ஹோலிப் பண்டிகையும், ஆபத்தான வண்ணப் பொடிகளும்
ஹோலி கொண்டாட்டத்தில் இப்போது எந்த மாதிரியான கலர் பொடிகளை பயன்படுத்துகிறார்கள் என தெரியவில்லை.
மேலோட்டமா தேடினால் மஞ்சள், குங்குமம் என நெஞ்சை வருடுகிறார்கள்.. ஆனால் சிந்தடிக் பாலிமர் சார்ந்த பொருட்களை வண்ணப் பொடிகளாக பயன்படுத்துவதாக சமீபத்திய ஆய்வறிக்கைகளும், சில முன்னனி இதழ்களும் கவலை தெரிவிக்கின்றன.
இந்தியாவில் ஒரு கல்யாண குணம் இருக்கிறது. எதை வேண்டுமானாலும் உடைத்துப் பேசலாம், மதம், இனம் சார்ந்த நம்பிக்கைகள், விழாக்கால கொண்ட்டாங்களிலினால் ஏற்படும் சுற்றுப் புறச் சூழல் சீர்கேடுகளை பேசினால் அசல் சிக்கலை விட்டு விட்டு தீமைகளை சுட்டிக் காட்டுபவனை காட்டடி அடிப்பார்கள்.
இத்தையக நச்சு வண்ணப் பொடிகள் நேரடியாக உடலில் படும் போதோ தோல் அரிப்பு வியாதிகளும் வரும் என எச்சரிக்கிறார்கள். இவ்வாறு பாதிப்படையும் தோல் வழியாக உடலுக்கு தீங்கு விளைவிக்கு நச்சுத் தனமை உடைய தனிமங்கள் எளிதில் செல்லவும் இது வழி வகுக்கும்.
இதை விட சிக்கல் இந்த நச்சு வண்ணப் பொடிகள் நேரடியாக நீரில் கலக்கும் போது கிட்டதட்ட சாயப்பட்டறை கழிவு நீரை நீர் நிலைகளில் கலக்கும் போது என்ன கேடு விளையுமோ அதற்கு குறைவில்லாத பாதிப்பையே சுற்றுப் புற சூழலில் ஏற்படுத்தும்.
ஒரு சிறிய உதாரணத்தை இங்கே ஒப்பிட வேண்டுமென்றால், வீட்டில் துணி துவைக்கும் போது துணிகளில் இருந்து வெளியேறும் சாயத்தின் அளவை விட பல மடங்கு அதிக அடர்த்தியுடன்உடனடியாக நீர் நிலைகளில் இது கலக்க வாய்ப்பு அதிகம். மேலும் சிக்கலான மூலக்கூறு வடிவமைப்பில் இருக்கும் வண்ணப் பொடிகளை மட்கச் செய்வதோ சுத்திகரிப்பு செய்வதோ மிக கடினமான செயல்.
தற்போது தலைகீழ் சவ்வூடு பரவல் (Reverse Osmosis) நுட்பம்தான் சாயப்பட்டறை கழிவுகளை சுத்திகரிக்க பயன்படுகிறது. ஆனால் ppm (Parts per million) அளவுக்கு இதனால் சுத்திகரிக்க முடியாது. அந்த வகையில் இது போன்ற கொண்டாட்டங்களில் சிந்தடிக் பொடி வகைகள் ஆபத்தானது.
No comments:
Post a Comment