அரிசி வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் - (Rice Vending Machines)
திடீரென்று வீட்டில் அரிசி தீர்ந்து விட்டது. அல்லது கடையில் வாங்க செல்லும் போது கடை பூட்டி இருக்கிறது இப்படி பல நேரங்களில் அரிசி போன்ற இன்றியமையாத பொருட்களை வாங்கும் போது பலரும் சிரமப்பட்டிருப்போம்.
ஜப்பானில் இந்த தொல்லையே இல்லை. இங்கு 24 மணி நேரமும் இயங்கும் தானியங்கி அரிசி வழங்கும் இயந்திரங்கள் எல்லா பகுதிகளிலும் உள்ளது.
ஐந்து கிலோ மற்றும் பத்து கிலோ பைகளில் நன்கு மூடிய நிலையில் (Sealing) பாதுகாப்பாக கிடைக்கிறது. நமக்கு பிடித்த அரிசி ரகங்களை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அதோடு மட்டுமல்லாமல் பட்டை தீட்டிய அரிசி, பட்டை தீட்டாத அரிசி, என எல்லா வகைகளும் கிடைக்கிறது.
அரிசி வழங்கும் இயந்திரம் - நோடா நகரம் (Nodashi), ஜப்பான்
வங்கியில் பணம் எடுக்கும் ஏடிம் இயந்திரங்களைப் போல் இதில் நேரிடையாக பணம் செலுத்தியோ அல்லது இயந்திரத்தில் பணம் அல்லது கார்டுகளை செலுத்தி வேண்டுகிற அரிசி வகையின் எண்ணை அழுத்தினால் அந்த எண்ணுக்கு கீழே உள்ள பெட்டியில் இருந்து அரிசி பையினை எடுத்துக் கொள்ளலாம்.
பணம் செலுத்தும் வசதி
அரிசி வகைகள்
அரிசி வைக்கப்படிருக்கும் பெட்டிகளின் மேல் அது எங்கு விளைவிக்கப்படுகிறது. இதனை யார் தர நிர்ணயமும், பரிசோதனையும் செய்தார்கள் என எல்லா விளக்கமும் வைக்கப்பட்டிருக்கும்.
இதில் பார்சல் வசதியும் உள்ளது. பணத்தினை செலுத்திவிட்டு பார்சல் அனுப்ப வேண்டிய முகவரியினை அதில் இணைக்கப்பட்டிருக்கும் தாளில் எழுதி போட்டு விட்டால் அடுத்த நாள் வீட்டுக்கு வந்து விடும்.
தர நிர்ணயம் பற்றிய தகவல்
நம்ம ஊரில் விவசாயிகள் ஒருங்கிணைந்து இது போன்ற இயந்திரங்களை சிறு நகரங்களில் அறிமுகப்படுத்தலாம். இதில் பார்சல் முன் பதிவு வசதியும் இருப்பதால் விவசாய சங்கத்தில் இருந்து நேரடியாக அனுப்பலாம். ஆனால் நேர்மையான தர நிர்ணயம் செய்து அனுப்ப வேண்டும். சிறு குறைகள் இருப்பின் அரிசியினை திரும்பப் பெற்று மாற்று அரிசி கொடுக்கும் முறை இங்கு இருக்கிறது. இதனையும் நாம் மனதில் கொண்டால் இது நிச்சயம் வெற்றியினை தரும்.
இதனால் அரிசி வியாபாரிகள் என்னும் இடைத் தரகர் தொல்லை ஒழிந்து விவசாயிகள் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யலாம். மேலும் சிறு சிறு சிப்பங்களாக விற்பதால் ஏழை மக்களும் நேரிடையாக வாங்கி பயனடைவர்.
No comments:
Post a Comment