நீரில்லா பூச்செடிகள்
ஜப்பான், தோக்கியோவில் உள்ள மியோதென் (Myoden) இரயில் நிலையத்தின் வாசலில் அழகான பூச்செடிகளால் வடிவமைக்கப்பட்ட அலமாரிகளை கண்டேன்.
சிறப்பு என்னவெனில் இச்செடிகள் யாவும் நீர் இல்லாமலேயே வளர்கின்றது. மழை பெய்யும் போதோ அல்லது வளி மண்டலத்தில் உள்ள ஈரப்பதத்தினையோ உறிஞ்சி உயிர் வாழ்கிறது. இதற்கு இச்செடிகளின் கீழ் இணைக்கப் பட்டுள்ள பஞ்சு போன்ற அமைப்பு (சணல் நார்) வைக்கப்பட்டுள்ளது. இது செடிகளுக்குத் தேவையான நீரினை சேமித்து வைத்துக் கொள்கிறது. இதனால் தினமும் இச்செடிகளுக்கு விடும் நீரும் சேமிக்கப்படுகிறது.
காற்றில் உள்ள ஈரப்பதத்தினை ஈர்க்கும் வண்ணம் செடியின் தொட்டிகள் புவி ஈர்ப்பு விசைக்கு பக்கவாட்டில், சூரிய ஒளியானது நேரடியாக படாமல் இருக்கும் வண்னம் பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ளது. செடிகள் நன்கு செழித்து வளர, இந்த பூத் தொட்டிகளுக்குள் இயற்கையான மட்கிய இலை மற்றும் சாண உரமும் இட்டிருக்கிறார்கள்.
மலைவாசஸ்தலங்களில் இது போன்று பாறைகளின் மீது மண், நீர் இல்லாமலேயே வளரும் செடிகளைப் போன்ற அமைப்பினை போல் உள்ளது. இதே போன்று நம் ஊரிலும் வறண்ட பகுதிகளில் பூச்செடிகள் வளர்க்க முடியுமா?
தாவரவியலாளர்கள் இந்த செடிகள் பற்றி தெரிந்தால் விளக்கவும்.
இரவில் இப்பூக்கள் ஒளிர இதன் நடுவில் சோலார் பேனல்கள் அமைத்திருக்கிறார்கள். அருகில் நின்று சிறிது நேரம் பூக்களின் அழகை கண்டு ரசித்து விட்டு வந்தேன்.
No comments:
Post a Comment