2015 நோபல் பரிசு வேதியியல்
பிரிவு (2015 Nobel prize
for Chemistry)
வேதியியல் பிரிவில் இவ்வருடத்திற்கான நோபல் பரிசு இங்கிலாந்து நாட்டின் பிரான்சிசு கிரிக் நிறுவனத்தினை சேர்ந்த பேராசிரியர் தாமசு லிண்டால் (Prof. Tomas Lindahl), அமெரிக்காவின் கோவர்டு கக்சு மருத்துவ நிறுவனம் மற்றும் டியூக் மருத்துவமனைப் பல்கலைக் கழக பள்ளியினை சேர்ந்த பேராசிரியர் பால் மொதிரிச்சு (Prof. Paul Modrich), ஆகியோர் அமெரிக்காவின் சேப்பல் கில்லில் உள்ள அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக் கழகத்தினை சேர்ந்த பேராசிரியர் அசிசு சன்சார் (Aziz Sancar) என்பாருடன் இவ்வருடத்திற்கான வேதியியல் பிரிவின் நோபல் பரிசை கூட்டாக பெறுகின்றனர்.
டி. என். ஏ மூலக்கூறுகளின் பழுது இயக்கவியலில் (for mechanistic studies of
DNA repair) இவர்கள் மேற்கொண்ட ஆய்விற்கு இவ்விருது இவர்களுக்கு கூட்டாக வழங்கப்படுகிறது.
விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மனித உடலில் உள்ள செல்கள் எவ்வாறு டி.என்.ஏ மூலக்கூறுகளை பழுது பார்த்து (DNA repair) மரபணு தகவல்களை பாதுகாப்பாக அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்து செல்லும் வகையில்
சேமித்து வைக்கிறது என்பதனை கண்டறிந்து விளக்கியமைக்கான இவர்கள் இவ்விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
மருத்துவ துறையின் கோணத்தில் பார்த்தால், சுற்றுப் புற சூழல் சீர்கேடு உட்பட நம் உடலின் செல்லில் பொருத்தமற்ற முறையில் தானாகவே ஏற்படும் பழுதுபார்த்தல் (mismatch repair) நிகழ்வின் போது புற்று நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் இவர்களது ஆய்வு தெளிவாக விளக்குகிறது.
ஆகையால், நம் உடலின் இயக்கத்தினை அறிந்து கொள்வதோடு மட்டுமல்லாது, மனிதர்களின் உயிர்காக்கும் சிகிச்சைக்கும் வழிபிறக்கும் வகையில் இவர்களது ஆய்வு பங்களிப்பு உள்ளதென அங்கீகரித்து இவ்வருடத்திற்கான நோபல் பரிசு வேதியியல் பிரிவில் வழங்கப்பட்டு இருக்கிறது.
Image credit: Nobelprize.org |
No comments:
Post a Comment