விவசாய பூமியில் சோலார் பேனல் கூரைகள் - Solar panels roofs at agriculture lands
ஜப்பானில் தற்போது வித்தியாசமான விளம்பரங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அதாவது உங்கள் விளை நிலைத்தில் சாகுபடிக்கு தொந்தரவு இல்லாமல் சோலார் பேனல்களை கூரைகளாக அமைத்து இரட்டை லாபம் பார்க்கலாம் என Smart Blue என்ற கம்பெனி அறிவித்துள்ளது.
சோலார் விவசாய கூரைகள் குறித்த விளம்பரங்கள்
என்னதான் ஜப்பான் சோலார் பேனல் தயாரிப்பில் உலக அரங்கில் முன்னனியில் இருந்தாலும் இங்கு அவற்றினை நிறுவுவதற்கான இடங்கள் குறைவு. ஆகவே விவசாய இடங்களில், உதாரணத்திற்கு, நெற் வயல்களின் மேல் உயரமான (டிராக்டர் செல்லும் அளவிற்கு) தாங்கு கம்பிகள் அமைத்து பேனல்களை இடைவெளி விட்டு நிறுவி அவற்றினை மிகப் பெரிய array வாக இணைக்கிறார்கள்.
இங்கு தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுடன் 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டு இந்த விளை நிலத்தில் உள்ள சோலார் பேனல்களில் கிடைக்கும் மின்சாரத்தினை விற்று விடலாம். இதன் மூலம் விவசாயம், மின் உற்பத்தி என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம்.
இந்நிறுவனத்தின் கணக்குப் படி 1200 கன மீட்டர் உள்ள இடத்தில் 49.5 கிலோ வாட் மின் சக்தியினை ஆண்டு ஒன்றிற்கு உற்பத்தி செய்ய முடியும் என உறுதி கூறுகிறார்கள். முதலீடாக இந்திய மதிப்பில் 1 கோடி செலுத்தும் போது ஆண்டுக்கு 10 லட்சம் நிகர லாபம் கிடைக்கும் என்கின்றனர். ஆகவே முதல் பத்து வருடத்தில் நாம் போட்ட முதலீடு கைக்கு வந்து விடும். சோலார் பேனல்கள் 22 வருடம் உழைக்கும். அப்படி பார்த்தால் அடுத்த பத்து ஆண்டில் கிடைக்கும் ஒரு கோடி லாபமே.
நம்ம ஊரில் வறண்ட நிலங்களில் சோலார் பேனல்களை கொண்டு மெகாவாட் துணை மின் நிலையங்கள் அமைப்பது குறித்து இப்பொழுதுதான் யோசிக்க ஆரம்பித்து உள்ளோம். ஜப்பானியர்களை போல் மனமிருந்தால் நமக்கு நிச்சயம் மார்க்கமுண்டு.
குறைந்த பட்சம் நமது விவசாய நிலங்களில் சூரிய மின் சக்தியில் இயங்கும் நீர் இறைக்கும் பம்ப் மோட்டார்கள், சோலார் விளக்குகள், சோலார் பூச்சி விரட்டிகள், என நம்மால் முடிந்த வரை குறைந்த செலவில் சூரிய மின் சக்தியினை பயன்படுத்தினால் நமது ஆற்றல் வளம் நிச்சயம் எதிர்கால சந்ததியினருக்கு சேமிக்கப்படும்.
No comments:
Post a Comment