இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 2015 (Nobel Prize for Physics 2015)
இவ்வருட நோபல் பரிசில் ஜப்பானியர்களின் பதக்க வேட்டை தொடர்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
2015 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசினை ஜப்பானின் தோக்கியோ பல்கலைக் கழக பேராசிரியர் தகாகி கசிதா (Prof.Takaaki
Kajida), கனடா நாட்டின் குயின்சு பல்கலைக் கழகத்தின் (Queens University) பேராசிரியர் ஆர்தர் பி மெக்டொனால்டு (Arthur B. McDonald) என்பாருடன் கூட்டாக பெறுகிறார்.
துகள் இயற்பியல் துறையில் (Particle Physics) இவர்கள் மேற்கொண்ட நியூட்ரினோ துகள்கள் (Neutrino oscillation) பற்றிய ஆய்வானது நியூட்ரான் துகள்களுக்கு நிறை (mass) உண்டு என்ற நிரூபணத்திற்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளது. அதனை அங்கீகரிக்கும் பொருட்டு இவர்களுக்கு இவ்வருடத்திற்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது
Prof. Takaaki Kajita, Nobel Prize Winner in Physics 2015, Director and Professor, Institute for Cosmic Ray Research, The University of Tokyo |
Prof.Arthur B. McDonald, Director of Sudbury Neutrino Observatory Institute. Gordon and Patricia Gray Chair in Particle Astrophysics at Queen's University in Kingston, Ontario. |
சூரிய கதிர்களில் இருந்து உமிழப்படும் நியூட்ரினோ துகள்கள் களை கண்டுணர்விகள் மூலம் பூமியின் வளிமண்டலத்தில் இருந்து கொண்டு அவைகளின் எண்ணிக்கையினை கணக்கிடும் பொழுது அதன் நிலைமாற்ற நிகழ்வு (Metamorphosis) பெரும் சவாலாக இருந்தது (அதாவது சூரியனில் இருந்து உமிழப்படும் நியூட்ரினோ
அலைகளானது தனித்து ஒரே நிலையில் இல்லாமல் இல்லாமல் எலக்ட்ரான், மியான் (µ) மற்றும்
டவ் (τ) -நியூட்ரான் துகள்களாக இருக்கும்).
இதனால் 1970 களின் பிற்பகுதியில் நிறுவப்பட்ட நியூட்ரினோ பற்றிய நிலையான மாதிரி கொள்கையினை (Standard Model) ஏற்றுக் கொள்வதில் ஒரு தேக்கநிலை இருந்து வந்தது.
ஆனால் இவ்விருவரின் நியூட்ரினோ துகள்கள பற்றிய
சோதனை மூலம் நியூட்ரினோ நிலைமாற்றம் பற்றிய கருதுகோள் வேறு புதிய வழிகளின் மூலம் தற்போது மெய்பிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் கசிதா ஜப்பான் நாட்டில் உள்ள காமியொகா (Kamioka) என்னும் மலையில் 1000 மீட்டர் குடைந்து பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள சூப்பர்-காமியொகந்தெ (Super-Kamiokande) என்னும் உலகின் மிகப்பெரிய நிலவறை நியூட்ரினோ ஆய்வகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர்த் தொட்டியில் காசுமிக் கதிர்களில் (Comic Radiation) இருந்து வெளிப்படும் மியான் நியூட்ரினோ துகள்களை பிடித்து அதன் நிறையில் ஏற்பட்ட சிறு மாற்றத்தினை உறுதி செய்தார்.
Super-Kamiokande Observatory, Japan |
Schematic of Super Kamiokande detects atmospheric neutrinos (Image credit: Nobleprize.org) |
பேராசிரியர் மெக்டொனால்டு, கனடாவில் உள்ள ஒன்டிரியொ (Ontario) என்னும் பகுதியில் பூமிக்கு அடியில் 2100 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள சத்பரி நியூட்ரினோ ஆய்வக மையத்தில் (Sudbury Neutrino Observatory) சூரியனில் இருந்து பூமியினை நோக்கி வரும் தடத்திலேயே நியூட்ரினோ துகள்கள் நிலைமாற்றம் பெறுகின்றன என்ற உண்மையினை தனது ஆய்வுகள் மூலம் கண்டறிந்தார்.
Sudbury Neutrino Observatory, Canada |
Schematic illustration of Sudbury Neutrino Observatory detects neutrinos from the Sun (Image credit: Nobleprize.org) |
சூரியனில் இருந்து உமிழப்படும் மொத்த நியூட்ரினோ துகள்களை ஒப்பிடும் பொழுது , தற்போது இவ்விரு ஆய்வு மையத்திலும் மறைமுக முறையில் கண்டுணர்விகள் மூலம் கணக்கிடப்பட்ட நியூட்ரினோ துகள்களின் எண்ணிக்கையானது மிகக்குறைவு என்றாலும், இந்த குறைவான நியூட்ரினோ துகள்களின் சிறு நிறையானது ஒட்டு மொத்தமாக தொகைப் படுத்தும் போது அவை இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒட்டு மொத்த ஒளிரும் நட்சத்திரங்களின் நிறையினை பற்றிய தகவலை தரலாம். இது துகள் இயற்பியல் மற்றும் அண்டத்தினை பற்றிய புரிதலுக்கான தரவுகளை இந்த ஆய்வுகள் எதிர்காலத்தில் மேம்படுத்தக் கூடும்.
அருமையான கட்டுரை டாக்டர்........
ReplyDelete