Tuesday, 9 June 2015

காக்கா முட்டை (The Crow's Egg) - Untold story of children in Tamil cinema

படம் பார்த்த பிரம்மிப்பில் இருந்து விடுபடவில்லை. இப்படத்தினை காட்டிலும் தமிழ் சமூகம் இப்படத்திற்கு கொடுத்து  இருக்கும் அங்கீகரிப்பையே பெரிய ஆச்சரியமாக பார்க்கிறேன். 

இதே அங்கீகரிப்பு "ஆரண்ய காண்டம்" போன்ற  சினிமாக்களுக்கு கிடைத்திருந்தால் நிறைய பேர் மாற்று சினிமா களத்திற்கு இன்னும் தைரியமாக வந்திருப்பார்கள்.

மக்களுக்கான கதை  மக்களின் வாழ்வியல் வெளியிலிருந்தே எடுக்கப் பட வேண்டும். அதுவே மக்கள் மனதில் நிலைத்து நிற்கும், என்றும் கொண்டாடப்படும். எதார்த்த நிலையில் இருந்து வெகு தொலைவு விலகி எடுக்கப்படும் பேன்டஸி சினிமாக்கள் தற்காலிக மகிழ்ச்சியினை கொடுத்தாலும், காக்கா முட்டை போன்ற படங்களே விளிம்பு நிலை மக்களை பற்றிய மேட்டுக் குடி மக்களின் மன ஓட்டங்களை சிறிதே மாற்றும் என எண்ணுகிறேன். 

ஒரு குறும்படத்திற்கான அளவேயான கையிறுப்பை தைரியமாக திரைப்படமாக எடுத்ததற்கே இயக்குநர் மணிகண்டனுக்கு பெரிய சல்யூட்.

சினிமா ஊடகம், மக்களுக்கான அரசியல் பேச வேண்டும், அது கதைமாந்தார்கள் வழியாக ரசிகர்களை சென்று சேர்வதே அதன் சிறப்பு. காக்கா முட்டை அதை செய்திருக்கிறது என நம்புகிறேன். 


இப்படத்தில் நடித்த சின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டையாக நடித்த சிறுவர்கள் (ரமேஸ் திலகநாதன், விக்னேஸ்) அவர்களது தாய் (ஐஸ்வர்யா), சிறுவர்களது பாட்டி , உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள். 

படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், உதவி இயக்குநர்களுக்கும், மறைந்த எடிட்டர் கிஷோர், இசையமைப்பாளர் மற்றும் இப்படத்தினை தயாரித்த வெற்றி மாறன் மற்றும் தனுஸ் ஆகியோருக்கு பாராட்டுகள்.

குழந்தைகளை திரையரங்கிற்கு அழைத்து சென்று பாருங்கள். 






(காக்கா முட்டை திரைப்படத்தினை முன் வைத்து ஆரோக்கியமான விவாதக் களம்   திறக்கப்பட வேண்டும்.  மற்றபடி விமர்சனம் எல்லாம் மசாலா படத்திற்குத்தான்).

No comments:

Post a Comment