2016 ஆம் ஆண்டு சிறந்த அறிவியல் நுட்ப விளக்க செயற்பாட்டாளர்
விகடன் 2016 ஆம் ஆண்டிற்கான டாப் 10 தமிழர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
இதில் நான் ஆவலுடன் எதிர்பார்த்த ஒருவர் பெயர் இடம் பெறவில்லை.
அவர் பெயர் பிரேமானந் சேதுராஜன்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பணிபுரிந்து கொண்டே தாய்த் தமிழ் மொழியில் எளிமையாக
அறிவியல் மற்றும் நுட்பவியல் தகவல்களை யூ டியூப் சேனல் மூலம் லட்சக் கணக்கான மக்களுக்கு
புரியும் வண்ணம் சென்றடைய வைத்துள்ளார்.
அவற்றில் குறிப்பிடத்தக்கவை
1.கால இயந்திரத்தில் பயணிப்பது எப்படி?
2. ஏ டி எம் பின் நம்பர் பாதுகாப்பானவையா?
3.ஜி பி எஸ் கருவிகள் எப்படி இயங்குகிறது?
4. நோபல் பரிசு பெற்ற புவி ஈர்ப்பு அலைகள் கோட்பாடு
5. இரண்டு நோட்டு புத்தகங்களை வைத்து காரை இழுக்க முடியுமா?
6. நுண் கணிதம் என்றால் என்ன?
என்று இவரது காணொளிகள் சுவாரசியமாக நீண்டு கொண்டே போகும்
மேலும் Lets Make Engineering Simple (LEMS) என்ற
அகாடமியினை துவக்கி முகநூல் வாயிலாகவும் சமூக வலைதளங்களில் எளிய மக்களுக்கு அறிவியலை
புரிய வைக்கிறார். இந்த வருடம் தமிழகத்தில்
உள்ள பல பள்ளிகளுக்கு நேரில் சென்று தனது LMES அகாதமி மூலம் அடிப்படை அறிவியலை விளையாட்டு
சோதனைகளாக செய்து காண்பித்துள்ளார். தனி ஒரு மனிதராக தன்னார்வலர்களின் உதவியுடன் இவர் தொடரும் இப்பணியை பாராட்டியே தீர வேண்டும்.ஏனெனில் இவை எல்லாம் அரசு செய்ய வேண்டிய பணி.
தாய் மொழியில் அறிவியலை எளிமையாக விளக்குவதால் பல ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள்,
பொறியாளர்கள், மருத்துவர்கள் எதிர்காலத்தில் வருவதற்கான உந்துதலை இவரது அகாதமி ஏற்படுத்தி
தந்துள்ளது. ஆங்கிலத்தை ஒப்பிடும் போது நம்
மொழியில் அறிவியல் நுட்ப அடிப்படைகளை விளக்கும் புத்தகங்கள் மிகக் குறைவே. இதில் நாம்
அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது.
என்னைப் பொறுத்த வரையில் தாய் மொழி வாயிலாக அறிவியல் நுட்பங்களை
எளிய வகையில் கற்றுத் தரும் மனிதர்களை நாம் போற்றி பாராட்ட வேண்டும்.
தமிழ் மொழிக்கு
மிக அவசியமான தேவையாக இதனைப் பார்க்கிறேன். அந்த வகையில் பிரேமானந் இந்த வருடத்தின்
டாப் டென் மனிதர்களில் ஒருவராக நிச்சயம் இருக்க வேண்டியவர். இன்னும் பல இளைஞர்கள் இவரைப்
போல் அறிவியல் நுட்ப துறையில் தாய் மொழியில் பணியாற்ற வர வேண்டும்.
வாழ்த்துகள் பிரேமானந். தாய் மொழியில் உங்கள் அறிவியல் பணி தொடரட்டும்.
Premanth Sethurajan |
குறிப்பு:
1.
பிரேமானந் அவர்களின் LEMS
என்ற அகாதமியில் வெளி வரும் அறிவியல் நுட்ப சோதனை காணொளிகளை அவரது https://www.youtube.com/user/premanand20081 யூ டியூப் சேனலில் காணலாம். முகநூலில் அவரது
நிகழ்ச்சிகளை பின் தொடர நினைப்பவர்கள் இந்த முகவரியில் https://www.facebook.com/LMESAcademy/?fref=ts அவரை தொடரலாம்.
2.
ஆர்வலர்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடைகள் மூலம்
பள்ளி மாணவர்களுக்கு சோதனைகள் செய்து காண்பிக்கப் படுகிறது. இவரது அகாதமிக்கு நன்கொடை
செலுத்த விரும்புபவர்கள் இந்த இணைய முகவரியில் http://lmesacademy.com/donate/மேலதிக தகவலை
பெறலாம்.
பிரேமானந் பற்றி பி பாசிட்டிவ் இணைய இதழில் வெளி வந்த நேர்காணல் http://bepositivetamil.com/?p=1356
பிரேமானந் பற்றி பி பாசிட்டிவ் இணைய இதழில் வெளி வந்த நேர்காணல் http://bepositivetamil.com/?p=1356
No comments:
Post a Comment