ஜப்பான் தபால் நிலையங்கள் -4
ஜப்பான் தபால் நிலையங்கள் உள்ளிட்ட பொது சேவை அலுவலகங்களில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான, பேனா, தபால் உறைகள் ஒட்ட தேவையான பசை, கால்குலேட்டர், எடை கருவி, கண்ணாடி, அச்சு வைக்கும் மை, உள்ளிட அத்யாவசிய தேவை பொருட்கள் அனைத்தும் இலவசமாக பொது மக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டு இருக்கும்.
இங்குள்ள மக்களும் இதனை முறையாக பயன்படுத்துகின்றனர். இதற்கான கல்வியினை ஜப்பான் பள்ளி பருவத்திலேயே தந்து விடுகிறது
நம் தேசத்தின் அலுவலகங்களில் மக்களுக்கு தேவையான இது போன்ற வசதிகள் கொண்டு வரப்பட வேண்டும். அதே சமயம் மக்கள் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டு இருக்கும் பொருட்களை பாதுகாப்பாக பயன்படுத்தி அரசுக்கு நல் ஒத்துழைப்பு தர பொது மக்களையும் பழக்கப்படுத்த வேண்டும்.
இதற்கு நாம் செய்ய வேண்டியது தற்போது பள்ளியில் பயிலும் மாணவர்களை தபால் நிலையங்களுக்கு நேரில் அழைத்து சென்று இது போன்ற வசதிகளை கொடுத்து அவர்களை பயன்படுத்த சொல்லி பழக்க வேண்டும்.
ஒரு நாடு வல்லரசு ஆக தேவையில்லை, அது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் குடியரசு ஆக இருந்தால் போதுமானது.
இன்னும் நம் ஊர் தபால் நிலையங்களில் பசை இல்லை என்ற பழைய பஞ்சாங்கத்தினை மாற்றுவோம்.
No comments:
Post a Comment