Tuesday, 6 October 2015

ஜப்பானில் அசோக சின்னம் ‍- Asoka pillars in Japan


இந்தியாவில் சாரநாத் மான்கள் பூங்காவில் உள்ள மூன்று சிங்க முகம் பொறித்த அசோக தூண்களை போலவே ஜப்பானின் நாரா மான்கள் பூங்காவிலும் காணலாம் (நாரா, தொதாய்சி கோவிலின் இடது புறம்). இந்த ஸ்துபியானது 1988 ஆம் ஆண்டு ஏப்ரம் 26 ஆம் தேதி  நடைபெற்ற புத்தரின்  பிறந்த நாள் திருவிழா ( Hana Matsuri) அன்று 1700 புத்த மத குருமார்கள் கலந்து கொண்டதன் நினைவாக எழுப்பப்பட்டுள்ளது.  இந்தியாவில் புத்த மதத்தினை கட்டி எழுப்பிய அசோக சக்கரவர்த்தியின் கீர்த்தியினை கெளரவிக்கும் பொருட்டு ஜப்பானில் எழுப்பப்பட்டுள்ளது

இந்த நிகழ்வின் போது புத்த மத குருமார்கள் எதிர்காலத்திற்கான செய்தியினை எழுதி காலப் பெட்டகத்தில் வைத்து பூட்டி வைத்துள்ளனர். இச்செய்தியானது எதிர் வரும் 2038 ஆம் ஆண்டு புத்தரின் 1500 வது பிறந்த நாள் விழாக் கொண்டாட்டத்தின் போது திறந்து படிக்கப் பட உள்ளது



Asoka Pillars at Nara Todai-Ji temple. the monument in commemoration of the Thousan-Priests Service on the occesion of the Hana Matsuri (Buddha's birthday)

Asoka Pillars at Nara Todai-Ji temple. the monument in commemoration of the Thousan-Priests Service on the occasion of the Hana Matsuri (Buddha's birthday)

2 comments:

  1. புது தகவல்... ஜப்பானை பற்றிய தகவல்கள் செய்திகளாக இருந்தாலும் அவை நம் நாட்டுடன் எவ்விதமான தொடர்பு என்பதை நீங்கள் உங்கள் பதிவுகளின் மூலமாக தெரியபடுத்தி வருவது உண்மையில் மிக சிறப்பான பணி !!!

    நேரம் வாய்க்கும் போதெல்லாம் உங்களது தளத்திற்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டேன். சுவையான தகவல்களுக்கு எனது பாராட்டுகள் + வாழ்த்துக்கள்
    நன்றி

    ReplyDelete