Saturday 14 May 2016

அதிமுக தேர்தல் அறிக்கையும் ஆடித் தள்ளுபடியும் ‍-2
மின்சாரக் கனவுகள்

 தற்போதைய மின் உற்பத்தி மற்றும் நம் எதிரகால தேவைகளின் அடிப்படையில் நம் தமிழகம் கடுமையான தட்டுப்பாட்டினை எதிர் நோக்கி இருக்கும் சூழலில் கடந்த ஆறு மாதங்களாக கூடுதல் விலை தந்து வெளி மாநிலத்தில் இருந்து தருவித்து தமிழக அரசு தருகிறது. இந்த கானல் நீர் விரைவில் மறையும். மக்கள் பெரும் துயரில் தள்ளப்படுவார்கள்.
இந்த சூழலில் அதிமுக மீண்டும் ஒரு அபத்த தேர்தல் அறிக்கையினை இலவசங்களாய் அள்ளி தெறித்துள்ளது.

அதிமுக அரசின் தேர்தல் அறிக்கை
11. மின்சாரத்தில் தன்னிறைவு
* தடையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
* அடுத்த 5 ஆண்டுகளில் புதிய அனல் மின் நிலையங்கள் மூலம்  13,000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் பெறப்படும்.
* புனல் மின் திட்டங்கள் மூலம் 2,500 மெகாவாட் மின்சாரம் பெறப்படும்.
* 3,000 மெகாவாட் மின்சாரம் சூரிய சக்தி மூலம் பெறப்படும்.
* சீரான மின்சாரம் விநியோகிக்கும் வகையில் மின் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும்.   
12. கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டம்
* மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று  என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம் அனைவரும் பயனடைவதுடன் தற்போது 100 யூனிட் வரை பயன்படுத்தும்  78 லட்சம் மின் உபயோகிப்பாளர்கள் மின் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை.

அதிமுகவின் இந்த தேர்தல் அறிக்கை எந்த அளவிற்கு உருப்படியானது என எடை போட முதலில் நம்மிடம் உள்ள மின் உற்பத்தி எப்படி உள்ளது என தெரிந்து கொள்வோம்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) சமீபத்திய ஆண்ட‌றிக்கை படி (29/2/2016) தமிழகத்திற்கு தற்போது கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 13883.5 மெகாவாட். இந்த அளவானது கீழ்கண்ட வழிகளில் பெறப்படுகிறது

1.      அரசுக்கு நேரிடையாக கிடைப்பது

·       அனல் மின் சக்தி  4660 மெகாவாட்
·       வாயு விசையாழி 516 மெகாவாட்
·       புனல் மின் சக்தி   2288 மெகாவாட்
·       தனியார் அரசு கூட்டு ஒப்பந்தம் 852.5 மெகாவாட்
·       பயோ மாஸ் 68 மெகாவாட்
·       மத்திய அரசு மின் பகிர்மானம் 5464 மெகாவாட்

 2.      தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் மூலம் பெறப்படுவது

·       தனியார் காற்றாலை 7512 மெகாவாட்
·       சூரிய மின் சக்தி581.26 மெகாவாட்
·       பயோ மாஸ் 230 மெகாவாட்
·       தனியார் அரசு கூட்டு ஒப்பந்தம்  659 மெகாவாட்

மேலே சொன்ன புள்ளி விபரங்களில் இருந்து மின் உற்பத்தி திறனில் நம் கையிருப்பு எவ்வளவு உள்ளது என புரிந்து இருக்கும்,

இனி அதிமுக ஆட்சியில் நடந்த மோசமான மின் உற்பத்தி மற்றும் பகிர்வு மேலாண்மை, ஊழல் ஆகியவற்றால் என்ன மாதிரியான பிரச்சினைகள் உள்ளது என பார்ப்போம்.

Ø ஒவ்வொரு ஆண்டும் நமது மின் தேவை  பற்றக்குறை 8 சதவிகிதம் அதிகரித்து கொண்டே செல்கிறது. தோரயமாக இந்த ஆண்டு நமக்கு 14200 ல் இருந்து 14800 மெகாவாட் மின் சக்தி பற்றாக் குறையாக உள்ளது.  அதாவது நம்மிடம் இருக்கும் மின் சக்தி கையிருப்பை விட அதே மடங்கு நமக்கு இன்னும் தேவை உள்ளது. அதாவது இதே ஆட்சி நீடித்தால் அடுத்த ஐந்தாண்டில் 40 சதவிகிதம் மின் சக்தி பற்றாக்குறை ஏற்படும். அதவாது கையில் இருப்பதில் இன்னும் பாதி அளவு மின் உற்பத்தி. இதை கண்டிப்பாக சமாளிக்கவே முடியாது

Ø தற்போது தமிழக மின்வாரியத் துறைக்கு வெளியில் இருந்து மின்சாரம் வாங்கிய வகையில் 80,000 கோடி கடன் உள்ளது. இது ஒரு சாம்பிள்தான்.

Ø தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் மதிப்பு கூட்டி கூடுதல் விலைக்கு மின் சக்தியினை கொள் முதல் செய்த வகையில் பல ஆயிரம் கோடி ஊழல் புரிந்துள்ளது. உதாரணத்திற்கு சூரிய மின் சக்தி கடந்த வருடம் கொள்முதல் விலை யூனிட் ஒன்றிற்கு 7 ரூபாய். ஆனால் இவ்வருடம் சூரிய மின் சக்தி உற்பத்தி இந்தியாவில்  கணிசமாக அதிகரித்துள்ள சூழலில் கொள்முதல் விலை யூனிட் 3 ரூபாய்க்கு கீழே கிடைக்கும் சூழல் உள்ளது. ஆனால் அதே பழைய விலைக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டதன் மூலம் பல ஆயிரம் கோடிகளை லஞ்சமாக தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெற்றுள்ளனர்.

Ø மின் உற்பத்தி கையிருப்பே மோசமாக இருக்கும் லட்சணத்தில் தற்போது வீட்டிற்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவித்துள்ளனர். எப்படி பார்த்தாலும் இது பொது மக்கள்தானே பலனடைகிறார்கள் என யோசிப்பவர்கள் பின் வரும் எளிய கணக்கினை ஒரு முறை சரி பாருங்கள்.

Ø தமிழ்நாடு மின்வாரியத்தின் மின் சக்தி விற்பனை கணக்கீட்டின் படி வீட்டு பயன்பாட்டிற்கு 100 யூனிட் கரண்ட்டின் விலை (300+20) 320 ரூபாய். இதில் அரசின் மானியம் 200 ரூபாய் ஏற்கனவே நடை முறையில் உள்ளது. ஆக பொது மக்கள் செலுத்த வேண்டிய‌ தொகை 120 ரூபாய். உத்தேசமாக‌, 75 லட்சம் குடும்பத்திற்கு மாதம் ஒன்றிற்கு அரசுக்கு இதன் மூலம் இழப்பு 90 கோடி. ஒரு வருடத்திற்கு 1080 கோடி, அடுத்த ஐந்து வருடத்திற்கு 5400 கோடி.  மானியத்தோடு சேர்த்து தோராயமாக‌ 15000 கோடிக்கு மேல் இழப்பு நேரிடும். தமிழக அரசின் மின்வாரியத்தின் பழைய கடன் 80,000 கோடியுடன் இந்த புதிய சுமை 5400 கோடியும் கூடுதலாக சேரும்.

இப்பொழுது நம்மிடம் இருக்கும் கேள்வி

1.இந்த கடனை எப்படி தமிழக அரசு அடைக்கப் போகிறது?
2.நமக்கு இன்னும் தேவைப்படும் 14000 மெகாவாட் மின் உற்பத்திக்கான புதிய திட்டங்கள் எதுவும் இல்லாத சூழலில் எப்படி மின் தட்டுப்பாட்டினை சமாளிக்க போகிறோம்?

·       தற்போது மின்வாரிய கணக்கீட்டு படி (On line Tariff Calculator For LT Services- Bi-monthly)  முதல் 100 யூனிட் வரை 120 ரூபாய், 1 யூனிட் கூடுதலாக போனால் (100+1 ) 50 ரூபாய் தேவையில்லாமல் கூடுதலாக சேர்த்து 170 ரூபாய் கட்ட வேண்டும். இதே போல்  200 யூனிட் வரை 320 ரூபாய். 1 யூனிட் கூடுதலாக போனால் (200+1 ) 433 ரூபாய் கட்ட வேண்டும். ஆக மக்கள் பயன்படுத்தாத மின் உற்பத்திக்கும் சேர்த்து பணம் வசூலிக்கிறார்கள். இந்த முறையால் மக்களுக்கு பெரும் தண்ட செலவே ஏற்படுகிறது. இம்முறையினை மாற்றி மக்களுக்கு ப்ரீ பெய்ட் முறையினையோ அல்லது பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு மட்டும் பணம் செலுத்தும் முறையினையோ அறிமுகப்படுத்தலாம். இப்படி மோசமான மின் பகிர்வு மேலாண்மையினால் லட்சக் கணக்கான நடுத்தர குடும்பங்கள் அல்லோலப் படுகிறது.

·       பிரித்தானியாவில் ப்ரீ பெய்ட் அட்டைகள் மூலம் உள்ளூர் மளிகை கடை, அங்காடிகளில் பணம் செலுத்தி விட்டால் அவர்கள் தரும் ரகசிய எண்ணை வீட்டில் உள்ள மின் பகிர்வு கருவியில் உள்ளீடு செய்து விட்டால் செலுத்திய பணத்திற்கு இணையான மின் சக்தியினை எடுத்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் மீதம் எவ்வளவு பணம் இருக்கிறது தொடர்ந்து கண்காணிக்க முடிவதால் மின் விரயம் மற்றும் மின் சேமிப்பு ஆகியவற்றை பற்றி கணக்கிட முடிகிறது.

·       கடந்த ஐந்து வருடங்களில் சூரிய ஆற்றல் மின் திட்டம் தவிர்த்து உருப்படியான எந்த ஒரு திட்டமும் தமிழகத்தில் முன்னெடுக்கப்படவில்லை. இந்த திட்டத்திலும் பல ஆயிரம் கோடி ஊழல்.

·       வரலாறு காணாத மின் வெட்டினால் தமிழகத்தில் லட்சக் கணக்கான குடிசை தொழில் செய்வோர் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தங்கள் வேலை வாய்ப்பினை இழந்து தவித்துள்ளனர்.

·       மிகப் பலவீனமான மின் உற்பத்தி மேலாண்மை மற்றும் மோசமான மின் தட உட்கட்டமைப்பினால் தமிழகம் தற்போது மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்தில் மிகப் பெரும் சவாலை இன்னும் ஆறு மாத காலத்தில் சந்திக்க உள்ளது. உதாரணத்திற்கு, தமிழகத்தின் மின் வழி தடத்திற்கான மேம்பாட்டிற்கு ஜப்பான் நாடு தந்த ஆயிரக்கணக்கான கோடி நிதியினை கூட உருப்படியாய் பயன்படுத்தாத செயலற்ற அரசால் எப்படி வரப்போகும் ஐந்தாண்டில் மட்டும் புதிய மின் உற்பத்தி திட்டங்களை தர முடியும். இது குறித்து பலமான கண்டனத்தை சமீபத்தில் ஜப்பான் அரசு இந்தியாவிற்கு தெரிவித்துள்ளது.

எங்கும் கொள்ளை எதிலும் கொள்ளை என்ற இந்த அதிமுக அரசை தயவு செய்து தூக்கி எறியுங்கள். இலவசங்கள் மூலம் மீண்டும் ஒரு முறை உங்கள் வாழ்வை சூறையாட போகிறார்கள்.

இவர்கள் போட்ட ஆட்டத்தால், தேர்தலுக்கு பிறகு மிகப் பெரிய ஒரு மின் வெட்டு வரப் போகிறது அதற்காகவும் தயாராக இருக்கவும் மக்களே.

தயவு செய்து இந்த ஊழல் அரசை தூக்கி எறியுங்கள்.

சிந்தித்து வாக்களியுங்கள்! உங்கள் வாக்குகள் விற்பனைகல்ல.

உங்கள் வாக்கு மாற்றத்தை நோக்கி இருக்கட்டும்.




No comments:

Post a Comment