இனிய குடியரசு தின வாழ்த்துகள்.
வடக்கு அயர்லாந்தில் உள்ள பெல்பாஸ்டு நகருக்கு வந்து மூன்று வாரங்கள் ஆகிறது.
ஒவ்வொரு முறையும் இங்குள்ள நகர் மன்ற வீதியில் உள்ள அங்காடிகளுக்கு செல்லும் போது, இரயிலடியிலும், பேருந்துகளிலும் நிறைய இந்தியர்களை பார்க்கிறேன். நாம் புன்னகைத்தால் கூட திரும்பி கொள்கிறார்கள். அல்லது நாம் அருகில் வரும் போது வேறு பக்கம் பார்க்காதது போல் செல்கிறார்கள். கடல் கடந்து வந்தும் ஏன் இந்த மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள் என வியப்பாக இருக்கிறது.
சீனா, கொரியா, ஜப்பான் நாட்டுகாரர்கள் தங்கள் நாட்டினரை வெளி நாடுகளில் பார்த்து விட்டால் அப்படி உருகுவார்கள். நம்ம ஆள் உருக வேண்டாம், ஒரு முகமன் செய்யலாமே.
இந்தியர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டால் வணக்கத்தை இந்தி மொழி உட்பட எந்த மொழியில் சொன்னாலும் சரி , சக இந்தியரை பார்த்தால் புன்னகையுங்கள்.
இந்த குடியரசு தினத்திலாவது நம் பிள்ளைகளுக்கு பெரியவர்களை கண்டால் வணக்கம் செய்யவும், வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் நம் ஊர்காரர்களை பார்த்தால் புன்னைகையோடு முகமன் செய்யவும் சொல்லி கொடுப்போம்.
அதை விடுத்து தேசியகீதம் பாடும் போது எழுந்து நிக்கலை, தேசிய கொடிய தலை கீழா குத்திட்டான்னு எதார்த்த வாழ்க்கைக்கு உவப்பில்லாத விசயங்களில் அடுத்தவரை இகழ வேண்டாம்.
அடிமைதனம் இல்லாத சுதந்திரமான பண்பாடுகளோடு தலைநிமிர்ந்து வாழும் ஒரு தேசத்து மக்களாக பரிமளிப்போம்.
நம் தேசத்திற்காக உழைத்த ஒவ்வொருவரின் தியாகத்தினையும் இந்நன்னாளில் நினைவு கூறுவோம்.
No comments:
Post a Comment