பழமையும் புதுமையும்
கடந்த அறுபது வருடத்தில் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் (microelectronics) துறையில் ஏற்பட்டிருக்கும் புரட்சி கையடக்க கால்குலேட்டரில் பெரும் மாற்றத்தினை கொண்டு வந்திருக்கின்றது.நேற்று உயனோ தேசிய இயல்அறிவியல் அருங்காட்சியகத்தில் (Uneo National Natural Science Museum, Japan) இருந்த காசியோ (Casio) நிறுவனத்தின் முதல் தலைமுறை கால்குலேட்டரை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. காரணம் அதன் அளவு ஏறத்தாழ ஒரு தட்டச்சு எந்திர அளவிற்கு இருந்தது. இதன் கணக்கிடும் திறன் அளவு 14 இலக்கங்களில் மின் சுற்றுகள் மூலம் (Electric compact relay calculator) வடிவமைக்கப்பட்டிருந்தது. ஏறத்தாழ 140 கிலோ எடையுள்ள இந்த முதல் தலைமுறை காசியோ கால்குலேட்டர்
இன்று கையடக்கத்தில் அல்ஜீப்ரா, கால்குலஸ் மற்றும் இன்ன பிறவற்றை எளிதில் கணக்கிடும் வகையில் வந்து விட்டது.
கூடிய விரைவில் கிராபின் (Graphene) போன்ற நானோ அளவிலான அடுக்குகள் (layered nanostructures ) மின் சுற்றுகளாக பயன்படுத்தும் நுட்பங்கள் வந்துவிடும். மிக அதிக கடத்து திறனும் (electron mobility )அளவில் மிகச் சிறிய கிராபின் நானோ பட்டைகள் (Grephene Nanoribbon) மின் சுற்று வடிவமைப்பிற்கு பெரிதும் பயனளிக்க கூடியது. இதன் திறன் வேகம் 500 ஜிகா ஹெர்ட்ஸ் வரை கொண்டு செல்லலாம் என யூகிக்கப்படுகிறது. இதன் மூலம் தற்போது புழக்கத்தில் உள்ள கணக்கு செயலிகளின் நினைவகங்கள் பன் மடங்கு உயர்த்தப்படும். மிக குறைவான காலத்தில் (Processing Speed) மிகப் பெரிய பாலினாமியல் கணக்குகளை விரைவாக கணக்கிடும் கால்குலேட்டர் சந்தையில் வந்து விட்டாலும் ஆச்சரியபட ஒன்றும் இல்லை.
No comments:
Post a Comment