ஜப்பான் ஆரம்பக் கல்வி பாட புத்தகங்கள் -1
“பாடத்திட்டமே சரி இல்லை”, “கணக்கு
ஒழுங்காவே சொல்லித் தரமாட்டேன் என்கிறார்கள்”, “ஏ பி சி டி இன்னும் எழுதத் தெரியலை”,
“இரண்டு போயம் சரியா சொல்லித் தர மாட்டேங்குறாங்க”, “இத்து போன சிலபஸ்”,
ஜப்பான்காரன பாருங்க தண்ணில ஓடற
வண்டி கண்டுபிடிச்சிட்டான், எல்லா வேலையையும் ரோபோட்தான் அங்கு செய்யுதாம்.. அவனுங்க
மாதிரி நாமளும் முன்னேறனும். நம்ம ஊர் பாடத்திட்டத்தை அப்டியே தூக்கி எறிஞ்சுட்டு மாத்தனும்...
இப்படி நிறைய கூப்பாடுகளை சமீப காலத்தில் கேட்க முடிகிறது..
ஆனால் என்றாவது ஜப்பானிய ஆரம்ப
பள்ளிகளில் என்ன சொல்லித் தருகிறார்கள் என்று யோசித்தது உண்டா?
ஜப்பானில் 4 வயதுக்குட்டப்ட்ட
பாலர் பள்ளிகளில் தொடங்கி வகுப்பு 1 மாணவர்களுக்கான புத்தகங்களில் முதலில் சொல்லித்
தருவது
எப்படி கழிவறையில் ஆய் போவது?
எப்படி பேனா பிடிப்பது?
எப்படி பெரியவர்கள் இருக்கும்
அறையில் நுழையும் போது நாம் முன் அனுமதி பெற வேண்டியது?
சாப்பிட்டு முடித்த பின் பள்ளியினை
எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வது?
இப்படிப்பட்ட சமூக கல்வியைத்தான்
ஜப்பானிய பிஞ்சுகளின் மனதில் முதலில் விதைக்கிறார்கள், அதனால் நல்ல குடிமகன்களை பெறுகிறார்கள்.
நண்பர்களே, கணக்குகளை ஒரு கால்குலேட்டர்
துணை கொண்டு பின்னாளில் போட்டு விடலாம், ஆங்கிலத்தைக் கூட ஒரு டிரான்சிலேட்டர் வசதியுடன்
செய்து விடலாம். ஆனால் சமூக கல்வியை அவர்கள் எங்கே கற்க முடியும்?
ஆரம்ப கல்வியை வேறு தளத்தில்
நாம் அணுக வேண்டிய நேரம் இது.
சமச்சீர் கல்வி இந்த தளத்தில்தான்
துவங்கியது. முளையும் போதே குய்யோ முய்யோ என கத்தியே அதனை கிள்ளி போட்டு விட்டீர்கள்.
No comments:
Post a Comment