Tuesday, 6 October 2015

நோபல் பரிசாளரை தந்த முதல் ஜப்பானிய‌ தனியார் பல்கலைக் கழகம் ‍(தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகம்)


(First private university in Japan producing Nobel Laureate)


இவ்வருடத்திற்கான மருத்துவம் மற்றும் உடல் இயங்கியலில் நோபல் பரிசு  பெற்ற பேராசிரியர் ஓமுரா (Prof. Satoshi Omura) எமது தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

பேராசிரியர் ஓமுரா தனது முது நிலை அறிவியல்  படிப்பினை 1963 ஆம் ஆண்டு தோக்கியோ அறிவியல் பலகலைக் கழகத்தில் பயின்றார். பின்னர் 1970 ல் தனது முனைவர் ஆய்வு பட்டத்தினை எமது பல்கலைக் கழகத்தின் வேதியியல் துறையில்  பெற்றார்.

ஜப்பானிய மண்ணில்  தனியார் பல்கலைக் கழகத்தில் பயின்ற மாணவர் ஒருவர் நோபல் விருது பெறுவது என்பது இதுவே முதல் முறை ஆகும்.

பேராசிரியர் ஒமுரா அவர்களது முது நிலை மற்றும் முனைவர் ஆய்வு ஏடுகளை பொது மக்களின் பார்வைக்காக இன்று முதல் எமது தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகத்தின் அருங்காட்சியகத்தில் வைக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் காலை பத்து மணியில் இருந்து மாலை நான்கு மணி வரை பொது வேலை நாட்களில் இயங்கும். இது தோக்கியோ நகரில் கசுரகுவா  (Kasuraguwa) இரயில் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது

(மேலும் இந்த அருங்காட்சியகத்தில் உள்ள‌ கணித விளையாட்டு புதிர் வடிவங்கள் உலக பிரசித்தி பெற்றவைதோக்கியோ நகரில் நேரம் இருப்பவர்கள் நேரம் கிடைப்பின் குழந்தைகளை அழைத்து செல்லலாம் (இது பற்றி தனி பதிவில் எழுதுகிறேன்). 

அருங்காட்சியகம் பற்றிய‌ மேலதிக தகவலை கீழ் கண்ட சுட்டியில் பெறலாம்



Announcement from Tokyo University of Science , October 10th  2015.

Master course  and Ph.D. thesis dissertation of Prof. Satoshi Omura from  Tokyo University of Science in the year of 1962 (Photo credit: Tokyo University of Science)

Master course dissertation of Prof. Satoshi Omura from  Tokyo University of Science in the year of 1962 (Photo credit: Tokyo University of Science)

Master course dissertation of Prof. Satoshi Omura from  Tokyo University of Science in the year of 1962 (Photo credit: Tokyo University of Science)

Ph.D. thesis dissertation of Prof. Satoshi Omura from  Tokyo University of Science in the year of 1970 (Photo credit: Tokyo University of Science)


We Tokyo University of Science (TUS) proud of our alumni Prof. Satoshi Omura for winning the Nobel Prize 2015 in Medicine or Physiology. 

He graduated in our university during 1963. Also Prof Omura was awarded his PhD degree in Chemistry department, TUS in the year of 1970. Both of his MS and PhD thesis dissertation were now display in our TUS museum (Kagurazaka,Tokyo, Japan) for public awareness. 




No comments:

Post a Comment