Tuesday, 31 March 2015

காலத்தை கடந்து செல்லும் ப்ளமென்கோ நடனம் (Flamenco Dance)

துள்ளல் நடனமும், அடிக்குரலில் மனதை மயக்கும் பாடல்களும் ஸ்பெயின் தேசத்தில் எங்கும் விரவிக் கிடக்கிறது. குறிப்பாக சொல்லப் போனால் ப்ளமென்கோ நடனம் (Flamenco Dance ) மிகமுக்கியமான, ரசிக்க வேண்டிய ஆர்ப்பாட்டமான நாட்டுப்புற நடனம். மகிழ்ச்சி, துக்கம், கோபம் என கலவையான எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தும் இந்த நாட்டுபுற பாடல் வடிவம் (folklore) ஜரோப்பாவின் மத்திய கால (Medieval period) கட்டத்தில் ஸ்பெயினுக்கு வந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ப்ளமென்கோ நடனத்தின் சிறப்பே கால்களால் ஓசை எழுப்பியும், அதற்கு இணையாக உடன் பாடுவோர் கைஒலி எழுப்பியும் பார்பவர்களை பரவசப்படுத்துவதே.. நவீன ப்ளமென்கோ நடனத்தில் கிட்டார் சேர்ந்துள்ளது... வரலாற்றின் அடிப்படையில் இந்த நாட்டுபுற நடனம் இந்திய நாடோடிகளிலிடமிருந்து வந்திருக்கலாம் என்று கருதுகிறார்கள். மேலும், இது அராபியர்கள், யூதர்கள் மூலமும் ஸ்பெயினுக்கு வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.. தற்சமயம் நான்கு வகையாக நடனம் காணப்பெறுகிறது (அதன் மூலத்தினை சார்ந்து)..

கிரானாடாவில் (Granada, Spain) உள்ள ஜார்டினெஸ் தே ஜோராயா (Jardines de Zoraya) என்ற இரவு உணவு விடுதியில் ப்ளமென்கோ நடனத்தினை காணும் வாய்ப்பு கிட்டியது.. கேட்க ஆரம்பித்தவுடன் நிறைய தமிழ் பாட்டு மெட்டுகள் . நினைவில் வந்து போயின (ஏய் ஸப்பா, ஏய் ஸப்பா நினைச்ச கனவு பலிக்காதா.)..நடனம் முடிந்ததும் நடன குழுவினருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்..நான் இந்தியாவிலிருந்து வந்திருக்கின்றேன் என்று தெரிந்ததும் அவர்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.. ஒரு இந்தியா நாடோடியின் சமூகத்தின் நாட்டுப் புற பாடல்கள் இன்றும் ஸ்பெயினில் காலத்தினை கடந்து நவீனத்துவத்தோடு மிளிர்கின்றது...

ஏராளமான அடவுகளையும், கட்டியங்களையும் உள்ளடக்கிய நம்மின் பல நாட்டுபுற நடனங்கள் (பறையாட்டம், ஜமாப்பு, கரகாட்டம், புலியாட்டம், தேவராட்டம், பொய்கால் குதிரை, கூத்து) இன்று சாதிய அடையாளங்களோடு கலந்து போய் நலிவுற்று அழிந்து கொண்டிருக்கின்றன.. கார்பரேட் பெரு வெள்ளத்தில் காணாமல் போய் கொண்டிருக்கும் நம் வெகு சன மக்களையும், கலையினை தெய்வமாய் கருதி இன்றும் வருமையில் உளன்று கொண்டிருக்கும் நம் நாட்டுப்புற கலைஞர்களை காப்பாற்ற வேண்டியது நம் சமூக கடமை மட்டுமல்ல, உடனடி தேவையும் கூட...

http://www.youtube.com/watch?v=DuJWMxRyV8c&feature=em-upload_owner

http://www.youtube.com/watch?v=GBR7Efr5Tvo&feature=youtu.be

http://www.youtube.com/watch?v=pDe0rugfeXI&feature=youtu.be
பரதேசம் -அக்டோபர் 2013

நீண்ட நாட்களாக சைவ, வைணைவ திருத்தலங்களுக்கு தேசாந்திரியாய் போய் வர வேண்டும் என்று ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருந்தது.. இந்த விடுமுறையில் ராசகுமார் அண்ணாச்சியும் என்னோடு இணைந்து கொண்டது பெரும் மகிழ்ச்சி. தென்னாடுடைய சிவனையும், அரியும் அரனும் ஒன்று என்று உலகிற்கு சொன்ன தென் கைலாயங்களுக்கும் சென்று வரலாம் என அண்ணாச்சியும் நானும் திட்டமிட்டோம்.. பெரும்பாலான தலங்கள் அண்ணாச்சிக்கு முன்னமே பரிச்சயமாய் இருந்ததால் எனக்கு மிகவும் எளிதாக இருந்தது..

நான்கு நாள் பயணத்தில், சூடிக் கொடுத்த சுடர்கொடியாய் மாலனையே பொழுதோறும் நினைந்துருகிய திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் ஆரம்பித்து பின்னர் நான்காம் நாள் இறுதியில் நான்மாடக் கூடலில் அரசாட்சி செய்யும் மதுரை மீனாட்சி அம்மையினை தரிசனம் செய்து பெரும் பேறு பெற்றேன்..

இரண்டாம் நாள் அரியும் அரனும் ஒன்றென உலகிற்கு ஓதி சங்கர நாராயணனாய் கோமதி நாயகி அம்மனுடன் உறையும் சந்திர மெளலீஸ்வரரை தரிசித்து வந்தோம்..
பின்னர் மதியம் திருச்செந்தூர் சென்று வங்கக் கடலில் நீராடி விட்டு அறுபடைத் தலத்தில் கடலோரம் அமைந்த தலம், சூரனை வதம் செய்த செந்தூர் திருச்செந்தூர் சுப்பிரமண்ய சுவாமியினை தரிசனம் செய்து பின்னர் ஆழ்வார் திருநகரி செல்லும் வழியில் தாமிர பரணியில் நீண்ட நேரம் நீராடினோம்..

பின்னர் மழை பெய்யும் ஒரு ஏகாந்த பொழுதில் எம் உள்ளம் கவர் கள்வன் நெல்லையப்பர் ஆலயம் சென்று பெருமானையும், காந்திமதி அம்மனையும் தரிசித்து பின்னர் இரவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் தென்காசியில் தங்கினோம்..


 at Kalugu Malai.. Samanar padukkai

 Pabanasam tam
 at Pabanasam Sivan temple
 at Kalakkadu

 at Kalakkadu
at Kalakkadu

மூன்றாம் நாள், காலை பனியில் முகம் துடைத்து பின் பாப நாசம் அகத்திய அருவியில் எண்ணெய் குளியலோடு நீராடி விட்டு பின் பொதிகை மலை அருகில் ஒருங்கே அமையப்பெற்ற களக்காடு முண்டந்துறை வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள தலையணைக்கு சென்று விலைமதிப்பற்ற மூலிகை சுவாசத்தினை பெற்றுத் திரும்பினோம்.. மதியம் உச்சிகால பூசையில் ஓதுவா மூர்த்திகளின் கல்லும் கரையும் தேவாரத் திருத் தமிழில் கரைந்து கொண்டிருந்த பாப நாசம் சிவனையும், உலகாம்பிகையையும் கைகூப்பி மனம் உருகி தொழுது பின் மனமில்லாமல் அவ்விடம் அகன்றோம்..

அன்று மாலை பெய்யென பெய்யும் பெருமழையில் குற்றால நாதரையும், தென்காசி சிவனையும் தரிசித்து உவகையுற்றோம்.. நான்காம் நாள் அண்ணாச்சியிடம் இருந்து விடைபெற்று விட்டு கழுகுமலையினை நோக்கி பயணத்தினை தொடர்ந்தேன்,, சூரனை வதம் செய்த ஆறுமுகப் பெருமான் மன அமைதி வேண்டி அமர்ந்த திருத்தலம் 'கழுகு மலை'. இங்கு கழுகாலச மூர்த்தி என்னும் திருநாமத்தில் பன்னிரு கைகளுடன் மயில் வாகனத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறார். இந்த மலையின் மீது உலகப் பிரசித்த பெற்ற வெட்டுவான் கோவிலும், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சமணர் படுக்கைக்களும், சிற்பங்களும் உள்ளது. தென் தமிழகத்தில் காண வேண்டிய அற்புதமான தலம் இது..

கழுகு மலையில் உள்ள சமணர் குகையில் சிறிது நேரம் தியானம் செய்த பின்பு மதுரையை நோக்கி எமது பயணத்தினை தொடர்ந்தோம்.. மதுரை பாண்டிய மன்னனுக்காக கால் மாறி ஆடிய வெள்ளி அம்பல பெருமான் மற்றும் சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி அம்மையினை தரிசனம் செய்து கரூருக்கு திரும்பினோம்..


இந்த பயணம் முழுவதும் நெகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்த பல புதிய அனுபவங்கள் கிடைத்தன.. அவற்றினை முழுவதுமாக தனி பிளாக்கில் எழுத ஆசை...மகா காளி அருளட்டும்
ஜப்பான் ஏன் முன்னேறிய நாடாக உள்ளது?

சென்ற வாரம் என் ஜப்பானிய பல்கலைக் கழக தலைவருடன் ( President, Tokyo University of Science) ஒரு முக்கியமான சந்திப்பு இருந்தது. அவர் எனக்கு கொடுத்திருந்த நேரத்திற்கு நான் அவரது அறை முன் காத்திருந்தேன். அவரது அறை திறந்துதான் இருந்தது. ஆனால் அறையில் அவரை காணவில்லை. காரியதரிசகளிடம் கேட்டால் தெரியவில்லை என்று சொல்லி விட்டார்கள். பொதுவாக ஜப்பானியர்கள் கால தாமதமாக வர மாட்டார்கள் மேலும் நேரத்தினை பொன் போல கருதுபவர்கள். சரி என்று ஜந்து நிமிடம் காத்திருந்தேன்..

திடீரென கையில் இரண்டு உணவுப் பொட்டல்ங்களுடன் அவரது அறையினை நோக்கி வந்து கொண்டிருந்தார். அருகில் உள்ள சிற்றுண்டி கடைக்கு அவரே நேரில் சென்று தனக்கு மதிய உணவு வாங்க சென்றிருப்பார் போல. நான் நமது ஊர் நாகரிகப்படி, ஜயன்மீர் தாங்கள் மதிய உணவு அருந்தி முடியுங்கள் நான் 15 நிமிடம் கழித்து வருகிறேன் என்றேன். சட்டென அவர் கோபப்பட்டு அடுத்த 15 நிமிடத்தில் நான் இங்கிருந்து கிளம்பி அடுத்த சந்திப்பிற்கு செல்ல வேண்டும். ஆகையால் எனது உணவு இடைவேளையின் போதே தங்களுக்கு நான் சொல்ல வேண்டிய விடயங்களை சொல்லி விடுகின்றேன். குறித்து கொள்ளுங்கள் என்றார். மிக முக்கியமான ஆராய்ச்சி குறிப்புகளை கொடுத்து விட்டு அவரது அறையினை பூட்டி விட்டு அருகில் உள்ள மெட்ரோ இரயில் நிலையத்திற்கு நடந்து சென்று விட்டார். இத்தனைக்கும் அவருக்கு எங்கள் பல்கலை கழகத்தில் உயர் ரக மகிழ்வுந்து ஒன்று கொடுத்துள்ளார்கள். ஏன் நீங்கள் மகிழ்வுந்தில் செல்லலாமே என்று கேட்டேன். அதற்கு அவர் வாகன நெரிசலில் எமது பகுதியிலிருந்து டோக்கிய நகரின் மைய பகுதிக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாது, மேலும் தனக்கான உடற்பயிற்சியும் செய்தது போல் ஆகிவிடும் என்றார். எங்கள் பல்கலைக் கழகத்திற்கு 5 வளாகங்களும் (campus), அவற்றில் ஏறக்குறைய 40000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கிறார்கள்.

இப்பொழுதுதான் தெரிகிறது ஏன் ஜப்பான் இன்று உலக அளவில் முன்னேறிய நாடாக விளங்குகிறது என்று.

இன்று மதுரை காமராசர் பல்கலைக் கழக துணைவேந்தர் திருமதி கல்யாணி அவர்களுக்கு கொடுத்த தேவையற்ற விளம்பரத்தினை பார்த்தால் நம் தேசம் உருப்பட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது

சமீபகாலமாக தமிழகத்தின் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் என்றே தெரியவில்லை. இவர்களுக்கு எத்தையக தொலைநோக்கு பார்வை இருக்கும் என்று தெரியவில்லை.

நம் தமிழக பல்கலைக் கழகங்களின் எதிர்காலத்தினை நினைத்தாலே வேதனையாக உள்ளது..
பிளமிங்கோ பாடல்

ஸ்பானிஸ் மொழியில் கிடைக்கும் பிளமிங்கோ பாடல்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம்..

பிரிவின் வலியினைச் சொல்லும் நாடோடிகள் வகையினை சார்ந்த பிளமிங்கோ பாடல் ..
https://www.youtube.com/watch?v=Scus9teTdjo

முதலில் ஒரு நிமிடத்திற்கு வரும் கிடார் இசையை கேட்டு பாருங்கள்..

சூரிய மின் சக்தியின் மூலம் இயங்கும் கோரை கிழிக்கும் இயந்திரம்


சூரிய மின் சக்தியின் மூலம் இயந்திர மோட்டார்களை இயக்குவது என்பது மிகச் சவாலான செயல். எங்களது சோலாரிக்ஸ் எனர்ஜி சிஸ்டத்தின் (Solarix Energy Systems, Karur) மூலம் 0.5 மற்றும் 1 கிலோ வாட் குதிரை சக்தி கொண்ட இயந்திர மோட்டாரினை தகுந்த சோலார் பேனல்களை கொண்டு மிக எளிதாக இயக்கும் வண்ணம் வடிவமைத்துள்ளோம். 

இதனை கொண்டு விவசாயம் சார் நுட்பஇயந்திரங்களினை மிக எளிதில் இயக்கலாம்.மேலும் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகிய மரபு சார் எரிபொருட்களை கொண்டு இயக்கும் மோட்டார்களுக்கு எமது SES-Agro series மிகவும் வரப் பிரசாதம் ஆகும். இதன் மூலம் செலவிட்ட மூலதனத் தொகை 16 மாதங்களில் கிடைத்துவிடும். அதற்குப் பிறகு 20 வருடங்களுக்கு இலவசமாக சூரிய மின் சக்தியின் மூலம் இயங்கி உங்களுக்கு லாபத்தினை பன் மடங்கு ஈட்டி தர வல்லது. சூரிய மின் சக்தியானது புகையில்லாமல் இயங்குவதால் சுற்றுப் புற சூழலை பசுமையாக வைத்துக் கொள்ள இதனை விட மாற்று இருக்க முடியாது.

சோலார் மின் சக்தியின் மூலம் கோரை கிழிக்கும் இயந்திரத்தினை இந்த காணொளியில் காணலாம். இந்த வடிவமைப்பினை மற்ற விவசாய இயந்திரங்களின் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தலாம். இவ்வடிவமைப்பினை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.

தயவு செய்து உங்கள் பகுதியில் உள்ள விவசாயி நண்பர்களுக்கு இக்காணொளியினை பகிரவும். 

https://www.youtube.com/watch?v=0aEYp7U_ACM&feature=youtu.be

அவர்களுக்கு ஏதேனும் விளக்கம் தேவைப்படின் எங்களது வல்லுநர் குழுவினை தயங்காமல் தொடர்பு கொள்ளலாம். 

 +91-(0) 9655646464


மேலும் எல்லாவிதமான விவசாயம் சார் இயந்திரங்களுக்கு (Agro based motors: 0.5 and 1 HP) மிகக் குறைந்த விலையில் சூரிய மின் சக்தியின் மூலம் இயங்க கூடிய வகையில் வடிவமைத்து தர காத்திருக்கின்றோம்.


எங்களை தொடர்பு கொள்ள

சோலாரிக்ஸ் எனர்ஜி சிஸ்டம்ஸ்
எண் 8. ஆரோக்யா காம்ப்ளெக்ஸ்
கலைஞர் அறிவாலயம் எதிரில்
கரூர்- 2
தொ.எண்: 9786844679

E-Mail: solarixes@gmail.com
Web: solarixes.com
First announcement :

International Workshop on Impedance Spectroscopy of Energy Materials and Devices (ISSchool-15)

Place: Tokyo University of Science, Japan
Date: 14- 15 July 2015.

In this workshop we provide theoretical (fundamental) and practical hands on experience in Impedance spectroscopy. Impedance Spectroscopy is the powerful and promising analytical tool to investigate the physical and electrochemical characteristic of energy conversion and storage devices. The exclusive program on how to simulate the impedance data and fit with your experimental results will be one of the highlights of this workshop.

This workshop mainly focuses on
a. Photovoltaic solar cells (Perovskite solar cells, organic solar cells, QD and Dye-sensitized solar cells)
b. Batteries
c. Photoelectrochemical Solar Fuel cells (water splitting hydrogen generation and etc)

The sessions will be handled by world renowned faculty members from Spain and Japan in the respective field.

For further details, please visit us

http://www.nanoge.org/ISSchool-J15/index.php

If you have any questions please do not hesitate to contact me
vedichi@gmail.com

Best wishes
Dr Pitchaimuthu Sudhagar
(Conference Chair - ISSchool 15)

(Please share with your research friends)
அம்மா நேர்மைன்னா என்னம்மா?
நேர்மையாகத்தான் வாழ முடியவில்லை. அட நேர்மையோடாவாவது ஒரு நாள் இருப்போமே என எண்ணியிருந்தோம்.அதற்கும் தமிழக அரசு ஆப்பு வைத்து விட்டது. 

கடந்த வாரம் தோக்கியோவில் நடைபெற்ற முழுமதி அறக்கட்டளையின் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள மதிப்பிற்குரிய சகாயம் அய்யா அவர்களை அழைத்திருந்தோம். ஆனால் செத்த பாம்பையே ரூம் போட்டு அடிக்கும் தற்போதைய தமிழக அரசு இந்த நல்லவரையா பேச வெளியே அனுப்பும். அதையும் இதையும் சொல்லி பயணத்திற்கான தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து விட்டது.

ஆனாம் நம் சப்பானிய தமிழ் உறவுகள் சோர்ந்து விடக்கூடாது என்பதற்காக விழாவின் முதல் நாள் இரவு பன்னிரண்டு மணிக்கு தமிழகத்தில் உள்ள முழுமதி நண்பர்களை அழைத்து மிக நெடிய செவ்வி ஒன்றினை சகாயம் ஐயா வழங்கி இருக்கிறார்கள். எமது எல்லா கேள்விகளுக்கும் மிகப் பொறுமையாகவும் தெள்ளத் தெளிவாகவும் பதிலுரைத்தார். எமது அடுத்த பதிவில் இதனை பகிர்கின்றேன்.

மேலும் விழா நிகழ்வன்று அவரது அலைபேசியிலிருந்து நேரடியாகவும் எங்களோடு உரையாடினார்.

திரு. சகாயம் ஐயா அவர்கள் அலைபேசி வழியாக வழங்கிய செவ்வி

https://www.youtube.com/watch?v=bYbGmGDndkw

உங்களின் உரையினை கேட்டபோது எனக்கு இக்குறள் தான் நினைவுக்கு வந்தது.

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

இன்று நம் வானில் கரும் மேகங்கள் சூழ்ந்துள்ளது. நாளைய விடியலில் அவை தூசு போல பறந்தோடும். நீங்கள் இதே சப்பானிய மண்ணில் பெரும் எழுச்சியுரை நிகழ்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் திண்ணம்.

நன்றியும், வணக்கமும்,
பி.சுதாகர்
மாடித்தோட்டங்கள் (Roof top Garden)

ஜப்பானியர் கணக்குப்படி, மாடித்தோட்டம் அமைப்பதன் மூலம் நகரத்தில் உள்ள 50 சதவீதம் கட்டிடங்களை பசுமையாக்கினால் தட்பவெப்ப நிலை 0.1-0.8 செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள் ளதாக கூறுகின்றனர்.

1. இடம் மிக குறைவாக உள்ள நகரவாசிகள் செங்குத்தான தோட்டம் அமைத்தும் பயன்பெறலாம். அதா வது படர்ந்து செல்லக்கூடிய காய்கறி செடிகளையோ அல்லது பூச்செடிகளையோ வளர்க்கலாம்.

2. மாடித் தோட்டங்களில் தக்காளி, வெண்டை, கத்தரி, பாகற்காய், பீன்ஸ், கொத்தமல்லி, புதினா, வெங்காயம், கீரை வகைகள் போன்ற பல காய்கறிகளை வளர்க்கலாம்.

3. பூச்செடிகளான ரோஜா, மல்லிகை, செண்டுமல்லி, சாமந்தி, சம்பங்கி மற்றும் அழகு செடிகளையும் வளர்க்கலாம்.

4. இவைகள் தவிர வாழை, பப்பாளி போன்ற பழ மரங்கள், துளசி, வல்லாரை, கரிசலாங்கண்ணி போன்ற மூலிகை பயிர்களையும் கூடுதலாக மலர் பயிர்களையும் வளர்க்கலாம். -

வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும், திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மாடித்தோட்டம் அமைப்பதற்கான பயிற்சியை அளித்து வருகிறது -





---

Solar powered audio tour guide

ஜப்பானில் உள்ள தோபு உயிரியல் பூங்காவில் (Tobu Zoo, Japan) தற்போது சிறிய ரக சோலார் பேனல் மூலம் இயங்கும் சுற்றுலா தகவல் விளக்க வழிகாட்டிகள் நிறுவப்பட்டுள்ளது (solar powered audio tour guide). சூரிய ஒளி மூலம் இயங்கும் இந்த இயந்திரத்தில் 100 யென் காசைப் (~50 ரூபாய்) போட்டவுடன் இதில் இணைக்கப்பட்டுள்ள ஹெட்போனில் அந்த கருவிக்கு முன்னால் உள்ள உயிரினங்களை பற்றிய தகவல்களை கேட்கலாம். இதன் மூலம் மின்சாரம் சேமிப்பதுடன் நல்ல வருமானமும் கூட.

இதே போன்று நமது ஊரிலும் காசை போட்டுச் சூரிய மின் சக்தியில் இயங்கும் மொபைல் போன் ரீசார்ஜர் நல்ல பயனளிக்கும்.

இவற்றினை பொது மக்கள் புழங்கும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் என வைத்தால் அரசுக்கு நல்ல வருமானமும் வரும்.





Topu Zoo (located in Saitama prefecture), Japan is currently installing the solar powered audio tour guide with 3-5 watts solar panel. This audio tour guide machine is completely operated with sunlight, while inserting 100-yen coin (~ 50 rupees) and draw up a headphone attached to the front of the tool may provide information about the species. Beneficially, this machine saves electricity and yield good income to the zoo.

Similarly, in India the efforts can be taken for installing solar powered mobile phone in public places such as bus stand or bus stop, corporation office, airport and train station.



Sunday, 29 March 2015

My first book chapter

Excited to viewing my first book chapter “Quantum dot-sensitized Solar Cells” (Chapter 8) in Low-cost Nanomaterials Green Energy and Technology 2014, pp 89-136. Green Energy and Technology Series, Springer Publications. Editor Z. Lim and J Wang. 

My warm thanks to my collaborator Dr. Ivan Mora Sero (Universitat Jaume I, Spain) one of the leading researchers in nanostructured photovoltaics (QDSC, ETA and Pervoskite solar cells) for his valuable guidance and contribution. Also I thank the Editors for giving this opportunity.

This chapter contains the low cost and attractive experimental approaches for semiconductor quantum dots-sensitization onto mesoporous metal oxide electrodes. In addition, we have discussed the fundamentals and advanced strategy of pervoskite solar cells. Hope this book chapter is resourceful reference for undergraduate, post-graduate and researchers working in the field of energy conversion materials and semiconductor quantum dot related applications.

I appreciate you if you could refer this book to your librarian and cite in your future articles based on the relevance.


http://link.springer.com/chapter/10.1007/978-1-4471-6473-9_5





சோலார் சுவரொட்டிகள் (Solar Wall Paper)


சோலார் பேனல்கள் என்றாலே மிகப் பெரிய பலகை அளவிற்கு இருக்கும் மேலும் கண்ணாடி சட்டத்தால் தண்ணீர் புகாமல் இருக மூடப்பட்டிருக்கும் (tight sealing) என நாம் எல்லோரும் அறிந்ததே. இவை சிலிக்கான் என்னும் குறை கடத்தி (semiconductor) தனிமத்தால் செய்யப்படுபவை. மிக அதிகமான ஆற்றல் திறன் (photoconversion efficiency) உடையது, எனினும் இதனை சூரிய ஒளியில் நேரடியாக படும்படி குறிப்பிட்ட கோணத்தில் (tilting angle) வைக்க வேண்டும் அப்பொழுதுதான் அதிகமான மின் திறனை பெற முடியும். ஆகையால் இவ்வகையான முதல் தலைமுறை சூரிய மின்கலங்களை (First generation Solar Cells) இயக்குவதில் சிறு தயக்கங்கள் உள்ளது.
ஆனால் இவற்றிற்கு மாற்றாக மிகவும் எடை குறைந்த நெகிழும் (flexible) தன்மையுடைய மென் ஏடுகளாக (thin films) தயாரிக்கப்படும் சோலார் பேனல்கள் வீட்டிற்குள்ளும் பொருத்திக் கொள்ளலாம். இவை இரண்டாம் தலைமுறை சோலார் மின்கலங்கள் (second generation solar cells) ஆகும். இத்தையக பிரிவில் கரிம மற்றும் கனிம வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சமீபத்தில் பின்லாந்தினை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் (VTT Research Center, Finland) வீட்டு சுவர்களில் சுவரொட்டிகளாக ஒட்டிக் கொள்ளும் வகையில் கரிம பொருட்களால் ஆன நெகிழி சூரிய மின்கலங்களை ( Flexible Solar Cells) தயாரித்துள்ளனர்.
இந்த புதிய வகை சோலார் சுவரொட்டிகள் மூலம் இனி வரும் காலங்களில் நமது இல்ல வரவேற்பறை மற்றும் வீட்டின் முற்றத்தில் உள்ள சுவர்களில் இதனை அலங்கார சுவரொட்டிகளாக புதுப்பித்துக் கொள்ளலாம். குறைந்தபட்சம் இதில் இருந்து பெறப்படும் மின்சக்தியினை கொண்டு நமது வீட்டின் உட்பகுதியில் எல் ஈ டி (LED) விளக்குகளை எரிக்க நிச்சயம் உதவும். இதன் விலையினை மேலும் குறைக்க தற்போது சோலார்மின்கல ஆராய்ச்சியில் அதிக கவனத்தினை பெற்றுள்ள ப்பெரோவ்ஸ்கைட்டு கள் எனப்படும் தனிமத்தில் செய்யப்பட்டால் இதன் தயாரிப்பு செலவு மூன்றில் ஒரு பங்கே பிடிக்கும்.
ஒரு வேளை நம்ம ஊரு அரசியல்கட்சிகளின் வண்ண சுவரொட்டிகளுக்கு பதிலாக சோலார் சுவரொட்டிகளாக இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்க்கவே சுவாரசியமாக உள்ளது.



Saturday, 28 March 2015

அவந்திக்கு வந்த முதல் கடிதம்  (The first letter to Avanthika)

தூர தேசத்தில் இருக்கும் நம் பிரியமானவர்களுக்கு நம் அன்பினை வெளிப்படுத்தும் விதமாய் எழுதும் கடிதங்கள் இன்று மெதுவாக வழக்கில் ஒழிந்து வருகின்றன. என்னதான் மின்னஞ்சல், சாட்டிங் மெசெஜென்சர்கள் என தொலை தொடர்பு விடயங்களில் புரட்சி வந்து விட்டாலும் நமக்கு வந்த கடிதங்களை நீண்ட இடைவெளிக்கு பிறகும் எடுத்துப் படிக்கும் போது ஏற்படும் ஆனந்தம் வெறெந்த ஒன்றிலும் கிடைக்காது.

சமீபத்திய இங்கிலாந்து பயணத்தின் போது  பேராசிரியர் செந்தில் அண்ணா வீட்டில்தான் தங்கி இருந்தேன். அண்ணாவின் புதல்வி சர்வதா (ஆறு வயது) செல்லக்குட்டி நான் வருவேன் என முன் கூட்டி தெரிந்ததால் அவந்திக்காவிற்கு பொம்மைகளும், அவளுக்கென்று பிரத்யோகமான கடிதமும் தயார் செய்து இருந்தார். அங்கிள் நான் அவந்திக்கு ஒரு லெட்டர் எழுதி இருக்கேன் நீங்க கண்டிப்பா இத அவங்க கிட்ட கொடுத்திடுங்கன்னு சொன்னவுடன் ஆச்சரியத்தில் மலைத்துப் போனேன். ஆறு வயது குழந்தைக்கு கடிதம் எழுதும் முறையினை யார் சொல்லி இருப்பார்கள். ஒரு வேளை அண்ணி சொல்லி இருப்பார்கள் என கேட்டபோது அவருடைய பள்ளியில் பயிற்றுவித்து இருக்கிறார்கள் என சொன்னார்.

 Sarvath's letter to Avanthika
 Sarvatha made paper camera and gifted to Avanthika
  Saru specially designed the paper camera and gifted Avanthika
  Saru's letter to Avanthika

 Saru's specially made paper crown for me...

என் பால்ய நினைவுகளில், என் கிராமத்தின் போஸ்ட் ஆபீஸ் எல்லோரின் கவனத்தினையும் மதிப்பினையும் பெற்ற ஒரு இடம் ஆகும். முதன் முறையாக 15 பைசா கார்டு வாங்க அங்கு பயந்து பயந்துதான்  போனேன். என் பால்யம் முழுவதும் தபால் கடிதங்கள் எனக்கு பெரும் கிலேசத்தினை உண்டாக்கியவாறே இருந்தது. உறவினர்களிடம் இருந்து வீட்டிற்கு வரும் எல்லா கடிதங்களையும் அம்மாவிடம் இருந்து வாங்கி படித்து பார்ப்பேன். என் பெயரை சொல்லி கேட்டதாக எழுதி இருந்தால் அவர்கள் மீது பெரும் நெருக்கமும் அன்யோன்யமும் தானாய் மனதில் முளைக்க ஆரம்பித்தன. எங்கள் கிராமத்துக்கு வரும் தபால்களை கோவிந்து மாமாதான் சைக்கிளில் சுமந்த வண்ணம் எங்கள் கிராமத்தினை சுற்றியுள்ள எல்லா பகுதிக்கும் எடுத்துச் சென்று கொடுப்பார். பிறகு ஒருவழியாய் கடிதம் எழுதும் முறையினை எனது இடைநிலைப்பள்ளியில் பத்து வயதில் கற்றுக் கொண்டேன். அப்போது நானும் எனது நண்பன் விஜியும் சேர்ந்து தூர்தர்சன் தொலைகாட்சியில் வந்து கொண்டு இருந்த எதிரொலி நிகழ்ச்சிக்கும், வார மலர் குறுக்கெழுத்து போட்டிக்கும் கூட்டாக கடிதங்கள் எழுதுவோம். மற்றபடி என் மாணவ பருவத்தில் வேறெந்த கடிதங்களையும் எழுதியதில்லை (பொங்கல் வாழ்த்து அட்டைகள் நீங்கலாக). ஆதலால் சர்வதாவின் கடிதம் எனக்குள் பெரும் ஆச்சரியங்களையும், என் பால்யத்தின் நினைவுகளையும் கிளறி விட்டது.

இந்த உந்துதலே அடுத்த நாள் சாருவின் பள்ளிக்கு செல்ல வேண்டும் என பெரும் அவாவினை உண்டாக்கியது. அடுத்த நாள் அண்ணா, சருவை பள்ளிக்கு அழைத்து செல்லும் போது நானும் அவர்களோடு இணைந்து கொண்டேன். இதில் சர்வதா  குட்டிக்கு மிகுந்த மகிழ்ச்சி. பள்ளிக்கு அருகாமையில் சென்றதும் தனது பள்ளியின் (பால்மவுத் நர்சரி பள்ளி) இடங்களை குதூகலத்துடன் சுட்டிக் காட்டி விட்டு தனது வகுப்பறக்கு வருமாறு வேண்டினார். சமீபத்தில் அவந்தியின் சப்பானிய நர்சரி பள்ளியினை தவிர வேறெங்கும் சென்று பார்க்க வாய்ப்பு அமையவில்லை ஆதலால் நானும் மிக்க மகிழ்வுடன் சருவின் வகுப்பறைக்குள் நுழைந்தேன். சற்றேறக்குறைய 50 வயது நிரம்பிய ஆங்கிலேயப் பெண்மணி எங்களை வாருங்கள் என முகமன் கூறி வரவேற்றார். செந்தில் அண்ணா, நான் சப்பானில் இருந்து வருவதாக சொன்னவுடன் அவர் புன்னகைதுக் கொண்டே என்னுடன் பேசினார். தனது மகளும் சப்பானில் ஒசாகா பகுதியில் பணி புரிவதகாவும் , தனது சமீபத்திய சப்பான் பயணத்தினை பற்றியும், சுசி மீன் (sushi fish) வகையினை சிலாகித்து உண்டதாகவும் சொன்னார்பிறகு நான் வகுப்பறையினை சுற்றிப் பார்த்து விட்டு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என அவரிடம் விண்ணப்பித்தேன். அவர் மகிழ்வுடன் எடுத்துக் கொள்ளுங்கள் என அனுமதித்தார். சர்வதா  குட்டி தனது ஓவியங்களையும், வண்ண தாள்களில் தான் செய்த பொம்மை ஓவியங்களை என்னிடம் காட்டினார். பிறகு முட்டையின் மீது தான் வரைந்த நுண் ஓவியங்களையும் காட்டினார். வகுப்பறை முழுவதும் சுற்றிப் பார்த்த பொழுது அவர்களின் கற்பனைத் படைப்பாற்றல் திறன் நன்கு வெளிப்பட்டது. இங்குள்ள ஆரம்பப் பள்ளிகள், இந்திய நர்சரி பள்ளிகளைப் போல் குழந்தைகளை மனப்பாடம் செய்யவும், செக்கு மாடுகளைப் போல் கணித சூத்திரங்களை மண்டையில் போட்டு உடைத்துக் கொள்ளவும், குழந்தைகளை வதைப்பதில்லை என அறிந்து கொண்டேன். 

 Sarvatha kutti explaining her painting, Falmouth Nursary School
 Falmouth Nursery School
 Sarvatha kutti in her class, Falmouth Nursary School
Class room, Elementary Level 1, Falmouth Nursary School

பிறகு வகுப்பு ஆசிரியருக்கு நன்றியினை சொல்லி விட்டு பள்ளியின் பின் பகுதியில் உள்ள தோட்ட பகுதிக்கு சென்றேன். பள்ளியில் ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு செடிகள் கொடுக்கிறார்கள் அவற்றில் ஒன்றினை பள்ளியிலும் மற்ற ஒன்றினை வீட்டிலும் வளர்க்க அறிவுறுத்துகிறார்கள். தற்போது குளிர் காலமாக இருப்பதால் குறைந்த செடிகளையே காண முடிந்தது. மேலும் ஒவ்வொரு வகுப்பிற்கென செல்ல பிராணிகளாய் வளர்க்க கோழி, முயல் குட்டி போன்றவைகளையும் கொடுக்கிறார்கள். இது அக்குழந்தைகளிடையே குழுவாய் இயங்கும் மனோநிலையினை செம்மைப்படுத்துகிறது.


 Kids garden
 Play ground
 Pet animals
 Kids garden


தோட்டத்தின் மூலையில் சிறிய மரக்குச்சியில் நடப்பட்டிருந்த சிலுவை ஒன்று எனது கவனத்தினை ஈர்த்ததுகுழந்தைகளிலின் செல்ல பிராணிகளில் ஒன்றான வொங்கி (wonky) என்னும் முயல் குட்டி இறந்த பிறகு அவ்விடத்தில் புதைத்திருப்பதாக கூறினார்கள். ஒன்றுதான் அக்கணம் புரிந்தது அறிவியல், கணிதம் இவை எல்லாவற்றையும் விட சிறார்களுக்கு நாம் போதிக்க வேண்டியது அன்பு என்னும் சமதர்மமே என்பதை ஆங்கிலேயர்கள் மிகச்சரியாக புரிந்து கொண்டுள்ளார்கள்.




இருபது வருடங்களுக்கு முன்பு இதே கல்வி முறை நம் ஊரில் இருந்தது. தற்போது புற்றீசல் என முளைத்துள்ள நர்சரி பள்ளிகள் இதனை காலில் போட்டு மிதித்து விட்டது. பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு நம் குழந்தைகளை வதைக்கிறார்கள். இதில் நம் பெற்றோரின் பங்குதான் அதிகம். எல்லா அரசு ஆரம்பப்பள்ளிகளின் உட்கட்டமைப்பினை நர்சரி பள்ளிகளுக்கு கொடுக்கும் பணத்தில் பாதியினை கொடுத்தாலே மிக அருமையாக மாற்றி விட முடியும். அது என்னவோ இன்று வரை அரசுதான் எல்லா ஆணியையும் பிடுங்க வேண்டும் என பொது சனங்கள் தட்டையாகவெ யோசிக்கிறார்கள்.

சர்வதாவின் கடிதம்  நம் சம காலத்திய பள்ளிக் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியதை மட்டுமல்ல நாம் நம் குழந்தைகளின் மீது புகழின் பெயரால் நடத்தும் பெரும் போரை நிறுத்தசொல்வதாகவே தோன்றுகிறது.

அன்பை விடவும் மேலோங்கியதாய் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வெறொன்றும் இல்லை என எண்ணுகிறேன்.

சர்வதா குட்டிக்கு என் அன்பு முத்தங்கள்..