்ணாடி தொட்டியில் நிரப்பப்பட்ட நீரில் எண்ணெயினை ஊற்றுங்கள். அது நீரின் மீது மென்
ஏடாக மிதக்கும். இப்போது இதன் மீது தேங்காய்
நார் பவுடரை தூவவும். தேங்காய் நார் பவுடரின் பரப்பளவுக்கு தக்கவாறு எண்ணெயினை உறிஞ்சி
கொள்ளும். பிறகு ஒரு சல்லடையினை கொண்டு அந்த எண்ணெய் படலம் ஒட்டியுள்ள தேங்காய் நார்
பவுடர் அல்லது கட்டிகளை வடிகட்டி மூலம் வெளியே எடுத்துக் ஆயிலை பிழிந்து பிரித்தெடுக்கலாம்.
ஆனால்
இதே முறையினை தடிமனான குருடாயிலை நீரில் இருந்து நீக்க உதவுமா?
இப்பொழுது
அதே நீர் தொட்டியில் தார் போன்ற தடிமன் நிறைந்த
குருடாயிலை கொட்டி நீரை கலக்குங்கள். மேலே சொன்னதை போல் மீண்டும் தேங்காய் நார் பவுடரை
ஆயிலின் மேற்பரப்பில் தூவுங்கள். தேங்கய் நார் முன்பை போல் அதிகமான குருடாயிலை இழுத்து
வைத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் குறுக்கு வெட்டு தோற்றத்தில் நீரில் விரவியுள்ள
குருடாயிலின் தடிமன் தேங்காய் நாரின் தடிமனை விட அதிகம். இன்னும் எளிமையாகச் சொல்லப்
போனால் குருடாயிலின் தடிமன் மெல்லிய எண்ணெயின் தடிமனை விட ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம்
மடங்கு அதிகம். ஆகையால் தூவப்பட்ட தேங்காய் நார் பவுடர் ஐஸ்கிரீமில் தூவப்பட்ட பாதாம் (topping) போல் குருடாயிலின்
மேல் வெறுமன கிடக்கும். தேங்காய் நார் துவுவதால் ஒரு விளைவும் ஏற்படாது.
ஆகவே
எப்படி ஐஸ்கிரீம் கூழ்மத்தின் மேற்பரப்பில் தூவப்பட்ட பாதாம் துண்டுகள் எப்படி ஒட்டு
மொத்த ஐஸ்கிரீமையும் உறிஞ்சாதோ அதே போல் தேங்காய் நார் மிகத் தடிமனாக கடல் நீரில் மிதக்கும்
ஆயில் கழிவுகளை வடிகட்டி எடுக்க பயன்படாது.
இந்த
தேங்காய் நார் முறையினை ஒப்பிடும் போது ஜெலெட்டர் (gelator) நுட்பம் மூலம் கூழ்ம நிலையில் இருக்கும்
ஆயில் கழிவுகளை கட்டியாக்கி எளிதாக கடல் நீரில் இருந்து எப்படி நீக்கலாம் என்பதை அடுத்த
பதிவில் பகிர்கிறேன்.
No comments:
Post a Comment