மிதி வண்டி பாதை
எல்லா பெரிய வாகனங்களும் செல்லும்
முக்கிய சாலைகளில் மிதிவண்டிகளுக்கென்று தனித்த பாதை உள்ளதென்றால் அது ஜப்பானின்
தலைநகராகிய டோக்கியோதான்.
தற்போது லண்டன் நகரில் இதே போல் தனித்த
மிதி வண்டி பாதைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு உள்ளது. இதன் மூலம் வாகனங்களால்
வெளி வரும் கார்பன் புகையினை கார்பன் நச்சுப் புகையினால் சுற்றுச் சூழல் சீர்கேடு
அடைவதை பெருமளவு தடுக்க முடியும் என லண்டன் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
பெரும்பாலான நாடுகளில் மிதிவண்டிகளுக்கென்று பிளாட்பாரத்தின் மீது தனியாக சிறிய பாதைகள் உண்டு. ஆனால் இதே தடத்தில் பாதசாரிகளும் நடப்பதால் அலுவலகத்திற்கு மிதிவண்டியில் செல்பவர்கள் தயங்குகின்றனர். எனவேதான் முக்கிய சாலையில் கொஞ்சம் இடத்தை பிரித்து மிதி வண்டிகளுக்கென்று தனித்த பாதையினை இப்போது அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்த பாதை காலையில் அலுவலகத்திற்கு செல்பவர்களுக்கு நன்கு கை கொடுக்கும்.
பத்து மைல் தொலைவில் அலுவலகத்திற்கு செல்பவர்கள் ஒரு மணி நேரத்தில் மிதி வண்டியிலேயே சென்று விடலாம். உடற்பயிற்சி செய்த மாதிரியும் ஆயிற்று, சுற்றுச் சூழலை பாதுகாத்த மாதிரியும் ஆயிற்று.
குறிப்பு:
சென்னையிலும் இது போன்று வருவதற்கு
முன் குண்டும் குழியுமாய் இருக்கும் கொடூர சாலைகளை முதலில் புணரமைக்க வேண்டும்.
பிளாட்பாரத்தில் இருக்கும் ஆக்கிரமப்புகளை நீக்கினால் அகலமான சாலை கிடைப்பதோடு இது
போன்ற வசதிகளை கொண்டு வர முடியும்.
No comments:
Post a Comment