Saturday 7 November 2015


ஜப்பான் தபால் நிலையங்கள் ‍-1 (Japan Postal Service)

நமது வீட்டிற்கு தபால் நிலையத்தில் இருந்து ஒப்புகை அஞ்சலில் (Register post) கடிதமோ அல்லது பொருட்களோ வரும் போது நாம் வீட்டில் இல்லா விட்டால் அருகில் உள்ளவர்களிடம் தபால் பட்டுவாடா அலுவலர் (Post Man) பயனாளரை தபால் நிலையத்தில் வந்து வாங்கி கொள்ள சொல்லுங்கள் என்று சொல்லி விடுவார். 

ஜப்பானில் இது போன்ற சூழலில், பட்டு வாடா செய்யபடாத தபாலுக்கான அறிவிப்பு சிட்டை ஒன்றினை (Undelivered Notice -சுபோன் யுபின்புத்சு‍ தோ கோ புசாய் ரென்ராகு கியோ ) நம் வீட்டு அஞ்சல் பெட்டியில் போட்டு விடுகிறார்கள். 


Undelivered post notice, Japan Post (JP)

Undelivered post notice, Japan Post (JP)

இந்த அறிவிப்பு சிட்டையில் உள்ள இலவச சேவை எண்ணுக்கு (toll free number) அழைத்து எந்த நேரத்தில் நாம் வீட்டில் இருப்போம் என தெரிவித்து விட்டால் போதும் நாம் அறிவுறுத்திய நேரத்திற்கு அந்த தபாலை நம் வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்து விடுகின்றனர். 

இந்த இலவச சேவை தொலை பேசி வசதி ஜப்பானிய மற்றும் ஆங்கில மொழிகளில் உண்டு. 

பேச முடியாத மாற்று திறனாளிகளும் இந்த வசதியினை பயன்படுத்தும் பொருட்டு, எண்களை மட்டுமே தட்டச்சு செய்து வசதியான‌ நேரத்தினை அனுப்பு வண்ணம் எல்லா தகவலும் அந்த அட்டையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக பட்டுவாடா நேரத்தினை ஐந்து காலமாக பிரித்து வைத்துள்ளார்கள். உதாரணமாக மதியம் 12 முதல் 2 மணி வரை ( இரண்டாவது காலம்), இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை (ஐந்தாவது காலம்).

இந்த அட்டையில் இணைக்கப்பட்டிருக்கும் பார் கோடு தகவலை அலைபேசியில் உள்ள ஸ்கேனர் திறனிகள் மூலம் உள்ளீடு செய்தால் தபால் பட்டுவாடா பற்றிய மேலதிக தகவலை பெறலாம்.

ஒரு அட்டைதான் ஆனால் பயனாளருக்கும், தபால் அலுவலருக்கும் நேரத்தினை மிச்சமாக்கி தேவையற்ற வீண் அலைச்சலை குறைக்கிறது.

இதே போன்ற பட்டுவாடா அட்டைகளை இந்திய அஞ்சல் துறையும் கொண்டு வந்தால் நமக்கு எளிதாக இருக்கும்.

குறிப்பு:
இரவு 9 மணிக்கு மேல் தபால் அவசரம் எனில், பட்டுவாடா செய்யப்படாத தபால் பொருட்களை 24 மணி நேரமும் அந்த பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் நேரில் சென்று பெற்று கொள்ளலாம்.

பட்டுவாடா செய்யப்படாத பொருள் ஒரு மாத காலம் பயனாளரின் பகுதியில் உள்ள அஞ்சல் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும். பின்னர் அனுப்பியவரின் முகவரிக்கே திருப்பி அனுப்பபட்டு விடும்.

No comments:

Post a Comment