Monday, 8 February 2016



பெல்பாஸ்டு நகரில் நூற்றாண்டுகளை கடந்த பழமையான புனித ஜார்ஜ் சந்தை (St George Market) உள்ளது.

இங்கு பெல்பாஸ்டு ஆர்ட் என்ற ஓவிய கடையில் வைக்கப்பட்டிருந்த குயின்சு பல்கலைக் கழக ஓவியம் மிக அருமையாக இருந்தது.

அங்கு இருந்த ஓவியரிடம் எங்கள் பல்கலைக் கழகத்தின் முகப்பு வாயிலுக்கு முன்னால் இருக்கும் ராணி சிலை இந்த ஓவியத்தில் இல்லையே ஏன் என்றேன். அவர் என்னை ஆச்சரியமாக பார்த்து விட்டு நீங்கள் நன்றாக கவனித்து உள்ளீர்கள் என பாராட்டி விட்டு உள்ளே தேடி இன்னொரு ஓவியத்தை காண்பித்தார்.

அதில் ராணியின் சிலை இருந்தது. பிறகு அந்த ஓவியம் எவ்வளவு விலை எனக் கேட்டேன். ஐந்து பவுண்டுகள் என கூறினார். நான் அவரிடம் ஐந்து பவுண்டுகளை கொடுத்த போது ராணி சிலை இல்லாத மற்றொரு ஓவியத்தினை எனக்கு அன்பளிப்பாக கொடுத்து விட்டார். ஏன் எனக் கேட்டேன், மற்றவர்களை காட்டிலும் குயின்சு பல்கலைக் கழகத்தில் இருந்து வந்து இந்த ஓவியத்தினை சொல்லி வாங்குவதால் உங்களுக்கு என் அன்பு பரிசு எனக் கொடுத்தார். அந்த ஓவியரின் பெயர் யங்.

இது போன்று நம் தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்கள் நினைவு சின்னமாக போற்றப் படக் கூடிய ஓவியங்களாக வரையப்பட வேண்டும்.


 ஓவியர் யங்கின் குயின்சு பல்கலைக் கழக ஓவியம்.


ஓவியர் யங் உடன் ஒரு தாமி புகைப்படம்.




No comments:

Post a Comment