புத்தக வாசிப்பு
ஒரு புத்தகம் படிப்பது என்பது நூறு அறிஞர்களுடன் உரையாடுவதற்கு சமம்.
மாவீரன் பகத் சிங் தூக்கு கொட்டகைக்கு போகும் முன்பு வரை புத்தகத்தினை வாசித்துக் கொண்டிருந்தார் என வரலாறு சொல்கிறது.
மாகாத்மா காந்தியும், அறிஞர் அண்ணாவும், மிக தீவிரமான புத்தக வெறியர்கள் என்றே சொல்லலாம்.
ஜப்பானின் தோக்கியோ நகரில் உள்ள இகேகாமி கன்மோன்ச்சி கோவிலில் பூங்காவிற்கு வரும் குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பின் அவசியத்தினை உணர்த்தும் வகையில் நாற்காலியில் படித்து விட்டு வைத்த புத்தகங்கள் போல சிலை ஒன்றை வடிவமைத்து இருக்கிறார்கள்
கன்மோன்ச்சி கோவில், இகேகாமி, தோக்கியோ நகரம், ஜப்பான் (பின்னனியில் தெரிவது காந்தோ பகுதியில் உள்ள மிகப் பழமையான ஐந்து அடுக்கு பகோடா). |
ஜப்பானில் உள்ள மழலையர் பள்ளிகளில் வாரம் இரண்டு புத்தகங்களை கண்டிப்பாக வீட்டிற்கு எடுத்து வந்து படித்து விட்டு அதனை பற்றிய குறிப்பு எழுத வேண்டும். மேலும் பள்ளியின் கதை நேரங்கள், அவர்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து கதை சொல்ல வேண்டும்.
நம் தமிழக அரசு நல்ல தரமான புத்தகங்களை எல்லா பள்ளிகளுக்கும் வழங்குகிறது. ஆனாலும் ஒரு சில பள்ளிகள்தான் குழந்தைகள் நூலகத்திற்கு சென்று படிக்கும் செயலை ஊக்குவிக்கிறார்கள்.
ஆசிரிய பெருமக்கள் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்து குழந்தைகளின் வாசிப்பு உலகினை விரிவு படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment