Saturday, 10 October 2015


ஒரு ஜப்பானிய‌ துறவியின் கதை - A story of Saint Nichiren, Japan


ஆசையே
 துன்பத்திற்கு காரணம் என்றார் புத்த பெருமான்அவ்வழியே வந்த ஜப்பானிய‌ பெளத்த‌ துறவி நிச்சிரென் (Nichiren 日蓮) (1222-1282),  இவர் ஜப்பானின் காமகுரா- காலகட்டத்தில் (1185-1333) வாழ்ந்தவர்

"நம் வினைகளே நம் கர்மாவினை நிச்சயக்கிறது" என்ற இவரது போதனை  உலகம் முழுவதும் உள்ள பெளத்த மதத்தினரிடையே பிரசித்தி பெற்றதுகெளதம புத்தரது இறுதி வாழ்வில் அவர்தம் போதித்த "தாமரை சூத்திரம்"  என்ற பெயரில் அழைக்கப்படும் அற்புத  தத்துவங்களை  ஜப்பானிய மக்களுக்கு வேறுபாடின்றி ஞானத்தினை அடையும் பொருட்டு போதித்தவர்

தனது
 அறுபத்தி ஓராவது வயதில் ஜப்பானின் தோக்கியோ நகரில்இகேகாமி (Ikegami) பகுதியில் உள்ள  கன்மோன்ச்சி (hanmonji) கோவிலில் உயிர் நீத்தார்தற்போது ஏறத்தாழ 700 ஆண்டுகளுக்கு மேல்  ஆகிவிட்டதுஆனால் இன்றும் ஜப்பானிய மக்கள் இவரது நினைவுநாளை தேசமெங்கும்  பெரும் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்

அவரது போதனைகளை இன்று உலகின் பல பகுதிகளில் நிச்சிரென் 
ழி பெளத்த  (Nichiren Shu  Buddhism)  போதனைகளாக‌ பின்பற்றுகின்றனர். 


நிச்சிரென் தன் இறுதி காலங்களின் நியமித்த ஆறு சீடர்களுள் நிக்கோ (Niko) என்ற அவரது சீடரே அவரது கொள்கைகளை பின் வந்த சந்ததியினருக்கு பயில்வித்தார்இன்றைக்கும் நிச்சிரென் அவர்களது உடல் எரியூட்டப்பட்ட புனித இடத்தினை காணலாம்நிச்சிரென் அவர்களது அஸ்தி அவரது விருப்பப்படி சீடர் நிக்கோவினால் இகேகாமி பகுதியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு மினோகா (Minoka) மலையில்  வைக்கப்பட்டு நினைவிடமாக கட்டப்பட்டுள்ளது

கடந்த வாரம் இப்புனித தலத்திற்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. இக்கேகாமி இரயில் நிலையத்தில் இருந்து பத்து நிமிட நடை தூரத்தில் உள்ள இக்கோவிலின் அடிவாரத்தில் நிச்சிரென் துறவியின் சீடர்கள் தங்கி இருந்த இருப்பிடம் உள்ளது

ஏறத்தாழ 100 படிக்கட்டுகள் கொண்ட அகலமான வழிப்பாதையின் வழியே எளிதாக மேலே செல்லலாம். மகிழ்வுந்தின் வழியே வருபவர்களுக்கு என்று பிரத்யோக வழி கோவிலின் பின்புறம் உள்ளது

மலைக்கு கீழேயே கோவிலின்  முதல் வாசலான‌ சோமொன்  (So-Mon) மர‌ வாசல் இருக்கிறதுஅதன் இருமங்கும் விழா தொடர்பான பழைய புகைப்படங்களை ஒட்டி வைத்திருந்தார்கள்இந்த வாசல் இரண்டாம் உலகப் போரின் போது பாதிப்படையாமல் இன்றும் கம்பீரமாக நிற்பதால் இதற்கு தனிச் சிறப்பு உண்டு

இகெகாமி கன்மொன்ச்சி கோவிலின் பிரதான வாசல் (Somon) தெரு.

இரண்டாம் உலகப் போரின் போதும் பாதிக்கப்படாத சோமொன் வாசல்



முதல் வாசலை கடந்தவுடன்  சிக்யோநன்சி சாகா (Shikyonanjizaka) என்னும்  96 படிகள் கொண்ட பாதை மலைக் கோவிலுக்கு நம்மை அழைத்து செல்லும்

இந்த படிக்கட்டுகள் எதோ (Edo) கால கட்டத்தில் வாழ்ந்த கியோமசா கதோ (1596) என்பவரால் அமைக்கப்பட்டதுஇப்படிக்கட்டில் ஏறியவுடன்  மலைக்கு கீழே இருக்கும்  அழகை தரிசிப்பதே ஒரு தியானம் போன்றது.

சிக்யோநன்சி சாகா (Shikyonanjizaka) படிகட்டுகள்

துறவிகள் தங்குமிடம்

சிக்யோநன்சி சாகா படிக்கட்டுகளை கடந்து கன்மோ-சி (Ikegami Kanmonji) மலையின் மீது ஏறி பார்த்தவுடன் நம் கண்களில் தென்படுவது அங்கிருக்கும் ஆயிரக்கணக்கான சமாதிகள் இறந்தவர்களுக்கு இத்திருத்தலத்தில் சமாதி அமைப்பதால் அவர்களது ஆன்மா மோட்சம் அடையும் என நம்புகிறார்கள் இது போன்ற சூழல்தான் ஜப்பானுக்கும் இந்தியாவில் உள்ள இந்து கோவில்களுக்கும் உள்ள வித்தியாசம்கோவிலின் அருகே சமாதி அல்லது சுடுகாடு அமைவது என்பது அரிதான ஒன்றேஆனால் ஜப்பானில் மக்கள் புழங்கும் தெருக்களில் இறந்தவர்களின் சமாதிகளை காணலாம்

இந்த படிகட்டுகளை கடந்தவுடன் நின்ற நிலையில் போதிக்கும் நிச்செரின் துறவியின் சிலையினை காணலாம்இச்சிலையானது 1983 ஆம் ஆண்டு அவரது 700 ஆம் ஆண்டு நினைவு தினத்தினை அனுசரிக்கும் விதத்தில் செய்போ கிதாமுரா என்ற சிற்பியால் அலுமினிய அச்சில் வார்க்கப்பட்டது.



 கோவிலின் பிரதான வாசலான தோரியை கடந்து உள்ளே செல்லும் பொழுது பிரம்மாண்ட கதவுகளோடு கூடிய தேவ வாயில் எனப்படும் நியொமன் (NiouMon) வாயில் நிலை இருக்கிறதுஜப்பானில் புத்தர் கோவில் அல்லது அவர்களது பாரம்பரிய சிண்டோ கோவில்களில் உள்ள பிரதான வாசலான "தோரியினை கடக்கும் போது வாயிலின் மத்திய பகுதி வழியாக நுழையாமல் ஓரமாக செல்ல வேண்டும் என்பது ஜப்பானியர்களின் வழிபாட்டு சடங்குஏனெனில் தோரியின் மத்திய பகுதி வழியாகத்தான் கடவுளர்கள் வருவார்கள் என நம்புகிறார்கள்

நியொமன் வாயிலின் மேற் கூரை வேலைப்பாடுகளை பார்க்கும் போது நாராவின் தோதாய்ச்சி கோவிலை ஞாபகப்படுத்தியதுஇந்த வாசலில் மிகப் பெரிய புத்த கோவிலின் காவலர்களாகிய நியோ மற்றும் கொங்கோரிகிசி (Kongōrikishi) இருவரும் பயங்கர தோற்றத்தோடு நிற்கிறார்கள்.

மினோபு (Minobu) மலையில் உள்ள நிச்சிரென் கோவிலில் வைக்கப்பட்டிருக்கும் நிச்சிரென் துறவியின் ஓவியம் (Photocredit: Wikipedia)
மினோபு (Minobu) மலையில் உள்ள நிச்சிரென் கோவிலில் (Chokozan Myohonji)  வைக்கப்பட்டிருக்கும் நிச்சிரென் துறவியின் சிலை 

 நிச்சிரென் துறவியின் சிலை 


 நிச்சிரென் துறவியின் சிலை 




நியோ காவல் தெய்வம்



நியொமன் (NiouMon) வாயில்

இந்த வாயிலை கடந்தவுடன் இடது புறம் 1647 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இராட்சத வடிவிலான, பித்தளையால் செய்யப்பட்ட‌ மணிக் கூண்டு உள்ளதுபிராத்தனையின் போது அதன் வெளிப்புறம் கட்டப்பட்டு இருக்கும் மர கட்டை மூலம் மோதச் செய்து ஒலியினை உண்டாக்குகிறார்கள்தற்போது புதிய வருடப் பிறப்பின் பொழுது மட்டும் இந்த மணி ஒலிக்கப்படும்.


மணிக் கூண்டு (Shoro)

மணிக்கு எதிரில் உள்ள செய்தோ (Choeido) கோவிலில் உள்ள பாதுகாவல் தெய்வம் நிச்செரின் துறவி வெளியும் செல்லும் பொழுது இக்கோவிலை காக்கிறது என்ற நம்பிக்கை இருந்துள்ளதுஇக்கோவிலின் தோரி வாசல் தனித்துவம் வாய்ந்ததுஏனெனின் வழக்கமாக தோரியானது பிரதான வழிபாட்டு பீடத்திற்கு நேர் எதிரே ஒரே சமதளத்தில் இருக்கும்ஆனால் செய்தோ ஆலயத்தின் தோரியானது படிகட்டுகள் மேல் இருக்கிறதுநான் சென்ற சமயம் விழாக் கொண்டாட்டங்களுக்கு தேவையான மராமத்து பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தன
 
செய்தோ (Choeido) கோவில்

நியோமன் வாயிலின் நேர் எதிரே கன்மோன்‍ சி கோவிலின் பிரதான பிராத்தனை கூடமான தைதோ அல்லது சொசிதோ இருக்கிறதுஇதன் முன் வாசலில் உள்ள நான்கு பிரம்மாண்டமான தூண்களும் வழமையான இரு புறமும் சரிந்த மேற்கூரைகள் கொண்ட சிண்தோ கோவிலின் அமைப்பிலேயே இருக்கிறதுகோவிலின் முன்னால் பிராத்தனைகளுக்காக எரிக்கப்படும் பத்தி தொட்டி உள்ளது.


பிரதான கோவில் (Daito)

பிரதான கோவில் (Daito)

பிரதான கோவில் (Daito)


தோரியின் வலது புறம் உள்ள தெருவில் திரும்பி பார்த்தால் ஐந்து அடுக்குகள் கொண்ட மிகப் பெரிய பக்கோடாவினை காணலாம்.   இந்த பகோடாவானது 1608 ஆம் ஆண்டு கெய்ச்சோ (Keicho) கால கட்டத்தில் ஒகாபே நோ சுபோன் (Okabe no Tsubone) என்னும் அம்மையாரது அறிவுரைப்படி கட்டப்பட்டது. இவர் ஜப்பானின் பிரசித்தி பெற்ற  சோகன்களுள் (Sogun) ஒருவராகிய தொகுகாவா கிதேததா (Tokugawa Hidetada) அவர்களின் செவிலித்தாய் ஆவார். இந்த பக்கோடா ஜப்பானின் காந்தோ (Kanto) பிராந்தியத்திலேயே உள்ள மிகப் பழமையான பக்கோடா ஆகும். ஆனால் இரண்டாம் உலகப் போரின் உக்கிரமான தாக்குதலில் இந்த பக்கோடாவின் சில பகுதிகள்  தீக்கிரையாக்கப்பட்டு தற்போது புணரமைக்கப்பட்டு கித்தாச்சி (Kitachi) நிறுவனத்தினரால்  பராமரிக்கப்பட்டு வருகிறது




இகேகாமி கன்மொன்ச்சி கோவிலின் ஐந்து அடுக்கு பக்கோடா

இகேகாமி கன்மொன்ச்சி கோவிலின் ஐந்து அடுக்கு பக்கோடா

இகேகாமி கன்மொன்ச்சி கோவிலின் ஐந்து அடுக்கு பக்கோடா

துறவி நிச்சிரென் அவர்கள் உயிர் பிரிந்த பொழுது ஜப்பானில் இலையுதிர் காலம்ஆனால் இயற்கையின் அற்புதமாக அன்றைய தினம் அவர் உயிர் துறந்த பொழுது  வசந்தைகாலத்தைப் போல‌ செர்ரி மரங்கள் பூத்து குலுங்கி அவரை வழியனுப்பியதாக செவி வழி செய்தி உள்ளதுஅதன் நினைவாக ஆண்டு தோறும் அவரது நினைவு நாளன்று நடத்தப்படும் ஒயெஸ்கி (Oeshiki) விழாவில் செயற்கையான செர்ரி மரங்கள் பூக்களோடு இருக்கும் விதம் அலங்கரிங்கப்பட்டதேரினை  இழுத்து வருகிறார்கள். 300 தேர்களில் அலங்கரிங்கப்பட்ட பத்தாயிரம் புனித விளக்குகள் காண்பவரின் மனதை நிச்சயம் கொள்ளை கொள்ளும்.

இந்த ஆண்டிற்கான ஒயெஸ்கி (O-Eshiki)  திருவிழா நாளை அக்டோபர் 11 ந் தேதி முதல் 13 ஆம் தேதி வரை தோக்கியோ நகரில் நடைபெற உள்ளது. இக்கேகாமி நகரின் இரயில் நிலையத்தில் இருந்து மாலை 5 மணிக்கு தொடங்கி  2 கிமீ தொலைவில் உள்ள கன்மோன் மலைக் கோவிலில் முடிவடைகிறது. நள்ளிரவு இந்த விழாக் கொண்டாட்டம் நீடிக்கும்


ஒயெஸ்கி திருவிழா

ஒயெஸ்கி திருவிழா. செர்ரி பூக்களைப் போல் அலங்கரிக்கப்பட்ட தேரின் பின்னனியில் ஐந்து அடுக்கு பக்கோடா

இவ்விழாவில் ஆண்டுதோறும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கதுஜப்பானின் பல பகுதிகளில் இவ்விழா கொண்டாடப்பட்டாலும் நிச்செரின் துறவி யிர் நீத்த இத்திருத்தலத்தில் இவ்விழா கொண்டாடப்படுவது தனித்த சிறப்புடையது.

நாளை தோக்கியோ நகரில் இருப்பவர்கள் நிச்சயம் இந்த விழாவினை நேரில் சென்று கண்டு களியுங்கள்.

(இக்கோவிலை எனக்கு அறிமுகப்படுத்திய எனது நண்பன் முனைவர் நாகராசனுக்கு நன்றிகள் உரித்தாகுக‌)






No comments:

Post a Comment