ஜப்பானிய உணவு விடுதிகள்
நம் ஊரில் உணவு விடுதிகளில் கடைக்கு சாப்பிட சென்றால் உணவு பட்டியலை பார்த்து ஆர்டர் செய்ய காத்திருக்க வேண்டும். அதுவும் கூட்ட நெரிசல் இருக்கும் போது சென்றால் சுலபத்தில் சிப்பந்திகளை பிடிக்க முடியாது.
சப்பானிய உணவு விடுதிகளில் சாப்பிட செல்லும் போது பதார்த்தங்களை ஆர்டர் சொல்ல சிப்பந்தியை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம்.
எல்லா மேசைகளிலும் வைபை வசதியுடன் எல் ஈ டி தொடு (LED screen) திரைகள் இருக்கும் அவற்றில் உணவு படங்களுடன் விலை பட்டியலும் இருக்கும். அவற்றினை தெரிவு செய்வதன் மூலம் நேரடியாக சமையல் கட்டில் உள்ளவர்களுக்கு நாம் ஆர்டர் செய்வது சென்று விடும்.
மேலும் உணவு அட்டவணையில் சப்பான், கொரிய, சீன மொழி என மூன்றிலும் தருகிறார்கள்.
தமிழகத்தில் தற்போது பெரும்பாலான உணவு விடுதிகளில் தமிழில் உணவு பட்டியலை காண்பதே அரிதாகி விட்டது
No comments:
Post a Comment